ஐ.ஓ.பி ரூ.850 கோடி நிதி திரட்ட திட்டம்.. சொத்துக்கள் விற்பனை மூலம் திரட்டுகிறதாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடப்பு நிதியாண்டில் 850 கோடி ரூபாய் நிதியாக திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது.

 

இது நிதி திரட்டல் குறித்து மும்பை பங்கு சந்தையிடம் கூறியதாவது, தனது மூலதன இருப்பை அதிகரித்துக் கொள்ள அனைத்து வகையிலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தீவிரமாக யோசித்து வருகிறது. பரிசீலித்தும் வருகிறது.

ஐ.ஓ.பி ரூ.850 கோடி நிதி திரட்ட திட்டம்.. சொத்துக்கள் விற்பனை மூலம் திரட்டுகிறதாம்

அதன் ஒரு பகுதியாக சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை விற்பனை செய்து முதலீடுகளை விற்பனை செய்து நிதி திரட்ட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல கூட்டு திட்டங்கள் மூலம் வளங்களை பெருக்குவதற்காக வங்கி, தனது பங்குகளை விற்பனை செய்யும் வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

மோடி ஆட்சியில் ஜிடிபியை அதிகமாக காட்ட நடந்த தில்லாலங்கடி..! தோலுறித்த என்.எஸ்.எஸ்.ஓ..!

மேலும் இதன் வாயிலாக வங்கிக்கு 445 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என்று மும்பை பங்கு சந்தையிடம் கூறியுள்ளது இந்த வங்கி.

இவ்வங்கி மூலதனத்தை உயர்த்துவதற்கான மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, வங்கியானது சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் பிரதான சொத்துக்கள் உட்பட மொத்தம் 32 சொத்துக்களை அடையாளம் காட்டியுள்ளது.

கடந்த 2018 - 2019-ம் நிதியாண்டில் மட்டும் இந்த வங்கிக்கு சொந்தமான ஆறு சொத்துக்களை விற்று 129 கோடி ரூபாய் வரை திரட்டியது.

மேலும் 26 சொத்துகளை விற்கும் வகையில் ஏற்கனவே அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. இந்த சொத்துகளின் மதிப்பு ரூ.775 கோடியாகும். இது தொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதன் பங்குதாரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IOB Bank eyes to raise Rs.850 cr

Public sector Indian Overseas Bank on Monday plans to raise about Rs 850 crore during the current financial year through sale of non-core assets, to augment capital.
Story first published: Wednesday, May 8, 2019, 14:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X