டெல்லி : அமெரிக்காவின் முன்னனி நிறுவனமான பெப்சிகோ இந்தியா குஜராத் உருளைக்கிழங்கு விவசாயிகள் விதை காப்புரிமையை மீறியதாகவும், அதோடு அவர்கள் பெப்சிகோ நிறுவனத்திற்கு இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில் இந்தியாவில் பிரபலமான நொருக்கு தீனியான லேஸ் சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கு ரகத்திற்கு பிரத்யேக காப்புரிமையை வைத்திருப்பதாக பெப்சிகோ நிறுவனம் கூறுகிறது.
அதோடு தங்களுடைய அனுமதி பெறாமல் இந்திய விவசாயிகள் இந்த ரக உருளைக்கிழங்கை சாகுபடி செய்ய கூடாது என்றும்,அதற்காக உரிமை கூறியும் பெப்சிகோ, விவசாயிகள் மீது இந்தியாவில் வழக்குப்பதிவு செய்திருந்தது.
பெப்சிகோ சமதானம்
இந்த நிலையில் விவசாயிகள் மீது வழக்கு தொடுத்திருப்பதற்கு விவசாய சங்கங்களும், சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பெப்சிகோ நிறுவனம் நாங்கள் விவசாயிகளுடன் சமாதானமாக போகிறோம். வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என சொல்லியும் விட்டது.
வாபஸ் நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்
ஆனால் விவசாயிகள் தங்கள் மீதுள்ள வழக்கை திரும்ப பெறுவதோடு எந்த சூழ்னிலையிலும் எந்த குற்றமும் சுமத்த கூடாது. அதோடு எந்த வித இழப்பீடும் கேட்க கூடாது என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதே நேரம் விவசாயிகள், விவசாயிகள் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாய உரிமையாளர்களின் குழுவினர்கள் ஊடகங்களுக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "வழக்குகள் திரும்பப் பெறப்படுவது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசுடன் பேச்சு வார்த்தை
மேலும் நாங்கள் மாநில அரசுகளுடன் விவாதித்த பின்பே மீண்டும் இது பற்றி முழு விவரங்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். அதோடு PPV & FR சட்டம் 2001 இன் 39 (1) (iv) - கீழ் வேறு எதுவும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்றும் அறிவித்துள்ளனர்.
வழக்கு வாபஸ்
இதோடு பிபின்பாய் படேல், சாபில்பாய் படேல் மற்றும் வினோத் பட்டேல் ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்த வழக்கில், அகமதாபாத்தில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தையும் நடத்தினர். அதில் பெப்சிகோ நிறுவனம் விசாரணையை முடிக்க வழக்கை வாபஸ் வாங்க போவதாகவும் அறிவித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய அமைப்புக்களும் சேர்ந்து செயற்பட்டனர்.
மிக்க மகிழ்ச்சி
இந்த நிலையில் பெப்சிகோ இந்த வழக்கை திரும்பப் பெற்றதில் மிக மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளனர். மேலும் விவசாயிகளின் விதை சுதந்திரம் பற்றியும், இதில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் விவசாயிகளுக்கு கல்வி கற்பிப்பதற்கு அரசாங்கம் இன்னும் கூடுதலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்
விவசாயிகளுக்கு சட்டம் – உரிமை சொல்ல வேண்டும்
அதோடு விவசாயிகளுக்கு சட்டப்பூர்வ உரிமைகளைப் பற்றியும், விவசாயிகளும் பண்ணை அமைப்புக்களும் கல்வி கற்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பிரச்சாரங்களை நடத்த வேண்டும். அதில் விவசாயிகளின் உரிமையையும். சட்டத்தையும் போதிக்க வேண்டும் என்றும் அவ்வமைப்புகள் கூறியுள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications