கையில் காசு இருக்கு.. வங்கிக்கு செலுத்தமாட்டேன்.. அடம் பிடிக்கும் 5000 பேர்... தவிக்கும் வங்கிகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஒருவருக்கு 100 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. வங்கியில் ஒரு 25 கோடி ரூபாய் பிசினஸ் செய்ய கடன் வாங்குகிறார். பிசினஸ் காலியாகிவிட்டது. இப்போது வங்கியிடம் வாங்கிய 25 கோடி ரூபாய்க்கு வட்டியோடு அசல் தொகையையும் கொடுக்க வேண்டும்.

சாதாரணமாக யோசித்தாலே விடை தெரியும் தானே..? ஆம் அவர்களின் சொந்த சொத்தான 100 கோடி ரூபாயில் இருந்து வங்கிக்கான 25 கோடி ரூபாய் அசல் மற்றும் வட்டியைச் செலுத்த வேண்டும்.

ஆனால் சில பணக்காரர்கள், என் பிசினஸ் தான் நஷ்டமாகிவிட்டதே, என் கடனைத் தள்ளுபடி செய்யுங்கள், திரும்ப வரவே வராத வாராக் கடனாக (Bad debts writtef off) எழுதிக் கொள்ளுங்கள், என் சொந்த சொத்துக்களை எல்லாம் விற்று வங்கிக்கு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது என வங்கியோடே சண்டை போடுகிறார்கள், போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... விவசாயிகள் லாபம் அடைய அருமையான அமெரிக்க தொழில்நுட்பம்!

Wilful Defaulters

Wilful Defaulters

இவர்களைத் தான் நாம் ஆங்கிலத்தில் Wilful Defaulters என்கிறோம். இதற்கு நல்ல உதாரணம் மல்லையா. மல்லையா நினைத்தால் வாங்கிய கடன்களை எல்லாம் ஓரே அடியில் தீர்க்கலாம். அந்த அளவுக்கு சொத்து பத்து இருக்கிறது. ஆனால் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி, தன் சொத்துக்களை எல்லாம் வேறு சிலரின் பெயருக்கும், ட்ரஸ்டுகளுக்கும் மாற்றி வங்கிகளை அலையவிட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு தன்னை ஒரு பொருளாதாரக் குற்றவாளி அறிவிப்பதும் தவறு, இந்தியப் பொருளாதாரத்துக்கே பெரிய பாதிப்பு எனவும் பேசிக் கொண்டிருக்கிறார்.

பிசினஸ் வேறு தனி நபர் வேறு

பிசினஸ் வேறு தனி நபர் வேறு

விஜய் மல்லையாவிடம் விளக்கம் கேட்டால், கிங் ஃபிஷ்ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிசினஸுக்காகத் தான் கடன் வாங்கினேன். என்னுடைய சொந்த செலவுகளுக்கு கடன் வாங்கவில்லை. ஆக நான் அந்த கடன்களுக்கு பொறுப்பாக முடியாது என பசப்புகிறார். பிசினஸ் காலி. பிசினஸில் உள்ள சொத்துக்களை எல்லாம் எடுத்துக் கொண்டீர்கள், அதன் பிறகு எனக்கும் பிசினஸுக்குமே சம்பந்தம் இல்லை என நைஸாக நழுவுகிறார். ஆக வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த, தன் பெயரில் சொத்துக்கள் வைத்திருந்தும், வங்கிகளுக்கு வேண்டும் என்றே கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்கள் Wilful Defaulters (மனமுவந்து கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள்).

ஒவ்வொரு வருடமும் அதிகரிப்பு
 

ஒவ்வொரு வருடமும் அதிகரிப்பு

தற்போது டிரான்ஸ்யூனியன் சிபில் என்கிற நிறுவனம் இந்தியாவில் இருக்கும் Wilful Defaulters (மனமுவந்து கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள்) விவரங்களை, வங்கிகளிடம் இருந்தே திரட்டி வெளியிட்டிருக்கிறது. மார்ச் 2009-ம் ஆண்டு முடிவில் Wilful Defaulters (மனமுவந்து கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள்)-களாக வெறும் 2,248 வங்கிக் கணக்குகள் மூலம் 8,703 கோடி ரூபாய் கடனை திருப்பி வசூலிக்க முடியாமல் இருந்தது.

2019-ல்

2019-ல்

10 வருட முடிவில் இன்று டிசம்பர் 2018 நிலவரப்படி 11,046 வங்கிக் கணக்குகள் வழியாக 1,61,213 கோடி ரூபாய் கடனை Wilful Defaulters (மனமுவந்து கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள்)-களிடம் இருந்து திருப்பி வசூலிக்க முடியாமல் தவிக்கிறது வங்கிகள். 5,090 பெரிய பணக்காரர்கள் கையில் பணம் வைத்துக் கொண்டும் தங்கள் 1,61,213 கோடி ரூபாயை செலுத்தாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சர்ச்சைப் புகழ் விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் சந்தேஸரா, மெகுல் சோக்சி எல்லோரும் அடக்கம்.

திமிரும் நிறுவனங்கள்

திமிரும் நிறுவனங்கள்

ABG Shipyard (Rs 1,874 crore), Surya Pharma (Rs 574 crore), Rei Agro (Rs 671 crore), Vijay Mallya's Kingfisher Airlines போன்ற பெரிய மனிதர்கள் மற்றும் நிறுவனங்கள் எஸ்பிஐ-ன் முனமுவந்து கடனைத்திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலில் இருக்கிறார்கள்.

Nitin Kasliwal's S Kumars Nationwide (Rs 834 crore), Vijay Mallya's Kingfisher Airlines (Rs 695 crore)ஐடிபிஐ வங்கியில் மனமுவந்து கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலில் இருக்கிறார்கள்.

Mehul Choksi companies Gitanjali (Rs 4,633 crore), Nakshatra Brands (Rs 1,108 crore), Gili India (Rs 1,445 crore), Jatin Mehta's Winsome (Rs 899 crore) and Forever Precious (Rs 747 crore) போன்ற பெரிய மனிதர்கள் மற்றும் நிறுவனங்கள் பஞ்சாப் நேஷனல் பேங்கின் முனமுவந்து கடனைத்திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். இதில் இவர்கள் மூன்று பேர் தான் டாப்

1999-ல் இருந்து

1999-ல் இருந்து

மத்திய ரிசர்வ் வங்கி இப்படி பெரும் பணக்காரர்கள், வேண்டும் என்றே வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதைத் தடுக்க wilful defaulter dissemination scheme என ஒரு திட்டத்தை ஏப்ரல் 1999-ல் கொண்டு வந்தது. அந்த திட்டம் சின்ன சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டு மே 2002-ல் முழு செயல்பாட்டுக்கு வந்தது. அதன் பிறகு தான் இப்படி கடன் வாங்கி, வங்கியை ஏமாற்றும் பெரிய முதலாளிகளை பகிரங்கமாக பொது வெளியில் பட்டியலிட்டு மற்ற வியாபாரிகள் மற்றும் வங்கிகளை எச்சரிக்கத் தொடங்கியது ஆர்பிஐ.

வங்கிகள்

வங்கிகள்

எஸ்பிஐ 1675 வங்கிக் கணக்குகள் மூலம் 39,471 கோடி ரூபாய் பாக்கி இருக்கிறது. பஞ்சாப் நேஷனல் பேங்க் 1094 வங்கிக் கணக்குகள் மூலம் 23,448 கோடி ரூபாய் பாக்கி இருக்கிறது. பேங்க் ஆஃப் இந்தியா 400 வங்கிக் கணக்குகள் மூலம் 9,784 கோடி ரூபாய் பாக்கி இருக்கிறது. பேங்க் ஆஃப் பரோடா 574 வங்கிக் கணக்குகள் மூலம் 7,833 கோடி ரூபாய் பாக்கி இருக்கிறது. இப்படியாக ஒட்டு மொத்த இந்தியாவில் 11,046 வங்கிக் கணக்குகள் மூலம் 1.61 லட்சம் கோடி ரூபாய் கடன் வசூலிக்க முடியாமல் பாக்கி இருக்கிறது. குறைதபட்சம் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரவாவது இந்திய அரசு முயற்சிக்கிறதே என சந்தோஷப்படலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

we have money but we wont repay our loan to bank 5090 stubborn businessmen

we have money but we wont repay our loan to bank 5090 stubborn businessmen
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more