Warren Buffett-ன் வாரிசாகும் இந்தியர் அஜித் ஜெயின்..! யார் இவர்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒமஹா: உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் மற்றும் உலக பங்குச் சந்தை ஜாம்பவான் யார்..? நம் வாரன் பஃபெட் (Warren Buffett). இவரின் நிறுவனம் தான் பெர்க்‌ஷர் ஹதவே (Berkshire hathaway). இது தான் வாரன் பஃபெட் (Warren Buffett)-ன் பிசினஸ் சாம்ராஜ்யம். இதை வாரன் பஃபெட் (Warren Buffett)-க்குப் பிறகு, யார் தலைமை ஏற்று நடத்தப் போகிறார்கள் என்பது தான் இப்போதைய ஹாட் டாப்பிக்.

 

பெர்க்‌ஷர் ஹதவே (Berkshire hathaway) நிறுவனத்தின் இன்ஷூரன்ஸ் வியாபாரங்களைப் பார்த்துக் கொள்ளும், 67 வயதான இந்தியர் அஜித் ஜெயினும் இந்த தலைமைப் பொறுப்புக்கு தகுதினவர்கள் பட்டியலிலும், வாரன் பஃபெட்டின் திறமைசாலிகள் பட்டியலிலும் இருக்கிறார்.

Warren Buffett-ன் வாரிசாகும் இந்தியர் அஜித் ஜெயின்..! யார் இவர்..?

உலகின் மிகப் பெரிய சர்ச் என்ஜினான கூகுளில் ஏற்கனவே ஒரு இந்தியக் கொடி உயரப் பறக்கிறது. இப்போது உலகின் மிகப் பெரிய முதலீட்டு நிறுவனமான பெர்க்‌ஷர் ஹதவே (Berkshire hathaway)-வையும் ஒரு இந்தியர் தலைமை ஏற்று நடத்தினால், நாம் காலரை தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டியது தானே..?

அஜித் ஜெயின், ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர். காரக்பூர் ஐஐடி (இந்திய தொழில்நுட்பக் கல்லூரி)-ல் பிடெக் டிகிரி முடித்தார். படித்து முடித்ததும் ஐபிஎம் (IBM - International Business Machine) நிறுவனத்தில் வேலை. ஐபிஎம்-ன் இந்திய அலுவலகங்களிலேயே வேலை பார்த்து வந்தார். அதன் பின் ஹார்வர்டில் எம்பிஏ படிக்க அமெரிக்கா சென்றார்.

எம்பிஏ படித்த உடன் பொறியியல் மீதிருந்த காதல் குறைந்து பொருளாதாரம், பணம் போன்றவைகள் மீது ஆர்வம் அதிகரித்துவிட்டது. அப்படியே 1986-ல் பெர்க்‌ஷர் ஹதவே (Berkshire hathaway) நிறுவனத்தில் ஒரு இடைநிலைப் பணியில் தன் பயணத்தைத் தொடங்கினார். இது அழகான ஒரு விஷயம் என்ன தெரியுமா..? அஜித் ஜெயின் பெர்க்‌ஷர் ஹதவே (Berkshire hathaway) நிறுவனத்தில் இணையும் போது அவருக்கு இன்ஷூரன்ஸ் பற்றி அதிகம் தெரியாதாம்.

 

ஆனால் இன்று, பெர்க்‌ஷர் ஹதவே (Berkshire hathaway)-ன் இன்ஷூரன்ஸ் வியாபாரங்களை தனி ஒருவனாக நிர்வகித்து வருகிறார். அதற்கு பலனாக பெர்க்‌ஷர் ஹதவே (Berkshire hathaway) நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம் பிடித்துவிட்டார். 2016 டிசம்பர் நிலரப்படி 44,000 பேர் பெர்க்‌ஷர் ஹதவே (Berkshire hathaway) இன்ஷூரன்ஸ் வியாபாரத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். 113 பில்லியன் டாலர் இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை தலைமை தாங்கி வசூலித்திருக்கிறார் அஜித் ஜெயின்.

வாரன் பஃபெட் (Warren Buffett) இன்று பணக்காரராக இருக்க என்ன காரணம்.? நல்ல பங்குகளில் முதலீடு செய்தது. அப்படி முதலீடு செய்ய பணம் எங்கிருந்து வந்தது..? எல்லாம் நம் அஜித் ஜெயின் இன்ஷூரன்ஸ் பிசினஸை வளர்த்து. கொண்டு வந்த கொட்டிய பிரீமியம் தொகை தான். அட ஆமாங்க. அளவுக்கு அதிகமாக பணத்தைக் கொண்டு வந்து கொட்டியதால் தான் வாரன் பஃபெட் (Warren Buffett)-ஆல் நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய முடிந்தது.

இதுவரை பெர்க்‌ஷர் ஹதவே (Berkshire hathaway)-க்கு சின்ன சின்ன நஷ்டங்கள் வந்திருக்கிறதே ஒழிய, மிகப் பெரிய இன்ஷூரன்ஸ் பிசினஸ் நஷ்டங்களை எல்லாம் சந்தித்ததே இல்லை. அதற்கு முழுமுதற் காரணம் நம் அஜித் ஜெயின்.

அஜித் ஜெயினின் இந்த திறமையை, வாரன் பஃபெட் (Warren Buffett)-யே ஒரு முறை வாய் விட்டு புகழ்ந்தார். "அஜித்தைப் போல இன்ஷூரன்ஸுக்கு அண்டர் ரைட்டிங் செய்யும் திறமை வேறு யாருக்கும் இல்லை. அஜித் அளவுக்கு ரிஸ்கு எடுப்பவர்கள் யாரும் இல்லை. அஜித்தின் மூளை ஒரு ஐடியா ஆலை. எப்போதும் புதிய பிசினஸ் வாய்ப்புகளை தேடிக் கொண்டே இருக்கும்" என புகழ்ந்து தள்ளினார்.

இதை விட வெளிப்படையாக "நான் (வாரன் பஃபெட்), சார்லி முங்கர், அஜித் ஜெயின் என மூவரும் ஒர் மூழ்கும் கப்பலில் இருக்கிறோம். யராவது ஒருவரைக் காப்பாற்ற முடியும் என்றால், நானோ சார்லியோ, அஜித்தை நோக்கி நீந்தினால் போதும். பாக்கி விஷயங்களை அஜித் ஜெயின் பார்த்துக் கொள்வார், நம்மைக் காப்பாற்றிவிடுவார்." என பெர்க்‌ஷர் ஹதவே (Berkshire hathaway) நிறுவனத்தின் ஆண்டறிக்கையில், பங்குதாரர்களுக்கு எழுதும் கடிதத்தில் மனமார பாராட்டி இருந்தார் தலைவர் வாரன் பஃபெட்.

2014-ல் ஒரு ஆண்டறிக்கை கடிதத்தில் "பெர்க்‌ஷர் ஹதவே (Berkshire hathaway) நிறுவனத்தின் இயக்குநர் குழுவும் சரி நானும் சரி, எனக்குப் பின் இந்த நிறுவனத்தை முதன்மைச் செயல் அதிகாரியாக இருந்து வழி நடத்த, ஒரு நல்ல நபர் இருப்பதாக நம்புகிறோம். நான் பதவியில் இருந்து இறங்கி விட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ, அவர் என் பதவிக்கு வருவார். பெர்க்‌ஷர் ஹதவே (Berkshire hathaway) நிறுவனத்தை என்னை விட சில விஷயங்களில் சிறப்பாக வழிநடத்துவார்" எனவும் சொல்லி இருக்கிறார் வாரன் பஃபெட் (Warren Buffett). இத்தனை பிசினஸ் சாதனை படைத்த இந்தியர் தான் வாரன் பஃபெட் (Warren Buffett)-ன் பெர்க்‌ஷர் ஹதவே (Berkshire hathaway) நிறுவனத்தை வழிநடத்தப் போகிறாரா..? காலமும், வாரன் பஃபெட்டும் தான் பதில் சொல்ல வேண்டும்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

who is ajit jain the successor of warren buffett and Berkshire Hathaway in tamil

who is ajit jain the successor of warren buffett and Berkshire Hathaway in Tamil
Story first published: Monday, May 6, 2019, 18:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X