38-வது ஆண்டாக ஜப்பானில் குழந்தைகள் எண்ணிக்கை சரிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டோக்கியோ: ஜப்பானிய அரசு வருத்தத்துடன், தங்கள் நாட்டில் இருக்கும் குழந்தைகளின் எண்ண்ணிக்கை தொடர்ந்து 38-வது ஆண்டாக சரிந்திருப்பதைத் தெரிவித்திருக்கிறது. 1950-க்குப் பிறகு ஜப்பானிய வரலாறு காணாத சரிவாம்.

ஜப்பான் நாட்டின் புள்ளியியல் துறை இன்று (மே 04, 2019) , தங்கள் நாட்டில் 15 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 15.22 மில்லியனாக ஏப்ரல் 01, 2018 அன்று இருந்ததாம்.

ஆனால் இந்த 2019 ஏப்ரல் 01 நிலவரப்படி 1,80,000 குழந்தைகள் எண்ணிக்கை குறைந்திருக்கிறதாம். அதாவது ஏப்ரல் 2018-ஐ விட ஏப்ரல் 2019-ல் குழந்தைகள் எண்ணிக்கை 1.2 சதவிகிதம் குறைந்து இருக்கிறதாம்.

 BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 10.63-ஆக உயர்வு..! எங்களிடம் 5340 டவர்கள் இருக்கிறது..! BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 10.63-ஆக உயர்வு..! எங்களிடம் 5340 டவர்கள் இருக்கிறது..!

வரலாறு காணாத சரிவு

வரலாறு காணாத சரிவு

கடந்த 1950-களுக்குப் பிறகு ஜப்பானில் இருக்கும் தரவுகளின் அடிப்படையில், 2019-ம் ஆண்டில் தான் குழந்தைகளின் எண்ணிக்கை இவ்வளவு குறைந்திருக்கிறதாம். ஜப்பான் நாட்டில் தொடர்ந்து பிறப்பு விகிதம் குறைவாகத் தான் இருக்கிறதாம். இதற்கு முக்கியக் காரணமாக ஜப்பானிய பெண்களுக்கு பணி இடங்களில் போதுமான வசதிகள் செய்து கொடுக்காதது தான் என கருத்து நிலவுகிறது.

நிறுவனங்கள் காரணம்

நிறுவனங்கள் காரணம்

ஜப்பானிய பெண்களும் இந்தியப் பெண்களைப் போல, வேலைக்குச் செல்வது மட்டுமல்லாமல், வீட்டு வேலைகள், பரம்பரை பரம்பரையாக கடை பிடித்து வரும் பழக்க வழக்கங்களை எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறதாம். இதனால் தான் ஜப்பானிய பெண்கள் அதிகம் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பாமல் தங்கள் பாட்டுக்கு இருக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஜப்பானிய பெண்கள்

ஜப்பானிய பெண்கள்

அனா, Anna, 24 வயது japan பெண், ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றுகிறார் "உடல் உறவு என்பது எனக்கு ஒரு தேவை இல்லாத வேலையாகவே தெரிகிறது. எங்கள் கலாச்சாரத்தில் கல்யாணம் செய்து கொண்ட பின் பெண்கள் அத்தனை சுதந்திரமாக இருக்க முடியாது. என்னுடைய விருப்பமான உணவை உண்பது, எனக்கு பிடித்த நேரத்தில் தூங்கி எழுவது கூட நான் திருமணம் செய்து கொண்டால் முடியாதது ஆகிவிடும். இந்த இரண்டு விஷயங்களே என்னை உடல் உறவில் இருந்து என்னை பிரித்து வைக்கிறது அல்லது எனக்கு தேவை இல்லை என்று நினைக்க வைக்கிறது. உண்மையைச் சொன்னால் எனக்கு உடல் உறவு கொள்ள விருப்பமே இல்லை. உடல் உறவு கொண்டே ஆக வேண்டும் என தலை எழுத்தா என்ன" என்கிறார் அனா.

ஜப்பானிய அரசு வருத்தம்

ஜப்பானிய அரசு வருத்தம்

கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து தான் ஜப்பான் அரசு வெளி நாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கத் தொடங்கியது. அதுவும் குறிப்பாக, அதிகம் உடல் உழைப்பைக் கொடுக்க வேண்டிய, லேபர் தொழில்களில், ஜப்பானியர்களால் நிரப்ப முடியாத வெற்றிடத்தை நிரப்ப பெரிய அளவில் வெளிநாட்டவர்களுக்கு விசா கொடுத்து வருகிறது. மற்றொரு பக்கம் ஜப்பானிய மக்களின் சராசரி வயதும் அதி வேகமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் மக்கள் செல்வமே இல்லாமல் போய்விடுமோ என்கிற அளவுக்கு ஜப்பானிய அரசு இந்த பிரச்னையை தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

japans child population hit its 38 years low and aging population is raising fast

japans child population hit its 38 years low and aging population is raising fast
Story first published: Saturday, May 4, 2019, 20:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X