ஆன்லைன் மளிகைக்கடையான பிக்பாஸ்கெட்டில் சீனாவின் அலிபாபா ரூ. 1040 கோடி முதலீடு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: ஆன்லைன் சூப்பர் மார்கெட் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு சீனாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் அலிபாபா குழுமம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அலிபாபா நிறுவனமும் தென்கொரியாவின் மிரே அசெட் நிறுவனமும் இங்கிலாந்தின் அரசு நிறுவனமான சிடிசி குழுமத்துடன் இணைந்து சுமார் 1040 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளன.

ஆன்லைன் மளிகைக்கடையான பிக்பாஸ்கெட்டில் சீனாவின் அலிபாபா ரூ. 1040 கோடி முதலீடு

பிரபல பிக்பாஸ்கெட் (Big Basket) இ-காம்ர்ஸ் நிறுவனம் ஆன்லைன் மூலமாக வீட்டிற்கு தேவை மளிகை சாமான்கள் முதல் காய்கறிகள் வரை அனைத்தையும் வீட்டிற்கே கொண்டுவந்து டெலிவரி செய்து வருகிறது. அத்தோடு லாஜிஸ்டிக் சேவையிலும் ஈடுபட்டு வருகிறது.

அட்சய திருதியை 2019: தங்கம் வாங்குவது நீண்டகால முதலீடு - லாபம் அதிகரிக்கும்

ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமேசான், ஸ்விக்கி, க்ராஃபெர்ஸ் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது ஆன்லைன் வர்த்தகம், கிடங்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான முதலீடுகளில் முனைப்பு காட்டி வருகிறது.

மேலும் பிக்பாஸ்கெட் நிறுவனம் தனது டெலிவரி சேவையை பெரு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் அதிவேகமாக பரவிவரும் ஆன்லைன் மளிகை மற்றும் காய்கறி விற்பனையில் தனக்கென தனி முத்திரை வகிக்க போராடி வருகிறது.

தற்போது பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு சீனாவின் பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா குழுமமும், தென் கொரியாவின் மிரே அசெட் நிறுவனமும் இங்கிலாந்தின் அரசு அபிவிருத்தி நிறுவனமான சிடிசி குழுமத்துடன் இணைந்து சுமார் ரூ.1040 கோடியை முதலீடு செய்ய முன் வந்துள்ளன.

புதிய முதலீட்டு ஒப்பந்தம் பற்றி பிக்பாஸ்கெட் நிறுவனம் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. கடந்த 2018ஆம் நிதியாண்டில் அலிபாபா குழுமம் இந்நிறுனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக தன்னை அறிவித்துக்கொண்டது. இந்நிறுவனத்தில் சுமார் 2079 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் அமேசான் நிறுவனத்துடன் போட்டியிவதற்கான தன்னுடைய முதல் அடியினை பிக்பாஸ்கெட் எடுத்துவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பிக்பாஸ்கெட் நிறுவனம் கடந்த 2011ஆம் ஆண்டில் ஹரி மேனன், விஎஸ்.சுதாகர், விபுல் பாரெக், அபினய் சவுத்ரி மற்றும் விஎஸ். ரமேஸ் ஆகியோருடன் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் மளிகை மற்றும் காய்கறி விற்பனை நிறுவனமாக வளர்ந்து இன்றைக்கு சுமார் 32 நகரங்களில் தன்னுடைய கிளைகளைக் கொண்டுள்ளது. பிக்பாஸ்கெட் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட சுமார் 350 முதல் 400 கோடி ரூபாய் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: big basket business
English summary

Big Basket receives Rs.1040 crore investment from Alibaba Group

Big Basket entered into India's mushrooming unicorn club after it raised USD 150 million from Alibaba and Mirae Asset.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X