ரூ.213 கோடி லாபம் ஈட்டிய மாரிக்கோ.. துரிதமான மார்கெட்டிங் சேவையே காரணம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : நுகர்பொருட்கள் துறையில் ஈடுபட்டு வரும் மாரிக்கோ நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 18% லாபம் அதிகரித்து, இதன் நிகரலாபம் 213 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதுவே கடந்த 2019-ம் நிதியாண்டில் அதன் லாபம் 14% அதிகரித்து ₹ 930 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

 

இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் சந்தைப்படுத்துதல் செலவினமானது 20.8% ஆக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் 21.8% இருந்தது குறிப்பிடத்தக்கது. 2019 ம் நிதியாண்டிற்கான மார்ஜின் தொகையும் 19.6% சதவிகிதமாக குறைந்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் 21.3% இருந்தது குறிப்பிடத்தக்கது.

புரோக்கரேஜ் நிறுவனமான எடில் வைஷ் நிறுவனம் மாரிக்கோ நிறுவனத்தின் வால்யூம் 6.5 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 8 சதவிகிதமாக வால்யூம் அதிகரித்திருக்கிறது. ஒரு நிறுவனத்தின் வால்யூம் வளர்ச்சி, அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருக்கும் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது.

கடன் பிரச்சனையால் சொத்தை விற்கும் ஏர் இந்தியா.. ரூ.1400 கோடிக்கு வாங்க மஹாராஷ்டிரா அரசு விருப்பம்

பாரசூட் ஹேர் ஆயில் 6% வளர்ச்சி

பாரசூட் ஹேர் ஆயில் 6% வளர்ச்சி

இந்த நிலையில் மும்பை அடிப்படையாக கொண்ட நிறுவனமான பாராசூட் ஹேர் ஆயில் நிறுவனம் 6% வளர்ச்சியை அறிவித்துள்ளது. அதே சமயம் கோப்ரா (உலர்ந்த தேங்காய் ) விலைகள் 19 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த காலத்தில் தான் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே கடந்த ஆண்டு இதே நிதியாண்டில் புதினா வளர்ச்சி 9% கண்டுள்ளது.

கோப்ரா விலை குறைவு

கோப்ரா விலை குறைவு

இந்த நிலையில் கோப்ராவின் ( உலர்ந்த தேங்காய்) விலை குறைந்ததையடுத்து மாரிக்கோவின் வரும் காலாண்டு முடிவுகளில் இதன் எதிரொலி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பிரான்சிஸ் நிறுவனமான நிகார் நேச்சுரல்ஸ் மற்றும் ஆயில் ஆப் மலபார் (Nihar Naturals and Oil of Malabar) நிறுவனத்தின் வளர்ச்சி 59.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

சப்ஃபோலா ஆயில் 18% வளர்ச்சி
 

சப்ஃபோலா ஆயில் 18% வளர்ச்சி

இந்த நிறுவனத்தின் சப்ஃபோலா ஆயில் 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆக மொத்தம் இந்த நிறுவனத்தின் மொத்த வர்த்தக வளர்ச்சிக்கும் காரணம் மார்கெட்டிங் ஆகும். மின் வணிகம் மற்றும் நவீன வர்த்தகம் மூலம் விற்பனையை மீண்டும் நிலை நிறுத்துவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கவனம், மார்க்கெட்டிங் முயற்சிகள் இந்த வளர்ச்சி அடைவதற்கு காரணமாயிருந்தன.

நீல்சன் வளர்ச்சி குறைந்தது

நீல்சன் வளர்ச்சி குறைந்தது

இதோடு நீல்சன் நிறுவனத்தின் வளர்ச்சி 11 - 12% அதன் வளர்ச்சியை முன்னெடுத்துள்ளன. இதே இதற்கு முந்தைய ஆண்டு 13 - 14% இருந்தது.

இதுவே முன்னணி நுகர்பொருள் நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் 7% வளர்ச்சி கண்டு, லாபம் இரு மடங்கு அதிகரித்துள்ளது.

பிரிட்டானியா 7% வளர்ச்சி

பிரிட்டானியா 7% வளர்ச்சி

இதுவே பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியா 7% வளர்ச்சி கண்டுள்ளது. இதுவே வாடிக்கா ஷாம்பு தயாரிப்பாளரான டாபர் இந்திய அதன் நிகரலாபம் 6.5 சதவிகிதம் குறைந்து 371.5 கோடி ரூபாயாக லாபம் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: marico
English summary

Marico Q4 profit rises 18% at Rs.213 crore

Marico Ltd’s net profit grew 18% to touch 213 crore in Q4 (year-on-year basis), in line with analysts estimates. Its profit for the financial year 2019 grew by 14% to Rs.930 crore.
Story first published: Tuesday, May 7, 2019, 9:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X