இனி Medi Claim பிரீமியம் கூட கொடுக்க முடியாது..! கைவிரித்த Jet Airways..!தவிப்பில் ஊழியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Jet Airways நிறுவனத்தின் நிதி நெருக்கடி பற்றி புதிதாக ஒன்றும் சொல்லத் தேவை இல்லை. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக போராடி இப்போது நிறுவனத்தையே நடத்த முடியாமல் கடையை பூட்டி விட்டு சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு பண நெருக்கடி.

 

ஒரு பக்கம் கடன் காரர்கள் என்றால், இன்னொரு பக்கம் மாதச் சம்பளத்துக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்கத்தினர். இதில் மாதம் சில ஆயிரம் கமிஷனுக்கு வேலை பார்க்கும் ஆயிரக் கணக்கான ஏழைகளும் அடக்கம்.

இப்போது அவர்களின் நிதி நெருக்கடிக்கு சான்றாக "எங்களால் ஊழிய்ர்களுக்கான மெடி க்ளெய்ம் பாலிசி பிரீமியங்களைச் செலுத்த முடியவில்லை. எனவே இனி ஊழியர்கள், தங்களுக்கான மெடி க்ளெய்ம் பாலிசிகளுக்கான பிரீமியத்தை தாங்களே செலுத்திக் கொள்ளவும்" எனச் சொல்லி இருக்கிறார்கள் Jet Airways நிர்வாகத்தினர்.

ஒரு தவணையை தாமதமாகச் செலுத்தினாலும் Risk Premium என்கிற பெயரில் கூடுதல் வட்டி..! அதிரடியில் SBI..!

நிர்வாகம்

நிர்வாகம்

இதை Jet Airways நிறுவன முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி ராகுல் தனெஜாவும் Jet Airways ஊழியர்களுக்கு கடிதத்தில் இந்த விஷயத்தை தெரிவித்திருக்கிறாராம். அந்தக் கடிதத்தில் "Jet Airways நிறுவனத்துக்கு உடனடியாக வங்கிகளிடம் இருந்தோ அல்லது வேறு சில முதலீட்டாளர்களிடம் இருந்தோ உடனடியாக நிதி வரவில்லை என்றால், Jet Airways நிறுவனத்தினால், தங்களின் ஊழியர்களுக்கான குரூப் மெடி க்ளெய்ம் பாலிசிகளுக்கான பிரீமியத் தொகையைக் கூட செலுத்த முடியாது" என உருக்கமாக எழுதி இருக்கிறாராம்.

 2019 - 20-க்கு இல்லை

2019 - 20-க்கு இல்லை

Jet Airways நிறுவன ஊழியர்கள் அனைவருக்குமே ஒரு ஒட்டு மொத்த குரூப் மெடி க்ளெய்ம் பாலிசி எடுத்திருக்கிறார்கள். அதற்கான காலாவதி தேதி ஏப்ரல் 30, 2019. ஆக மீண்டும் Jet Airways ஊழியர்களுக்கான மெடி க்ளெய்ம் பாலிசிகளை காலாவதி ஆகாமல் வைத்திருக்க 2019 - 20 நிதி ஆண்டுக்கான மெடி க்ளெய்ம் பாலிசிக்கான பிரீமியத் தொகையினைக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கவில்லை என்றால் இன்றுடன் Jet Airways குழுமத்தின் மெடி க்ளெய்ம் பாலிசிகள் காலாவதி ஆகிவிடும் என ஊழியர்கள் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். சமீபத்தில் தான் ஒரு Jet Airways ஊழியர் ஒருவர், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

 சப்பை கட்டு
 

சப்பை கட்டு

இத்தனை நடந்த பிறகும், Jet Airways நிறுவனத்தின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி ராகுல் தனெஜா "இப்போது வரை எஸ்பிஐ உடனும், மற்ற முதலீட்டாளர்களுடனும் Jet Airways நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. கூடிய விரைவில் நம் நிறுவனத்துக்கான நிதி கிடைக்கும் என நம்புகிறோம். இது தொடர்பாக ஒரு உறுதியான தெளிவான முடிவுகள் கிடைத்ததும் அனைத்து Jet Airways ஊழியர்களுக்கும் தெரியப்படுத்துகிறோம்" என மீண்டும் பழைய பஞ்சாக்கத்தைப் பாடி இருக்கிறார்கள்.

 யார் எல்லாம் பார்க்கிறார்கள்

யார் எல்லாம் பார்க்கிறார்கள்

இப்போது வரை Jet Airways நிறுவனத்தின் Private equity firm TPG Capital, Indigo Partners, National Investment and Infrastructure Fund (NIIF) and Etihad Airways போன்றவர்கள் Jet Airways நிறுவனத்தின் முதலீடு செய்ய பேச்சு வார்த்தை நடத்துவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதற்கு மத்தியில் ஜேஸன் அன்ஸ்வொர்த் என்கிற பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு பெரும் பகுதி பங்கை வாங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

jet airways is not able to pay their employees medi claim policy premium for 2019 - 20

jet airways is not able to pay their employees medi claim policy premium for 2019 - 20
Story first published: Tuesday, April 30, 2019, 15:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X