சத்தியமா எனக்கு தெரியாது.. நெஸ் வாடியா கைதா.. பிரிட்டானியா கேள்வி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பிரிட்டானியா நிறுவனம் அதன் விளம்பரதாரரும், இயக்குனருமான நெஸ் வாடியா கைதான விபரத்தை, பங்குச் சந்தைகளுக்கு தெரிவிக்காமல் மறைத்தது விதிமீறல் என ஆலோசனை நிறுவனமான இன்கவர்ன் தெரிவித்துள்ளது.

 

இது குறித்து, ஆலோசனை நிறுவனமான இன்கவர்ன் நிறுவனத்தின் ஸ்ரீராம் சுப்ரமணியன் கூறியதாவது, ஏற்கனவே பிரிட்டானியா நிறுவனம் அதன் விளம்பரதாரரும், இயக்குனருமான நெஸ் வாடியா கைதான விபரத்தை, பங்குச் சந்தைகளுக்கு தெரிவிக்காமல் மறைத்தது விதிமீறலாகும். இது பிரிட்டானியா நிறுவனத்தால் நடக்கவில்லை என்றாலும், அந்த நிறுவனத்தில் உள்ள ஒரு இயக்குனாரால் நடத்தப்பட்டது. இது விதிமீறலாகும் என்றும் ஸ்ரீராம் கூறியுள்ளார்.

சத்தியமா எனக்கு தெரியாது.. நெஸ் வாடியா கைதா..  பிரிட்டானியா  கேள்வி

மேலும் தொழில் துறையில் முக்கிய கிங்கான வாடியா குழுமம், பஞ்சாப் கிரிக்கெட் அணியின் இணை உரிமையாளரும் ஆகும். நெஸ் இந்த வாடியா குழுவினருக்கு வணிக உரிமையாளர் வாரிசும் ஆவார். ஆனால் இவரிடம் இருந்து சுங்க அதிகாரிகள் போதை மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பின்னர் அவர் வடக்கு ஜப்பான் தீவில் ஹொக்கிடோவில் புதிய சிட்டோஸ் விமான நிலையத்தில் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார் என்றும் ஸ்ரீராம் கூறியுள்ளார்.

ஜப்பானில் போதை மருந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நெஸ் வாடியாவுக்கு ஐந்தாண்டு காலம் கண்காணிப்பு தண்டனை விதிக்கப்பட்டுதாம். இந்த விபரத்தை பிரிட்டானியா பங்குச் சந்தை வாரியத்துக்கு தெரியாமல் மறைத்தது அப்பட்டமான உண்மை. இது பங்கு சந்தையின் விதி மீறலாகும் என்றும் கூறியுள்ளார்.

வர்த்தகத் தடைகளை புதிய அரசு நீக்கும் - அமெரிக்கா எதிர்பார்ப்பு

ஆனால் உண்மையை எவ்வளவு நாளைக்கு மறைக்க முடியும், இந்த விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்த பின், பிரிட்டானியா கடந்த மே-2ம் தேதி பங்குச் சந்தைகளுக்கு அளித்த அறிக்கையில், வாடியா கைது விபரம் தனக்கு தெரியாது என்றும், தற்போது தான் தெரிய வந்தது எனவும் கூறியுள்ளது.

 

ஒரு நிறுவனத்தின் விளம்பரதாரரும் இயக்குனருமான ஒருவர் கைது செய்யப்பட்ட விஷயம் தெரியவில்லை என்று சொல்வது நம்பும் படியாகவா உள்ளது. இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல அல்லவா இருக்கிறது. பங்குச் சந்தை பட்டியலில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும், அதன் அனைத்து செயல்பாடுகள், முறைகேடுகள், நிறுவனர்கள் மீதான வழக்குகள் உள்ளிட்ட விபரங்களை, பங்குச் சந்தைகளுக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் பிரிட்டானியா அவ்வாறு செய்யத் தவறிவிட்டது.இது விதி மீறிய செயலாகும்.

மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் பண்புகளின் நலனை கருத்தில் கொண்டு, பிரிட்டானியா இயக்குனர் குழு நெஸ் வாடியா போன்ற நிர்வாக இயக்குனரால் நிறுவனத்திற்கு நன்மையா என, தங்களுக்குள் கேள்வி எழுப்ப வேண்டும். இதோடு நெஸ் வாடியாவை, அனைத்து பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்றும் ஸ்ரீராம் கூறியுள்ளராம்.

இதனிடையே நெஸ் வாடியா எழுதிய கடிதத்தை, பிரிட்டானியா மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ளது. அதில் தான், சந்தேகத்தின் பேரிலான போதை மருந்து வழக்கில் கண்காணிப்பு தண்டனை பெற்றதாகவும், சிறைத் தண்டனை அல்ல என தெரிவித்துள்ள வாடியா, தற்போது இந்தியாவில், வழக்கம் போல நிறுவனப் பணிகளை கவனித்து வருவதாக கூறியுள்ளாராம். இதனால் நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறியுள்ளராம் நெஸ்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Britannia violated Sebi listing norms on Wadia arrest

Britannia Industries violated listing regulations in not reporting the arrest of its promoter and director Ness wadia.
Story first published: Wednesday, May 8, 2019, 10:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X