Warren Buffett இல்லாத Berkshire Hathaway..! முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அனலிஸ்டுகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா: உலகின் நம்பர் 1 பங்குச் சந்தை முதலீட்டாளர் மற்றும் பில்லியனர் வாரன் பஃபெட் (Warren Buffett)-ன் நிறுவனமான பெர்க்‌ஷெர் ஹதவே (Berkshire Hathaway)-ன் ஆண்டுக் கூட்டம் இன்று அமெரிக்காவில் நடந்தது.

இதில் வாரன் பஃபெட் (Warren Buffet)-ஐப் பார்ப்பதற்கே வழக்கம் போல பெரிய அளவில் கூட்டம் கூடி விட்டது. சுமார் 40 - 50 ஆயிரம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக பல்வேறு அமெரிக்கப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

பெர்க்‌ஷர் ஹதவே நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாக இருக்கும் வாரன் வாரன் பஃபெட் (Warren Buffett) மற்றும் பெர்க்‌ஷர் ஹதவே நிறுவனத்தின் துணைத் தலைவர் சார்லி முங்கர் என இருவரும் சுமார் ஐந்து மணி நேரத்துக்கு மேல் பங்குதாரர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்திருக்கிறார்கள்.

 ஊழல் புகழ் DHFL மீண்டும் மக்களிடம் ரூ.2000 கோடி கேட்டு வருகிறது..! ஊழல் புகழ் DHFL மீண்டும் மக்களிடம் ரூ.2000 கோடி கேட்டு வருகிறது..!

வங்கிகள்

வங்கிகள்

இப்போது வரை வாரன் பஃபெட் (Warren Buffet)-ன் பெர்க்‌ஷர் ஹதவே நிறுவனம் அமெரிக்காவின் ஆறு பெரிய வங்கிகளில் ஒரு கணிசமான அளவில் பங்குகளை வைத்திருக்கிறார்கள். இந்த வங்கிகள் பட்டியலில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியும் அடக்கம்.

விமான சேவை நிறுவனம்

விமான சேவை நிறுவனம்

வாரன் பஃபெட் (Warren Buffet)-ன் பெர்க்‌ஷர் ஹதவே நிறுவனம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் என இன்னும் சில விமான சேவை நிறுவனங்களில், பத்து சதவிகித பங்குகளை வைத்திருக்கிறர்களாம். அதோடு யுனைடெட் காண்டினெண்டல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் எட்டு சதவிகித பங்குகளை வாரன் பஃபெட் (Warren Buffet) இன்னமும் வைத்திருக்கிறாராம்.

பை பேக்

பை பேக்

இன்னும் சில மாதங்கள் பெர்க்‌ஷர் ஹதவே நிறுவனமே, தன் பங்குகளை இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் வாங்கிக் குவிக்க இருப்பதையும் வாரன் பஃபெட் (Warren Buffet) இந்த ஆண்டுக் கூட்டத்தில் மீண்டும் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 2019-ல் தான் வாரன் பஃபெட் (Warren Buffet) பொதுவெளியில் வாயைத் திறந்தார்.

மரணம்

மரணம்

வாரன் பஃபெட் (Warren Buffet)-க்கு வயது அதிகரித்து வருவதையும் முதலீட்டாளர்கள் பயத்தோடு பார்க்கத் தொடங்கி இருக்கிறார்களாம். அப்படி ஒருவேளை வாரன் பஃபெட் (Warren Buffet) இறந்துவிட்டார் என்றால் அவருக்குப் பின் பெர்க்‌ஷர் ஹதவே எப்படி இருக்கும் என்பதையும் முதலீட்டாளர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் என்கிறார்கள் அமெரிக்க அனலிஸ்டுகள்.

ஒதுங்கி விட்டார்

ஒதுங்கி விட்டார்

ஏற்கனவே வாரன் பஃபெட் (Warren Buffet) தன்னுடைய பல அலுவலக வேலைகள், கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது என பல வேலைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவ்வளவு ஏன்..? தன்னுடைய அன்றாட அலுவலக வேலைகளில் இருந்து கூட கடந்த ஜனவரி 2018-ல் இருந்தே ஒதுங்கிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டி இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

investors has to think about Berkshire Hathaway without warren buffet

investors has to think about Berkshire Hathaway without warren buffet
Story first published: Saturday, May 4, 2019, 19:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X