கோயமுத்தூர்: முருகப்பா குழுமத்தை சேர்ந்த சாந்தி கியர்ஸ் நிறுவனம் நான்காவது காலாண்டில் நிகரலாபம் 6.01 கோடி லாபமாக ஈட்டியுள்ளது. இதுவே இதற்கு முந்தைய நிதியாண்டில் 9.62 கோடியாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரி கட்டுவதற்கு முன்பு இதன் நிகர லாபம் 7.7 கோடி ரூபாயாகும். இதுவே இதற்கு முந்தைய ஆண்டு 7.3 கோடி ரூபாயாகும். கடந்த நான்காவது காலாண்டில் வருவாய் 10 சதவிகிதம் அதிகரித்து 60.1 கோடி ரூபாயாகும்.
இதுவே கடந்த முழு நிதியாண்டில் நிகர லாபம் 33.35 கோடி ரூபாயாகும். இதுவே கடந்த 2017 - 2018-ம் நிதியாண்டில் இதன் நிகர லாபம் 28.58 கோடி ரூபாயாகும். இதுவே 2018 - 2019-ம் நிதியாண்டில் வருவாய் 13 சதவிகிதம் அதிகரித்து 242.9 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மொத்த டிவிடெண்ட் ரூ.6
மேலும் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு ஒட்டுமொத்த அளவில் பங்கு ஒன்றுக்கு 6 ரூபாய் டிவிடெண்ட் எனவும் அறிவித்துள்ளது. இதில் இடைக்கால டிவிடெண்டும் சேர்த்து மொத்தம் 6 ரூபாயாகும். மேலும் வருவாய் வளர்ச்சி லாபம் ஈட்டல் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வந்ததாலேயே இந்த லாபத்தை அதிகரிக்க முடிந்ததாக சாந்தி கியர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
படிப்படியாய் அதிகரித்த லாபம்
இதுவே டிசம்பர் காலாண்டில் நிகரலாபம் 9.84 கோடி ரூபாயாகும். இது கடந்த டிசம்பர் 2017வுடன் ஒப்பிடும்போது 45.99 சதவிகிதம் அதிகரித்துள்ளது கவனிக்கதக்கது. இதுவே கடந்த் டிசம்பர் 2017ல் 6.74 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.
அதிகரித்துள்ள ஆர்டர் புக்
மேலும் இந்த நிறுவனத்தின் நிலுவையிலுள்ள ஆர்டர்புக் கடந்த மார்ச்2019 காலத்தில் 168 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் இந்த நிலுவையின் மதிப்பு 130 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.
வாடிக்கையாளர்களை அதிகரிக்க திட்டம்
மேலும் இது குறித்து சாந்தி கியர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதோடு, வியாபாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் தரம், தரமான சேவை, மிகவும் தொலைக்கு பார்வையோடு உள்ள மேம்பட்ட தொழில் நுட்பங்கள் உள்ளிட்டவையே பயன் படுத்த உள்ளதாம் இந்த சாந்தி கியர்ஸ்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications