விலையேற்றம் இல்லை.. லாபத்தை அதிகரிக்க புதிய யுக்திகள்.. அமுல் பால் அறிவிப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : முன்னணி நிறுவனமான அமுல் பால் நிறுவனம் பால் விற்பனையை குஜராத் மாநிலத்திலத்திலும், பால் துணைப் பொருட்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகின்றது. இதோடு இந்த நிறுவனம் அயல் நாடுகளுக்கு 200 கோடி மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதியும் செய்கின்றது.

 

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் 2019 - 2020-ம் ஆண்டில் இந்த நிறுவனம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் அடிப்படையில் 20% வளர்ச்சி காணும் என்று இந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் நாங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 22% வளர்ச்சி கண்டோம், இதுவே நடப்பு 2019 - 2020-ம் வருடத்தில் 20 வளர்ச்சியை கொண்டு வருவோம் என்றும், இதுவே கடந்த ஆண்டில் 13% சதவிகித வளர்ச்சியை மட்டுமே கண்டோம் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

TCS உலகின் 3-வது பெரிய ஐடி நிறுவனம் ஆகலாம்..! டி எக்ஸ் சி (DXC) நிறுவன முடிவுக்காக வெயிட்டிங்..!

லாபம் கணக்கு வைக்கல

லாபம் கணக்கு வைக்கல

இதற்கு காரணம் நாங்கள் பொருட்களின் விலையை அதிகரிக்கவில்லை. ஏனெனில் வால்யூம் அடிப்படையில் தொழிலை கவனித்தோமே தவிர லாபத்தை கணக்கில் கொள்ளவில்லை. இதனாலேயே வளர்ச்சி அதிகரித்திருந்தாலும் லாபம் குறைந்தது.

குளிரூட்டப்பட்ட பொருட்களை கொண்டு செல்வோம்

குளிரூட்டப்பட்ட பொருட்களை கொண்டு செல்வோம்

எனினும் நடப்பு ஆண்டில் லாபத்தை அதிகரிப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக மின்சார கொள்முதல், சிறந்த மின்சார உள்கட்டமைப்பு வசதி, அதோடு கிராமப்புறங்களில் குளிரூட்டப்பட்ட பொருட்களையும் கொண்டு செல்வோம், ஆனால் பொருட்களின் விலையில் ஏதும் மாற்றம் இல்லை என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அமுல் தான் ஸ்பான்சர்
 

அமுல் தான் ஸ்பான்சர்

இது குறித்து இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி கூறுகையில்,

நடைபெற உள்ள ICC உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அமுல் நிறுவனம், உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரதான ஆதரவாளரான அமுல் பால் நிறுவனம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு வளர்ச்சி 13%

கடந்த ஆண்டு வளர்ச்சி 13%

அதோடு கடந்த நிதியாண்டில், ஜி.சி.எம்.எம்.எஃப் நிறுவனம் அதன் வளர்ச்சி (Turnover) 13,1% அதிகரித்து, 33,150 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதோடு பால் வணிகம் தவிர மற்ற வருவாய் 14% அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறார்.

லஸ்சி மற்றும் ஷேக் வளர்ச்சி

லஸ்சி மற்றும் ஷேக் வளர்ச்சி

இதோடு பாலை அடிப்படையாக கொண்ட லஸ்சி மற்றும் ஷேக் (lassi and shakes) போன்ற பொருட்கள் 15-20% வளர்ந்து வருவதாகவும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'ட்ரு' (Tru) 12-15% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

காலாண்டு முடிவுகள் பரவாயில்லை

காலாண்டு முடிவுகள் பரவாயில்லை

மேலும் கடந்த மார்ச் காலாண்டில் நுகர் பொருட்களின் விற்பனை குறைந்துள்ளது கவலையை அளித்தாலும், அதன் காலாண்டு முடிவுகளில் இதன் முடிவை பார்த்த போதில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறார்.

வீட்டின் அடிப்படை பொருள்

வீட்டின் அடிப்படை பொருள்

லாபம் அதிகரித்துள்ளது எப்படியெனில் ஒரு வீட்டின் அடிப்படை தேவையான நுகர் பொருட்களில் அமுலும் ஒன்று. இதனாலேயே இதன் நுகர்வை குறைக்க முடியாது. அதோடு உயர்தர பொருட்கள் விற்பனை குறைவானதாக இருக்கலாம், ஆனால் இது போன்ற உணவு சார்ந்த உணவு பொருட்கள் அல்ல என்றும் கூறுகிறார் சோதி.

முதலீடு ரூ.600 – 800 கோடி

முதலீடு ரூ.600 – 800 கோடி

மேலும் இந்த ஆண்டு 600 - 800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும். அதன் உற்பத்தி திறன் மற்றும் ஆராய்ச்சியை உயர்த்தவும், மேலும் அதன் சந்தைப் பங்குகளை பராமரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: amul அமுல்
English summary

Amul to grow at 20% in 2019-20

The Gujarat Cooperative Milk Marketing Federation Ltd which markets milk and dairy products under the Amul brand, amul said that it will grow at 20% in 2019-20 on the back of milk-based products
Story first published: Wednesday, May 8, 2019, 17:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X