தீவிரவாத தாக்குதலில் இறந்த கணவர், மகளுக்காக போராடிய தாய், இன்று Yes Bank இயக்குநராக வந்த மகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: yes bank நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் shagun kapur gogia கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சகுன் கபூர் கொகியா non-executive and non-independent இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஏப்ரல் 26, 2019-ல் இருந்தே இவர் இயக்குநர் குழுவில் அமர்த்தப்பட்டிருக்கிறாராம்.

 

தற்போது யெஸ் பேங்க் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஆண்டுக் கூட்டத்தில் இந்த விஷயத்தை தெரிவித்து அனுமதி வாங்க வேண்டி இருக்கிறதாம். இதை அதிகாரபூர்வமாக, கந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26, 2019) அறிவித்திருக்கிறது யெஸ் பேங்க் நிறுவனம்.

தீவிரவாத தாக்குதலில் இறந்த கணவர், மகளுக்காக போராடிய தாய், இன்று Yes Bank இயக்குநராக வந்த மகள்..!

சமீபத்தில் தான் யெஸ் பேங்க் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக பதவியில் இருக்கும் ரவ்னீத் கில் யர் மட்டக் குழுவில் இருக்கும் அதிகாரிகளை மாற்றி ஒரு நல்ல தலைமைக் குழுவை அமைக்கப் போவதாகச் சொல்லி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது யெஸ் பேங்க் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் சகுன் கபூர் கோகியா, யெஸ் பேங்க் நிறுவனத்தின் முன்னாள் துணை நிறுவனரான அசோக் கபூரின் மகள். நீண்ட காலமாக அசோக் கபூரின் மனைவி, மது கபூர் யெஸ் பேங்க் நிறுவனத்தின் தங்கள் கணவருக்கான இடத்தை தங்கள் குடும்பத்தினருக்கு கொடுக்கச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார். பல கட்ட பேச்சு வார்த்தைகள், பிரச்னைகளுக்குப் பிறகு தற்போது சகுன் கபூர் கோகியாவை இயக்குநர் குழுவில் சேர்த்துக் கொள்ள அனுமதித்திருக்கிறார் ரானா கபூர்.

தீவிரவாத தாக்குதலில் இறந்த கணவர், மகளுக்காக போராடிய தாய், இன்று Yes Bank இயக்குநராக வந்த மகள்..!

சகுன் கபூரும் ஏதோ பரம்பரச் சொத்தில் பங்கு கேட்பவர் மட்டுமல்ல, தனியார் வங்கிகள் துறையில் ஒரு நல்ல பணி அனுபவம் உள்ளவர் தானாம். யெஸ் பேங்க் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம் பிடிப்பதற்கு முன் ராபோ ஃபைனான்ஸ் (Rabo finance) நிறுவனத்தின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் (Merger and Acquisitions) பிரிவில் பணியாற்றி இருக்கிறார். அதே நிறுவனத்தின் சில ஆண்டுகள் கார்ப்பரேட் ஃபைனான்ஸ் பிரிவிலும் பணியாற்றி இருக்கிறாராம்.

 

இதெல்லாம் போக இன்றைய டிரெண்டான பிரைவேட் ஈக்விட்டி பிளேஸ்மெண்ட்களிலும் வேலை பார்த்திருக்கிறாராம். சகுன் கபூர் கோகியா ஐடி, பிபிஓ மற்றும் பயோடெக் போன்ற துறைகளுக்கு பிரைவேட் ஈக்விட்டி பிளேஸ்மெண்ட் செய்திருக்கிறார். ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு தேவையான நிதியை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யத் தயாராக இருக்கும் நிறுவனங்கள் மற்று தனி நபர்களிடம் இருந்து திரட்டிக் கொடுப்பது தான் பிரைவேட் ஈக்விட்டி பிளேஸ்மெண்ட்.

அனுபவசாலி

அவ்வளவு ஏன் சகுன் கபூர் கோகியா கூட, டுஸ்கான் வெஞ்சர் பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில், ஒரு நிறுவனத்தை நிறுவி நிர்வாக இயக்குநராக நடத்தி வருகிறாராம். கடந்த 20 வருடங்களுக்கு மேல் நிதித் துறையிலும், பொது நிர்வாகத் துறையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களை நிர்வகிப்பதிலும் நல்ல பணி அனுபவம் பெற்றவராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: yes bank director
English summary

yes bank appoints shagun kapur gogia as a non independent and non executive director

yes bank appoints shagun kapur gogia as a non independent and non executive director
Story first published: Monday, April 29, 2019, 12:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X