க்யூவில் இந்திய நிறுவனங்கள்.. அமெரிக்காவில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான காப்புரிமை பெற

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு : அமெரிக்காவில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான காப்புரிமை பெற இந்தியா நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பதிவு செய்துள்ளன. குறிப்பாக விப்ரோ, ஹெச்.சி.எல், டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்‌ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கல் முன்னிலை வகித்து வருகின்றன.

வெல்பன் ஸ்டீல், மஹிந்திரா ரைஸ், மற்றும் பாரத் பெட் ரோலியம் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களும் இந்த காப்புரிமை பதிவில் முன்னுரிமை வகித்து வருகின்றன.

மேல்கண்ட இந்த நிறுவனங்களோடு சேர்ந்து கடந்த 2015 -2018 வரையிலான காலகட்டத்தில் மட்டும் மொத்தம் 4600 விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டு உள்ளன. அமெரிக்காவில் தொடர்ந்து இந்த காப்புரிமைகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2017 - 2018-ல் மட்டும் பெறப்பட்ட மொத்த காப்புரிமை பதிவில் 65 சதவிகிதம் தொழில்னுட்பம் சார்ந்தவையே.

தங்க முதலீட்டில் 17% நஷ்டம் கண்ட பிரதமர் Narendra Modi..! சொத்து மதிப்பு 52% அதிகரிப்பு..! தங்க முதலீட்டில் 17% நஷ்டம் கண்ட பிரதமர் Narendra Modi..! சொத்து மதிப்பு 52% அதிகரிப்பு..!

இன்னும் அதிகரிக்கும்

இன்னும் அதிகரிக்கும்

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இந்த 65 சதவிகிதம் கூட நிலையானது தற்போது இது இன்னும் அதிகளவு அதிகரித்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதுபோன்ற தொழில் நுட்பம் சார்ந்த காப்புரிமை பதிவில், செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யூரிட்டி இண்டர்னெட், ஆப் திங்க்ஸ், கிளெவ்டு கம்பியூட்டர்ஸ் உள்ளிட்டவை 50 சதவிகித இடம் பெற்றுள்ளன. சரிங்க இதெல்லாம் சொன்னீங்க ஆனா காப்புரிமைன்ன என்ன? அத பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கன்னு சொல்றீங்களா? அப்படின்ன இன்னும் கீழ படிங்க..

அறிவார்ந்த சொத்துன்னா என்ன?

அறிவார்ந்த சொத்துன்னா என்ன?

ஒரு நபராலோ அல்லது நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள், அது புத்தகமோ, இசையோ ஏன் பாடலோ எதுவாகினும், ஏன் ஒவியங்கள் கூட, கணினி மென்பொருள்கள், கட்டிட வரை படங்கள் உள்ளிட்ட எதுவாயினும் அதை அவர்களின் உரிமையாக கருதலாம். ஏனெனில் அது அவர்களின் சிந்தனையாலும் உழைப்பாலும் உருவானதே. இது அவர்களின் அறிவார்ந்த சொத்து (Intelectual Property) என அழைக்கப்படுகிறது.

எதற்கு காப்புரிமை?

எதற்கு காப்புரிமை?

அறிவுசார் சொத்துரிமையில் காப்புரிமை, வடிவமைப்பு (Design), வணிகக் குறியீடு(Trademark) மற்றும் புவிசார் குறியீடு (Geographical Identification) எனப் பல துறைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு தனிநபர் அல்லது ஒரு குழுவின் அறிவுசார்ந்த கண்டுபிடிப்புகளையோ அல்லது ஒருபகுதியில் மட்டும் சிறப்பாக இருக்கும் ஒரு விஷயத்தையோ பதிவு செய்ய உதவுகிறவை. ஒரு கண்டுபிடிப்பை அதைக் கண்டுபிடித்தவரே உரிமை கொண்டாடவும், அதை யாரும் போலியாகத் தயாரிக்காமல் இருக்கவும் காப்புரிமை பதிவு உதவுகிறது.

காப்புரிமையின் வருமானங்கள்

காப்புரிமையின் வருமானங்கள்

காப்புரிமை என்பது ஒருவர் ஒரு பொருளை உருவாக்க அனைத்து செலவுகளையும் செய்வார். அதோடு அந்த பொருளின் மூலம் வரும் வருமானத்திலும் பங்கு கொள்வார்கள். உதராணமாக விப்ரோ நிறுவனம் ஒரு மென்பொருளை உருவாக்குவதாக கொள்வோம். அதை தயாரிக்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து நிறுவனம் அமைத்து அதை விற்பனை செய்யும். இதோடு உலகம் முழுவதும் அதானல் அந்த வேலையை செய்ய முடியாத பட்சத்தில் யாரேனும் ஒருவர் இனையதளத்தில் அந்த நிறுவனத்தின் சாப்ட்வேரை டவுன்லோடு செய்தால் அதற்கான பங்கு அவர்களுக்கு போய்ச் சேரும்.

காப்புரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும்

காப்புரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும்

இதுவே இசைத்துறையில் ஒரு பாடலை டவுன்லோடு செய்யும்போதும் வருமானம், அதோடு அந்த பாடலை ரீமேக் செய்வதற்கும் வருமானம். ஆக இந்த காப்புரிமை பதிவில் துறைக்கு ஏற்ப பலவித வருமானம் உண்டு. குறிப்பாக ஒரு தொலைக் காட்சியிலோ அல்லது வானொலியிலோ ஒரு பாடலை போடும்போது அந்த பாடலின் உரிமையாளரிடம் அனுமதி பெற்றிருப்பதுடன், அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படும்.

 பயன்பாட்டளருக்கும் வருமானம்

பயன்பாட்டளருக்கும் வருமானம்

அதே சமயம் நிறுவனத்திற்கோ அல்லது தொலைக்காட்சி நிறுவனத்திற்கோ விளம்பரங்கள் வழி வருமானமும் பெருகுகிறது. ஒருவர் படைப்பை பயன்படுத்தி இவர்கள் பணம் ஈட்டும்போது அந்தப் படைப்பாளிக்கு அதில் லாபத்தில் பங்கு தருவதென்பது நியாயமாகும்..

காப்புரிமை மீறல்கள்

காப்புரிமை மீறல்கள்

காப்புரிமை மீறல்கள் இரண்டு வகைப்படும். ஒன்று கள்ளப்பதிப்பு மற்றது அனுமதியற்ற பயன்பாடு. ஆனால் பொதுப்படையாக சொல்வதென்றால் ஒரு படைப்பு அல்லது பாடல் அதை உருவாக்கியவருக்கு ஊதியம் தராமல் பயன்படுத்தப்படுமானால் அல்லது விற்பனை செய்யப்படுமானால் அது காப்புரிமை மீறல் செயலாகும். அதே பாடலை உருவாக்கியவருக்கு ஏதும் வருமானமும் இல்லாமல் அனுமதியும் இல்லாமல் சிடி, டிவிடி போடப்படுமானால் அது கள்ளப்பதிப்புகளாகும்.

இதனால் ஏற்படும் பாதிப்புகள்

இதனால் ஏற்படும் பாதிப்புகள்

இதனால் ஒரு பொருளுக்கு காப்புரிமை பெற்றவரும், அதை முறையாக விற்க ஏஜென்ட் ஆக இருப்பவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் முறையான லாபமும் கிடைப்பதில்லை. கிடைக்க வேண்டிய வருமானமும் கிடைப்பதில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro, TCS, RIL among top patent filers in US

Wipro, TCS, HCL, Infosys, Reliance Industries (RIL), Welspun, steel, Mahindra rise, and bharat petroleum top the list of india domiciled companiescreating intellectual property assets in us.
Story first published: Monday, April 29, 2019, 13:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X