ஊழல் புகழ் DHFL மீண்டும் மக்களிடம் ரூ.2000 கோடி கேட்டு வருகிறது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (Dewan Housing Finance Ltd (DHFL)புதிதாக 2000 கோடி ரூபாய் நிதி திரட்ட இருப்பதாகச் சொல்லி இருக்கிறது.

 

இந்த செய்தியை இன்று மே 04, 2019 திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (Dewan Housing Finance Ltd (DHFL) நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (Dewan Housing Finance Ltd (DHFL) நிறுவனத்தின் இயக்குநர் குழுவும் இந்த புதிய 2000 கோடி ரூபாய் திரட்ட ஒப்புதல் அளித்திருக்கிறார்களாம்.

 பங்குச் சந்தைகளிடம் அனுமதி

பங்குச் சந்தைகளிடம் அனுமதி

புதிதாக 2,000 கோடி ரூபாய் நிதி திரட்டுவது தொடர்பாக, Bombay Stock exchange என்றழைக்கப்படும், மும்பை பங்குச் சந்தையிடமும் முறையாக கடிதம் வழியாக தெரிவித்து இருக்கிறார்களாம். இந்த 2,000 கோடி ரூபாய் நிதியைத் திரட்ட ஒர் சிறப்புக் குழுவை நியமித்திருக்கிறார்களாம். அந்தக் குழுவின் பெயர் "Special Committee for Issuance of Securities".

 சிறப்புக் குழு அனுமதி

சிறப்புக் குழு அனுமதி

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (Dewan Housing Finance Ltd DHFL)நிறுவனத்தின் இயக்குநர் குழுவோடு இந்த சிறப்புக் குழுவினரும் 2,000 கோடி ரூபாய் நிதியைத் திரட்ட அனுமதி கொடுத்திருக்கிறார்களாம். இந்த சிறப்புக் குழு தான் விற்க இருக்கும் பங்கு விலை, விற்க இருக்கும் முறை, என்ன என்ன சட்ட திட்டங்கள் இந்த டீலில் பின்பற்றப்பட வேண்டும் என அனைத்தையும் தீர்மானிக்க இருக்கிறதாம்.

புகார்கள்
 

புகார்கள்

இந்த நிறுவனத்தின் மீது சமீபத்தில் முறையற்ற ரீதியில் மக்கள் பணத்தையும், சாதாரண முதலீட்டாளர்கள் பணத்தையும் நூதனமாக ஏமாற்றி ஊழல் செய்வதாக கோப்ராபோஸ்ட் என்கிற அமைப்பு ஆதாரங்களோடு வெளியிட்டது. DHFL நிறுவனத்தின் நிறுவனர் வாதவான், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி போலி நிறுவனங்களுக்கு 14,300 கோடி ரூபாய் கடன் கொடுத்தது, கறுப்புப் பணமாக பதுக்கி இலங்கையில் ஒரு கிரிக்கெட் டீம் வாங்கியது, வெளிநாடுகளில் பலரின் பெயரில் சொத்துக்களை வாங்கியது.

 போலி நிறுவனங்கள்

போலி நிறுவனங்கள்

பாஜகவுக்கு போலி நிறுவனங்கள் மூலம் சுமார் 19.5 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது. இன்சைடர் டிரேடிங் (நிறுவன உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிந்த ரகசியங்களை பகிர்ந்து பங்கு விலை ஏற்றத்தில் காசு பார்ப்பது) மூலம் 1,000 கோடி ஏமாற்றியது. இப்படி வரிசையாக புகார்கள் அடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் திவான் ஹவுசிங் நிறுவனத்தின் சந்த்ஹை மதிப்பு 18,500 கோடி ரூபாய் இழந்தது. பல்வேறு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இழந்தார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: dhfl fund நிதி
English summary

DHFL is going to raise 2000 crore of money from public again

DHFL is going to raise 2000 crore of money from public again
Story first published: Saturday, May 4, 2019, 19:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X