இங்கதாண்டா இதுக்குப் பேரு ஸ்மார்ட் கார்டு.. ஹாங்காங்கில் எல்லாம் இதுக்கு பேரு ஆக்டோபஸ் கார்டு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாங்காங்: ஹாங்காங்கில் ஆக்டோபஸ் கார்டு என்பது தற்போது பிரபலமாகி வருகிறது. உண்மையில் இதற்கு பேர் தான் ஸ்மார்ட் கார்டு ஆகும்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணபரிமாற்றத்தை குறைக்க டிஜிட்டல் பரிமாற்றம் ஊக்குவிக்கப்படுகின்றன. அந்த வகையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகிய இரு கார்டுகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில் டெபிட் கார்டு நமது சேமிப்பாகும். கிரெடிட் கார்டு குறிப்பிட்ட வங்கியிலிருந்து அவசர தேவைக்கு கைமாற்றாக வாங்கி பின்னர் குறிப்பிட்ட தேதிகளுக்கு வட்டியுடன் திருப்பி செலுத்துவதாகும். அதுபோல் ஹாங்காங்கில் ஆக்டோபஸ் கார்டு எனப்படும் ஸ்மார்ட் கார்டுகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

நீடிக்கும் குழப்பம்.. மாருதி டீசல் கார் உற்பத்தி இல்லனுச்சு.. இப்ப Ertiga டீசல் அறிமுகம் நீடிக்கும் குழப்பம்.. மாருதி டீசல் கார் உற்பத்தி இல்லனுச்சு.. இப்ப Ertiga டீசல் அறிமுகம்

ஆக்டோபஸ் கார்டு

ஆக்டோபஸ் கார்டு

இந்த கார்டுகள் கடந்த 1997-ஆம் ஆண்டு ரயில்கள், சுரங்கப் பாதைகள், பேருந்து ஆகியவற்றின் பயணத்துக்கு பணத்திற்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு வந்தன. கடந்த 15 ஆண்டுகளில் இந்த ஆக்டோபஸ் கார்டு விரிவுப்படுத்தப்பட்டன.

3 மடங்கு

3 மடங்கு

இவை தற்போது பலசரக்கு கடைகள், கடைகள், உணவகங்கள் உள்பட பல்வேறு சேவைகளுக்கு ஹாங்காங்கில் இது பயன்படுத்தப்படுகிறது. 2 கோடி கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இது ஹாங்காங் மக்கள் தொகையை காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும்.

ஸ்வைப்

ஸ்வைப்

இந்த கார்டுகள் மூன்று வகைப்படுகின்றன. ஒன்று குழந்தைகளுக்கு, இரண்டாவது பெரியவர்களுக்கு, மூன்றாவது வயதானவர்களுக்கு ஆகும். கார்டு ரீடரின் பக்கத்தில் வைத்தோ அல்லது ஸ்வைப் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பணத்தை லோடு

பணத்தை லோடு

அந்த கருவி ஆக்டோபஸ் கார்டை அடையாளம் கண்டு கொண்டு ஒரு வித பீப் ஒலியை எழுப்பும். பின்னர் கார்டில் உள்ள நிலுவை தொகையிலிருந்து தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளும். ஆக்டோபஸ் கார்டு என்பது பணம் போன்றதாகும். ஒரு முறை தொலைந்துவிட்டால் பயனாளிக்கு அந்த கார்டுக்கு பணத்தை லோடு செய்ய வேண்டும். q

130 அமெரிக்க டாலர்கள்

130 அமெரிக்க டாலர்கள்

ஆக்டோபஸ் கார்டுக்கு பணத்தை பல்வேறு விதங்களில் லோடு செய்யலாம். பணத்தை ஏற்றுக் கொண்டு அதை கார்டில் பறிமாற்றம் செய்யும் இயந்திரங்கள் உண்டு. ஒரு கார்டானது 1000 ஹாங்காங் டாலர்களை ஏற்றுக் கொள்ளும். அதாவது 130 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் ரூ 8,865 ஆகும்.

தேவையில்லை

தேவையில்லை

15 வயது முதல் 65 வயது வரையிலான ஹாங்காங்வாசிகளில் 95 சதவீதம் பேர் இந்த ஆக்டோபஸ் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் அதிகளவிலான பணத்தை கையில் எடுத்துச் செல்ல தேவையில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Octopus cards in Hongkong

The Octopus card is a smart card that is used to make payments in Hong Kong. It first appeared in 1997, shortly after Britain's ex-colony returned to China, as a form of payment in trains, subways and buses.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X