டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டியிலே அன்னதானம்.. ஒரு நாளைக்கு ரூ.30 லட்சம் செலவாகிறதாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருப்பதி : நம்மூர்களில் பணக்கார சாமி என்று பலரும் சொல்லும் கோவில் திருப்பதியே. ஆமாம் அந்த கோவிலின் சொத்து மதிப்பும், விலையுயர்ந்த ஆபரணங்கள் மதிப்பும் பல ஆயிரம் கோடியே. இதனால் தான் அவர்கள் அப்படி சொல்லிருக்கிறார்கள் போலும்.

இது ஒரு புறம் இருக்க திருப்பதியில் ஒரு நாளைக்கு உணவுக்கான செலவு மட்டும் 26 லட்சமாம். இதில் காலை உணவுக்கு ரூ.6 லட்சமும், மதிய உணவுக்கு ரூ.10 லட்சமும், இரவு உணவுக்கு ரூ.10 லட்சமும் செலவாகிறதாம், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இது பழைய கணக்குதானாம்.

புதிய கணக்கின் படி காலை உணவுக்கு 7 லட்சம் ரூபாயும், மதிய உணவுக்கு ரூ.11.5 லட்சமும், இரவு உணவுக்கு ரூ.11.5 லட்சமும் செலவு செய்கிறதாம். ஆனால் தற்போது நிலவி வரும் விலையேற்றம் காரணமாக இந்த செலவு அதிகரித்துள்ளதாகவும் இந்த கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளதாம்.

விலையேற்றம் இல்லை.. லாபத்தை அதிகரிக்க புதிய யுக்திகள்.. அமுல் பால் அறிவிப்பு விலையேற்றம் இல்லை.. லாபத்தை அதிகரிக்க புதிய யுக்திகள்.. அமுல் பால் அறிவிப்பு

பள்ளி, மருத்துவமனைகளிலும் இலவச உணவு

பள்ளி, மருத்துவமனைகளிலும் இலவச உணவு

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் திருப்பதியில் மட்டும் இல்லாமல், திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாஸம், அரசு மருத்துவமனை, ஆயூர்வேத மருத்துவமனை, திருச்சானூர் கோயில், அரசு பள்ளிகளில் உள்ளவர்கள் என பலருக்கு இலவச உணவு வழங்கப்படுகிறதாம்.

12,500 லிட்டர் பால்

12,500 லிட்டர் பால்

அதோடு தரிகோண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவனிலும் தினமும் 16.5 டன் அரிசியும், 6.5 - 7.5 டன் காய்கரிகளும் அன்னதானத்திற்காக பயன்படுத்தப்படுகின்றதாம். அதோடு தினமும் 12,500 லிட்டர் பாலும் பக்தர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுகிறதாம்.

தினமும் 2 லட்சம் பேருக்கு உணவு

தினமும் 2 லட்சம் பேருக்கு உணவு

இவ்வாறு தினசரி திருப்பதி தேவஸ்தானத்தில் அளிக்கப்படும் உணவானது ஒரு நாளைக்கு 2 லட்சம் பேருக்குவழங்கப்படுகிறதாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில் இது சாதரண நாட்களில் மட்டுமேயாம். இதுவே ஏதேனும் விஷேச நாட்களில் 3 லட்சம் பேருக்கும் அதிகமாக வருவார்களாம்.

உணவுக்கு காணிக்கை

உணவுக்கு காணிக்கை

இனி உணவுக்கு காணிக்கையாக கொடுப்பவர்கள் ஒரு நாளைக்கு ரூ.30 லட்சம் கொடுக்க வேண்டுமாம். இதே ஒரு வேளை உணவுக்கு மட்டும் காணிக்கை கொடுக்க நினைப்பவர்கள் காலை ரூ.7 லட்சமும், இதே மதிய இரவு உணவுகளுக்கு காணிக்கையாக கொடுக்க நினைப்பவர்கள் ரூ.10 லட்சமும் கொடுக்க வேண்டியிருக்குமாம்.

டெபாசிட் பணத்தின் வட்டி மூலமே அன்னதானம்

டெபாசிட் பணத்தின் வட்டி மூலமே அன்னதானம்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா நித்ய அன்னதானத் திட்ட அறக்கட்டளைக்கு இதுவரை 4,76,000 பேர் காணிக்கை வழங்கியுள்ளனர். இதன் மூலம் ரூ.1071 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாம். இதில் கவனிக்க விஷயம் என்னவெனில் இதன் மூலம் வரும் வட்டியே தினசரி அன்னதானதிற்கு உபயோகப்படுத்தப் படுகிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tirupati annadanam cost Rs.27lakh per day

TTD seva anna prasadam trust has revised the donation amount for single day owing hike in the prices of commodities
Story first published: Wednesday, May 8, 2019, 18:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X