கூகுள் ஷாப்பிங்: அமேசானுக்கு போட்டியாக வந்துவிட்டது கூகுளின் யூடியூப் ஷாப்பிங் தளம்

கூகுள் எக்ஸ்பிரஸ் மார்க்கெட்பிளேஸ் என்ற விளம்பரப் பிரிவுக்கு கூகுள் ஷாப்பிங் என பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நடப்பு 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கூகுள் நிறுவனத்தின் விளம்பர வருவாய் கடும் வீழ்ச்சி அடைந்ததால் வருவாயை உயர்த்தும் விதத்தில் புது முயற்சியாக தனது யூடியூப் இணையதளத்தின் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. கூகுள் எக்ஸ்பிரஸ் மார்க்கெட் ப்ளேஸ் இனி கூகுள் ஷாப்பிங் எனவும் பெயர்மாற்றம் செய்யப்பட உள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட் போன்றவை இணையதள விளம்பரங்கள் மூலம் அசுர வளர்ச்சியடைந்து லாபம் ஈட்டுவதைத் தொடர்ந்து தற்போது கூகுள் நிறுவனமும் தனது பாதையை மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளது.

கூகுள் ஷாப்பிங்: அமேசானுக்கு போட்டியாக வந்துவிட்டது கூகுளின் யூடியூப் ஷாப்பிங் தளம்

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எதையும் ஆர அமர உட்கார்ந்து யோசிக்கவும், சாப்பிடவும், ஏதாவது ஷாப்பிங் செய்ய வேண்டுமென்றால் அதற்காக தனியாக நேரத்தை செலவிடவும் முடியாத நிலை உள்ளது.

நம்முடைய அவசர கதியை நன்கு புரிந்துகொண்ட வர்த்தக நிறுவனங்கள் நம் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, நமக்கு தேவையான உணவுப் பொருட்கள் முதல் அனைத்துவித பொருட்களையும் நாம் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கே கொண்டுவருகின்றன.

இவற்றில் முன்னணியில் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் உள்ளன. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக போட்டி போட்டு அவ்வப்போது அதிரடியாக பல சலுகைகளை அள்ளி வழங்கி வருகின்றன. இதனால் இவற்றின் வருவாய் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.

அமேசான் நிறுவனம் தனது விளம்பரங்களின் மூலமே வாடிக்கையாளர்களை கவர்ந்து அதிக லாபம் ஈட்டி வருவதால், தற்போது புது முயற்சியாக தனது தளத்திலேயே பொருட்களுக்கான வீடியோ விளம்பரங்களை புகுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் இதன் வருவாய் மேலும் அதிகரிக்கக்கூடும்.

அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சியை பார்த்து பிரமித்துள்ள கூகுள் நிறுவனமும் தற்போது தன்னுடைய வீடியோ இணையதளமான யூடியூப் (YouTube) சேனல் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கான வசதியை பார்வையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகம் செய்யப்போகிறது.

நடப்பு 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கூகுள் நிறுவனத்தின் விளம்பர வருவாய் வீழ்ச்சியடைந்த காரணத்தினால் தான் தனது பாதையை மாற்ற முன்வந்துள்ளது. யூடியூப் சேனல் மூலமாக பொருட்களை விளம்பரப்படுத்தி ஷாப்பிங் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

யூடியூப் சேனிலில் வீடியோவிற்கு கீழே ஒவ்வொரு பொருட்களின் விலையுடன் இணைப்புகள் தோன்றும். நமக்கு தேவையான இணைப்புகளை தேர்வு செய்து அந்தப் பொருளை ஆன்லைன் மூலமாகவே வாங்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும கூகுள் நிறுவனம் தனது விளம்பரப் பிரிவையும் (Google Market Place) கூகுள் ஷாப்பிங் (Google Shopping) என்று பெயர் மாற்றம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

வர்த்தகத் தடைகளை புதிய அரசு நீக்கும் - அமெரிக்கா எதிர்பார்ப்பு வர்த்தகத் தடைகளை புதிய அரசு நீக்கும் - அமெரிக்கா எதிர்பார்ப்பு

விளம்பர வருவாயை அதிகரிப்பதற்காக எடுத்துள்ள புது முயற்சியின் மூலம் கூகுள் நிறுவனம் தனது போட்டி நிறுவனமான அமேசானுக்கு கடும் சவாலைக் கொடுக்கக் கூடும் என்று தெரிகிறது.

கூகுள் நிறுவனத்தின் கூகுள் ஷாப்பிங் சேவை தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதன்மூலம் அமேசான், ஃபிளிப்கார்ட், மிந்த்ரா போன்ற வர்ததக இணையதளங்களை ஒருங்கிணைத்து அளிக்கும் சேவை தளமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google Introduce shopping link through YouTube Channel

The Google search engine introduce new plan to customers. It is testing a new shopping experience where it should display links to products through YouTube Channel according to report.
Story first published: Wednesday, May 8, 2019, 10:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X