அடி மேல் அடி வாங்கும் உற்பத்தியாளர்கள்.. இனியும் தாங்க முடியாது .. கவலையில் Maruti and Hyundai

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பலத்த அடியை வாங்கிய கார் உற்பத்தி நிறுவனங்களில் மாருதியும், ஹூண்டாயும் ஒன்று. ஏற்கனவே மாருதி கடந்த மார்ச் காலாண்டில் விற்பனை குறைந்துள்ளது என்ற நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்திலும் விற்பனை குறைந்துள்ளதாக தெரிகிறது.

 

அதே நேரம் ஹீண்டாய் நிறுவனமும் இதே அறிக்கையைத் தான் வெளியிட்டுள்ளது. ஆக இனி வரும் மாதங்களில் ஆவது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனவாம் இந்த இரு நிறுவனங்களும்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாத கணக்குகளை முடித்த நிலையில், தற்போது முதலீட்டாளர்கள் பயணிகள் அதிக கவனத்தை செலுத்துவதாகவும், தற்போது இதன் தேவை அதிகரித்திருப்பதாகவும் இதனால் தற்போது இதில் கவனம் செலுத்த போவதாகவும் இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளனவாம்.

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாமிடம்! கடுப்பில் டிரம்ப்..!

விற்பனை 17% சரிவு

விற்பனை 17% சரிவு

எனினும் மாருதி சுசூகி கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் விற்பனை 17 சதவிகிதம் சரிந்துள்ளதாகவும், இது பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளதாகவும் சொல்கிறார்களாம். மேலும் இந்த ஆண்டு விற்பனை அதிகரிக்க என்ன செய்யலாம் என்ற தீவிர யோசனையிலும் உள்ளனராம்.

ஹீண்டாயிலும் 18% வீழ்ச்சி

ஹீண்டாயிலும் 18% வீழ்ச்சி

இதுவே ஹீண்டாய் நிறுவனத்தில் உள்நாட்டு விற்பனை மட்டும் சுமார் 18 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளதாம். அதோடு மொத்த உள் நாட்டு விற்பனையில் 10 சதவிகிதமும் குறைந்துள்ளதாம். எனினும் கடந்த ஆண்டு செய்யப்பட்ட அதிகளவு ஏற்றுமதி இதை சரிசெய்துள்ளதாகவும் ஹீண்டாய் கூறியுள்ளது.

சிரிய கார்களின் உற்பத்தி குறைவு
 

சிரிய கார்களின் உற்பத்தி குறைவு

இதில் கவனுனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் நாட்டில் முக்கிய கார் உற்பத்தியாளர்களிடம் இருந்து சிறிய கார்கள் உற்பத்தி மிக குறைந்துள்ளது என்றும், அதிலும் சுவிப்ட், வேகன் உள்ளிட்ட கார்களை போன்ற உற்பத்தி குறைந்துள்ளதாம். அதுவும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது 40 சதவிகிதம் குறைவாம். இந்த பிரிவில் மாருதியின் பயணிகள் வண்டி 14 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாம்.

பெரிய  தாக்கம்

பெரிய தாக்கம்

இந்தியாவில் ஏற்கனவே விற்பனை குறைந்திருந்த நிலையில், இந்தியாவில் காருக்கான தேவை மற்றும் இருப்பு நிலைகள் பற்றிய விவரங்களில் ஒரு சுமூகமான நிலை காணப்படுகிறதாம். இருப்பினும் முந்தைய விற்பனை வீழ்ச்சி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியும் உள்ளதாம். ஆக நினைவில் இதை கொண்டு விற்பனை எவ்வாறு அதிகரிக்கலாம் என்று முனைப்போடு செயல்பட்டு வருகின்றனவாம்.

பலமான செயல்திறன் வேண்டும்

பலமான செயல்திறன் வேண்டும்

இந்த உற்பத்தி வீழ்ச்சியை கொண்டுள்ள நிறுவனங்கள், தங்களது செயல்திறன் பற்றாது என்றும், இன்னும் இதைவிட பலமான செயல்பாடுகள் வேண்டும் தீர்மானித்துள்ளனவாம். அதுவும் நடந்து கொண்டிருக்கும் தேர்தல் காலாங்களில் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பண்டிகை காலங்களிலும் விற்பனை குறைந்துள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஏப்ரல் 1, 2020 - புதிய விதிமுறைகள்

ஏப்ரல் 1, 2020 - புதிய விதிமுறைகள்

இதற்கிடையில், வரும் ஏப்ரல் 1, 2020 முதல் BS-VI மாசு விதிகளின் காரணமாக தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும், இல்லையேல் டீசல் வாகனங்களை நிறுத்தி தான் ஆக வேண்டும் என்ற நிலையில், மாருதி நிறுவனம் டீசல் வாகனங்களை விரைவில் நிறுத்திவிடும் என்று மாருதி அறிவித்திருந்தால் மீண்டும் இந்த விற்பனை குறையவே வாய்ப்புகள் என்ற கருத்தும் நிலவி வருகிறதாம். அப்படின்னா மாருதியின் கதி?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: car production கார்
English summary

Maruti & hyundai plummeting April sales hopes of demand recovery

If investors expected passenger vehicle sales to revive in April after a massive inventory clean-up in the March quarter, they will be disappointed. Maruti Suzuki India Ltd’s sales raced downhill, tumbling 17% from the year-ago period.
Story first published: Thursday, May 2, 2019, 19:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X