காகித தங்கம் என்னும் பேப்பர் கோல்டு திட்டத்தில் முதலீடு செய்தால், நமக்கு அவசர காலத்தில் பணம் தேவை என்றாலும் கூட உடனடியாக நம்மிடம் உள்ள பேப்பர் கோல்டு திட்டத்தில் உள்ள பணத்தில் இருந்து நமக்கு தேவைப்படு
சென்னை: அட்சய திரிதியை நாளான இன்று நம்மில் 100க்கு 95 சதவிகிதம் பேர் தங்கம் தங்கம் என்று அலைந்து தங்கத்தை மட்டுமே வாங்க முயற்சி செய்வதுண்டு. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு தங்கத்தை உலோகமாக வாங்காமல் வெறும் பேப்பர் வடிவத்திலும் தங்கத்தை வாங்கலாம் என்பது தெரியாது.
காகித தங்கம் என்னும் பேப்பர் கோல்டு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வருமானமும் நாம் எதிர்பார்த்த அளவை விட அதிகமாக இருக்கும். அதோடு இதில் முதலீடு செய்வதால் தங்கம் திருடுபோகும் ஆபத்தும் இதில் கிடையாது.

நாம் தங்கத்தில் முதலீடு செய்தால் அவசர காலத்திற்கு உடனடியாக அதை அடகுவைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். கூடவே அதற்கு வட்டியும் அதிக அளவில் இருக்கும். விற்க வேண்டிய நிலை வந்தால் மிகக் குறைந்த விலைக்கே விற்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படும்.
இதுவே, பேப்பர் கோல்டு திட்டத்தில் முதலீடு செய்தால், நமக்கு அவசர காலத்தில் பணம் தேவை என்றாலும் கூட உடனடியாக நம்மிடம் உள்ள பேப்பர் கோல்டு திட்டத்தில் உள்ள பணத்தில் இருந்து நமக்கு தேவைப்படும் அளவிற்கு மட்டுமே விற்றுவிட்டு பணத்தை எடுத்துக்கொள்ளவும் முடியும்.
மேலும் தங்கத்தை விற்றாலும் அதற்கும் கூட நாம் செய்கூலி, சேதாரம் என்று அதற்கும் தனியாக குறிப்பிட்ட தொகையை தங்கத்தில் இருந்து சுரண்டி எடுத்துவிடுவார்கள். அதுவே பேப்பர் கோல்டு என்றால் அந்தக் கவலையே வேண்டாம். சிறிய அளவில் வரி மட்டுமே பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பேப்பர் கோல்டு முதலீடுகளை இன்றைக்கு பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் எக்சேஞ் ட்ரேட் ஃபண்ட் (Exange Trade Fund- ETF) என்ற பெயரில் தனித்தனியாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிர்வகித்து வருகின்றன. இந்த வகையான திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு தேவைப்படும் தொகை மிகச் சிறியதே.
இவ்வகையான திட்டங்களில் முதலீடு செய்வதற்கு குறைந்த பட்சமாக 5000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் SIP (Systematic Investment Plan) மூலமாகவும் இவ்வகையான திட்டங்களில் முதலீடு செய்யமுடியும்.
மாதாந்தோறும் எஸ்ஐபி முறையில் பேப்பர் கோல்டு திட்டங்களில் முதலீடு செய்வதில் மிகப்பெரிய நன்மை என்னவெனில், வெளிச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் இதனால் பாதிப்பு எதுவும் பேப்பர் கோல்டு திட்டத்திற்கு ஏற்படப்போவதில்லை.


Click it and Unblock the Notifications