சராசரி மனிதர்களைப் போல, சம்பளத்துக்கு போராடிய Iron Man, Thor, Captain America, Black widow..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லாஸ் ஏஞ்சல்ஸ்: அட சத்தியமாதாங்க. அயர்ன் மேனாக நடித்த ராபர் டோனி ஜூனியர், கேப்டன் அமெரிக்காவாக நடித்த க்ரிஸ் இவான்ஸ், தோராக நடித்த க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த், பிளாக் விடோவாக நடித்த ஸ்கார்லெட் ஜொஹான்சன் என அனைவருமே மார்வல் சினிமேட்டிக் யுனிவர்ஸ் (மார்வ்ல்- டிஸ்னி) நிறுவனத்திடம் பேசி இருக்கிறார்கள்.

 

எதற்காக..? சம்பளத்துக்காகத் தான். தங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதாது. அவெஞ்சர் என்கிற ஒற்றைப் பெயரை வைத்துக் கொண்டு நிறுவனங்கள் காமிக் வெளியிடுவது, பொம்மைகளை வெளியிடுவது, அவெஞ்சர் பெயரில் ஆடைகள், பைகளை வெளியிடுவது என நிறுவனங்கள் நன்றாக கல்லா கட்டுகிறது.

அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த நாங்கள் மட்டும், குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டுமா..? என போர் கொடி தூக்கி, பேமெண்ட்களை உயர்த்திக் கொண்டார்கள். இப்படி பேசியே நல்ல சம்பளத்தை வாங்கியவர்கள் பட்டியலில் தானோஸையே வென்று முதலிடம் பிடிக்கிறார் அயர்ன் மேன்.

எப்பதாண்டா முடியும் இந்த தேர்தல்.. அல்லல்படும் உற்பத்தியாளர்கள்.. அடுத்து என்ன புதிய விதிமுறை வரும் எப்பதாண்டா முடியும் இந்த தேர்தல்.. அல்லல்படும் உற்பத்தியாளர்கள்.. அடுத்து என்ன புதிய விதிமுறை வரும்

சாவு

சாவு

அயர்ன் மேன் இந்த அவெஞ்சர் எண்ட்கேமில் இறந்துவிட்டார். இனிஅயன் மேன் விஜய் டிவி சூப்பர் சிங்கர் போல, வைல்ட் கார்ட் எண்ட்ரி கொடுத்தால் தான் உண்டு. ஆக கதைப் படி அயர்ன் மேன் கடைசி படத்தில் நடித்துக் கொடுத்ததற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா..? 75 மில்லியன் டாலருக்கு மேலாம். இதை கணிப்பில் தான் சொல்லி இருக்கிறார்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

போராடிய கேப்டன்

போராடிய கேப்டன்

அயர்ன் மேனுக்கு மட்டும் 75 மில்லியன் என்றால் கேப்டன் அமெரிக்கா என்ன தொக்கா... தக்காளி தொக்கா என்ன..? கடுப்பான கேப்டன் அமெரிக்கா இனி எதிர்காலத்தில் வருகின்ற தன் படங்களுக்கான பேமெண்ட்களை ஒரே ஒப்பந்தத்தில் அதிகரித்து விட்டாராம். இனி கேப்டன் அமெரிக்கா ஒரு படத்தில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றால் 15 - 20 மில்லியன் டாலருக்கு செக் எழுதிக் கொடுத்தால் தான் வருவேன் என ஒற்றக் காலில் நின்று கையெழுத்து வாங்கி இருக்கிறாராம்.

கேப்டனுக்கு ஒரு 20 மில்லியன் பார்சல்
 

கேப்டனுக்கு ஒரு 20 மில்லியன் பார்சல்

மோடியின் தீவிர ரசிகர் போல, எல்லா சம்பளப் பணத்தையும் காசோலையாக (செக்காக) கேட்டிருக்கிறார். இந்த பேச்சு வார்த்தைகள் எல்லாமே அவெஞ்சர் எண்ட் கேமுக்கு முன்பே நடந்துவிட்டது. ஆக 20 மில்லியன் அமெரிக்க டாலரை தன் Vibranium Steel ஷீல்டில் பத்திரமாக பார்சல் கட்டி இருப்பார் என்கிறார்கள் ஹாலிவுட் வட்டாரங்கள்.

மின்னல் மன்னன் - ஆஷ்கார்டின் காவலன்

மின்னல் மன்னன் - ஆஷ்கார்டின் காவலன்

தோர் கதாபாத்திரத்தை ஸ்டான் லீ எழுதி, வெளியான முதல் படத்திலேயே நறுக்கென பொருந்திய க்ரிஸ் ஹெம்வொர்த் 2010-ல் தோராக 5 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். அதன் படி Thor, thor the dark world, Thor: Ragnarok, என 3 படங்களையும் கொடுத்துவிட்டார். ஆனால் தன் பலத்தைப் புரிந்து கொண்ட மின்னல் அழகன், சம்பளத்தை உயர்த்திக் கொடு இல்லை உன் நிறுவனத்தை மின்னலால் சாம்பளாக்கிவிடுவேன் என கொந்தளித்திருக்கிறார்.

மறுப்பு - ஓகே

மறுப்பு - ஓகே

ஓடின்சனின் மகனே, ஆஸ்கார்டின் தலைவனே, நீங்கள் அளித்த ஒப்பந்தங்கள் படி இன்னும் 2 படம் பாக்கி இருக்கிறதே எனச் சொல்லி மறுக்க, வாக்குவாதம் அடுத்த வெல்வலுக்கு போய் இருக்கிறது. சரி நமக்கு படம் முக்கியம் என விட்டுக் கொடுத்த மார்வல் சினிமேட்டிக் யுனிவர்ஸ் (மார்வ்ல்- டிஸ்னி) நிறுவனம், தோருக்கு ஒரு படத்தில் நடிக்க 15 - 20 மில்லியன் டாலருக்கு டீல் பேசி இருப்பதாக பிளாக் விடோவே சொல்லி இருக்கிறாராம்.

பொம்பளன்னா தரமாட்டியா..?

பொம்பளன்னா தரமாட்டியா..?

ஹல்கையே எளிதில் மனிதனாகவும், மீண்டும் ஹல்காகவும் மாற்றும் இந்த கறுப்பு உடை அழகி, பிளாக் விடோவுக்கு தன் சம்பளத்தைப் பேசி வாங்க முடியாதா என்ன..! எனக்கும் இனி வரும் படங்களுக்கு 20 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் என காலாலேயே மார்வல் சினிமேட்டிக் யுனிவர்ஸ் (மார்வ்ல்- டிஸ்னி) நிறுவன அதிகாரிகளின் கழுத்தை இறுக்கிப் பிடித்திருக்கிறாள். தாயி உனக்கு இல்லாததா, 2020-ல் பிளாக் விடோவோ தனியாவர்த்தனம் (பிளாக் விடோ என தனிப் படம்) வேறு வாசிக்கப் போற..? இந்தாம்மா வன தேவதை, நீ கேட்ட 20 மில்லியன் என, ஓகே சொல்லி இருக்கிறார்களாம் மார்வல் சினிமேட்டிக் யுனிவர்ஸ் (மார்வ்ல்- டிஸ்னி).

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

iron man thor captain america black widow fought to raise their salary

iron man thor captain america black widow fought to raise their salary
Story first published: Thursday, May 2, 2019, 16:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X