சாப்ட்வேர் கோடிங்கை திருடிட்டாங்க - டிசிஎஸ்சின் மாஜி வாடிக்கையாளரான அமெரிக்காவின் சிஎஸ்சி வழக்கு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் மீது அமெரிக்காவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் கார்ப் (CSC) நிறுவனம் வர்த்தக ரகசிய தகவல்களை திருடியதாக குற்றம் சுமத்தி வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Tata Consultancy Services (TCS) உலகின் மிகவும் பலமுள்ள தகவல் தொழில்நுட்ப பிராண்டாக மதிப்பிடப்பட்டுள்ளது. பரிச்சயம், விசுவாசம் , ஊழியர்களின் திருப்தி, தொழில் முன்னேற்ற ஆக்க முயற்சி, சந்தைபடுத்துதலில் செய்யப்படும் முதலீடு , வாடிக்கையாளர் கவனம் மற்றும் நிறுவனத்தின் புகழ் போன்ற பல அளவுகோல்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதில் 78.8 புள்ளிகளுடன், ஏஏ+ தரநிர்ணயித்துடன் மிகவும் பலமுள்ள தகவல் தொழில்நுட்ப பிராண்டாக டிசிஎஸ் உருவெடுத்துள்ளது.

சாப்ட்வேர் கோடிங்கை திருடிட்டாங்க - டிசிஎஸ்சின் மாஜி வாடிக்கையாளரான அமெரிக்காவின் சிஎஸ்சி வழக்கு

பெயர் புகழ் ஒரு பக்கம் வந்து கொண்டிருந்தாலும் வழக்கில் சிக்குவதும் டிசிஎஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாக உள்ளது. தங்களுடைய முன்னாள் ஊழியர்கள் மூலமாக மென்பொருள் தயாரிப்பதற்கான கோடிங்கை திருடி ட்ரான்ஸ் அமெரிக்கா நிறுவனத்திற்கு சேவை வழங்கியதாக கம்ப்யூட்டர் சயின்ஸ் கார்ப் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

அதிரடியாய் களத்தில் இறங்கிய Amazon Pay.. P2P சேவையுடன் புதிய வாலட்டும் உண்டு

டிரான்ஸ் அமெரிக்காவின் துணை நிறுவனமான மணி சர்வீசஸ் நிறுவனத்திற்கு சிஎஸ்சிதான் சாப்ட்வேர் சேவை வழங்கி வந்தது. இந்த நிலையில்

டிசிஎஸ் நிறுவனம் சமீபத்தில் டிரான்ஸ் அமெரிக்கா என்ற நிறுவனத்திடமிருந்து 200 கோடி டாலர் மதிப்பிலான இன்சூரன்ஸ் சாப்ட்வேர் சேவை ஆர்டரை பெற்றது இதுவே சிஎஸ்சி நிறுவனம் வழக்கு தொடர காரணமாக அமைந்துள்ளது.

சிஎஸ்சி நிறுவனம் டிரான்ஸ் அமெரிக்காவிற்காக உருவாக்கிய மென்பொருள் பிரிவில் பணிபுரிந்த முக்கிய ஊழியர்களையும் டிசிஎஸ் பணிக்கு எடுத்துள்ளது. இதனையடுத்து சிஎஸ்சியின் முன்னாள் பணியாளர்கள் மூலம் தங்களது இன்சூரன்ஸ் மென்பொருள் தயாரிப்பின் கோடிங்கை திருடி டிரான்ஸ் அமெரிக்க நிறுவனத்திற்கு டிசிஎஸ் மென்பொருள் சேவை வழங்கி உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சாப்ட்வேர் கோடிங்கை திருடிட்டாங்க - டிசிஎஸ்சின் மாஜி வாடிக்கையாளரான அமெரிக்காவின் சிஎஸ்சி வழக்கு

டிசிஎஸ் நிறுவனம் இதுபோன்ற குற்றச்சாட்டில் சிக்குவது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு ஒரு முறை எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனம் டிசிஎஸ்க்கு எதிராக தகவல் திருட்டு வழக்கு தொடர்ந்ததில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு சுமார் 2937 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பெங்களூரு: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் மீது அமெரிக்காவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் கார்ப் (CSC) நிறுவனம் வர்த்தக ரகசிய தகவல்களை திருடியதாக குற்றம் சுமத்தி வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Tata Consultancy Services (TCS) உலகின் மிகவும் பலமுள்ள தகவல் தொழில்நுட்ப பிராண்டாக மதிப்பிடப்பட்டுள்ளது. பரிச்சயம், விசுவாசம் , ஊழியர்களின் திருப்தி, தொழில் முன்னேற்ற ஆக்க முயற்சி, சந்தைபடுத்துதலில் செய்யப்படும் முதலீடு , வாடிக்கையாளர் கவனம் மற்றும் நிறுவனத்தின் புகழ் போன்ற பல அளவுகோல்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதில் 78.8 புள்ளிகளுடன், ஏஏ+ தரநிர்ணயித்துடன் மிகவும் பலமுள்ள தகவல் தொழில்நுட்ப பிராண்டாக டிசிஎஸ் உருவெடுத்துள்ளது.

பெயர் புகழ் ஒரு பக்கம் வந்து கொண்டிருந்தாலும் வழக்கில் சிக்குவதும் டிசிஎஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாக உள்ளது. தங்களுடைய முன்னாள் ஊழியர்கள் மூலமாக மென்பொருள் தயாரிப்பதற்கான கோடிங்கை திருடி ட்ரான்ஸ் அமெரிக்கா நிறுவனத்திற்கு சேவை வழங்கியதாக கம்ப்யூட்டர் சயின்ஸ் கார்ப் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

டிரான்ஸ் அமெரிக்காவின் துணை நிறுவனமான மணி சர்வீசஸ் நிறுவனத்திற்கு சிஎஸ்சிதான் சாப்ட்வேர் சேவை வழங்கி வந்தது. இந்த நிலையில்

டிசிஎஸ் நிறுவனம் சமீபத்தில் டிரான்ஸ் அமெரிக்கா என்ற நிறுவனத்திடமிருந்து 200 கோடி டாலர் மதிப்பிலான இன்சூரன்ஸ் சாப்ட்வேர் சேவை ஆர்டரை பெற்றது இதுவே சிஎஸ்சி நிறுவனம் வழக்கு தொடர காரணமாக அமைந்துள்ளது.

சிஎஸ்சி நிறுவனம் டிரான்ஸ் அமெரிக்காவிற்காக உருவாக்கிய மென்பொருள் பிரிவில் பணிபுரிந்த முக்கிய ஊழியர்களையும் டிசிஎஸ் பணிக்கு எடுத்துள்ளது. இதனையடுத்து சிஎஸ்சியின் முன்னாள் பணியாளர்கள் மூலம் தங்களது இன்சூரன்ஸ் மென்பொருள் தயாரிப்பின் கோடிங்கை திருடி டிரான்ஸ் அமெரிக்க நிறுவனத்திற்கு டிசிஎஸ் மென்பொருள் சேவை வழங்கி உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் இதுபோன்ற குற்றச்சாட்டில் சிக்குவது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு ஒரு முறை எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனம் டிசிஎஸ்க்கு எதிராக தகவல் திருட்டு வழக்கு தொடர்ந்ததில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு சுமார் 2937 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Computer Sciences Corp Theft case against TCS

Computer Sciences Corp , a former client of TCS, alleged in a lawsuit that TCS America has been stealing its trade secrets.
Story first published: Wednesday, May 1, 2019, 15:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X