பினாமிகள் மூலம் ஆர்டர் செய்யும் முதலீட்டாளர்கள்.. அம்புஜா சிமெண்ட் நிறுவனம் புகார்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : முறையாக கணக்கில் வராத பணத்தை வைத்து, போலியான வெப்சைட்களை உருவாக்கி அதன் மூலம் இன்னொருவரின் மூலம் வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் மோசடியான இணையதளங்கள் மூலம் மோசடி செய்ததாக அம்புஜா சிமெண்ட் நிறுவனம் மும்பையில் MIDC காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாம்.

 

இவ்வாறு மோசடி செய்பவர்கள் இந்த நிறுவனத்தின் இணையதளமான ambujacement.ind.in இணையத்தில் மூலமாக ஆர்டர்களை பெற்றுக் கொள்கின்றனர் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பினாமிகள் மூலம் ஆர்டர் செய்யும் முதலீட்டாளர்கள்.. அம்புஜா சிமெண்ட் நிறுவனம் புகார்

இதையடுத்து சைபர் சட்ட வல்லுனரான பிரசாந்த் மாலியின் கூறுகையில், எந்தவொரு வலைத்தளங்களிலும் பரிவர்த்தனை செய்வதற்கு முன்பு வாடிக்கையாளர்களும் சரி நிறுவனமும் சரி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ URL இது எப்போதுமே சரிபார்க்கப்பட வேண்டும். இதுபோன்ற இணையதள மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது, இதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார்.

FMCG துறையின் வளர்ச்சி தேக்கம்..! இந்திய பொருளாதார மந்த நிலையால் பாதிப்பு..!

இவ்வாறு மோசடி தளங்களின் மூலம் பொருட்களை ஆர்டர் செய்பவர்கள், ஆர்டைரை இணையதளத்தில் உறுதி செய்து கொண்டு, பின் பொருள் வாங்குபவர்களிடமும் இன்வாய்ஸ் மூலமாகவோ உறுதி செய்து கொள்கின்றனர்.

ஆனால் பொருட்களை டெலிவரி செய்வது ரசீதில் குறிப்பிட்ட படி இல்லாமல் ஏமாற்றுகின்றனவாம். இந்த மோசாடியாளர்கள் முன்கூட்டியே பணத்தையும் செலுத்தியும் விடுவதால் அதை மறுக்கவும் முடிவதில்லையாம். இவ்வாறு ஒரு நிறுவனத்திலிருந்து திட்டமிடப்பட்டு பொருட்களை வினியோகிக்கும் வரை திட்டமிட்டு உறுதிபடுத்திக் கொள்கின்றனர் இந்த மோசடி இணையதளங்கள்.

மேலும் இவ்வாறு மோசடி செய்ததில் அம்புஜா சிமெண்ட்ஸ் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், இதன் மூலம் குறிப்பிட்ட தொகையும் இழந்துள்ளதாகவும் கூறுகிறது. மேலும் இதன்படி நாடு முழுவதும் 3 பேர் உள்ளதாகவும், இவர்கள் தங்களது பினாமி வங்கிக் கணக்கின் மூலம் அட்வான்ஸ் தொகையை செலுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளது இந்த நிறுவனம்.

 

இவ்வாறு சிமெண்ட் ஆர்டர் செய்தவர்களில் ஒருவர் தானேவைச் சேர்ந்தவர் என்றும், இன்னொருவர் பூனேவை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளது இந்த நிறுவனம். இது குறித்து காவல்துறையின் சார்பில் கூறப்படுவதாவது, இவ்வாறு நிறுவனத்தை ஏமாற்றி பொருட்களை வாங்கிச் செல்லும் மோசாடியாளர்களால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதுடன், நிறுவனத்தின் இன்வாய்ஸ் பில்லயும் வைத்திருப்பதால், இது நிறுவனத்தியயும் பாதிக்கும் என்றும் கூறுகின்றனவாம்.

இதுகுறித்து வங்கியாளர்கள் கூறுகையில், தற்போதைய சூழலில் நிறுவனங்கள் உருவாக்கிய வலைதளங்கள் மட்டும் மோசமானவையாக அல்ல. பயனர்கள் கொடுத்துள்ள தகவல்களும் போலியாக உள்ளன. அவர்கள் கொடுத்துள்ள ஹெல்ப் லைன் எண்கள் கூட போலியானவையாகவே உள்ளன என்றும் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

cheaters cement buyers using fake websites

Ambuja Cements has filed a complaint against a fake website created by fraudsters. customers of the cement company by directing them to al benami account.
Story first published: Tuesday, May 7, 2019, 17:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X