இனி Iran-யிடம் இருந்து கச்சா எண்ணெய் & கனிம வளங்களை வாங்கக் கூடாது..! அமெரிக்கா அதிரடி உத்தரவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாசிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒருபக்கம் சீன பொருட்கள் மீது கூடுதலாக வரி விதித்துக் கொண்டிருக்கிறார். மறு பக்கம், ஈரானிடம் இருந்தும் யாரும் இனி ஸ்டீல், இரும்பு போன்ற கனிம வளங்களையும் வாங்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதாங்க பொருளாதாரத் தடை.

ஆம் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மட்டுமல்ல, இரும்பு போன்ற சுரங்கம் சார்ந்த கனிம வளப் பொருட்களையும், யாரும் வாங்கக் கூடாது எனப் பொருளாதாரத் தடை விதித்திருக்கிறார்.

மேலும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீண்டு கொண்டே இருக்கும். முதலில் ஈரானின் மிகப் பெரிய வருவாயான கச்சா எண்ணெய்க்கு தடை விதித்தோம், இப்போது அதற்கு அடுத்து அதிக வருவாயை ஈட்டும் ஸ்டீல் மற்றும் சுரங்கம் சார்ந்த பொருட்களுக்கும் பொருளாதாரத் தடை விதித்திருக்கிறோம். ஈரான் தன் நிலையில் இருந்து முழுமையாக மாறும் வரை, Joint Comprehensive Plan of Action-திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் வரை, புதிய புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துக் கொண்டே இருப்போம் என எச்சரித்திருக்கிறது அமெரிக்கா.

அதிரடியாய் களத்தில் இறங்கிய வோடபோன்.. 7 சர்வதேச வங்கிகளுடன் களத்தில் குதிக்கும் குழுமம் அதிரடியாய் களத்தில் இறங்கிய வோடபோன்.. 7 சர்வதேச வங்கிகளுடன் களத்தில் குதிக்கும் குழுமம்

பழைய கதை

பழைய கதை

கடந்த 2015-ம் ஆண்டு தான் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஒருங்கிணைந்த ஐரோப்பிய ஒன்றியம், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் ஒன்று சேர்ந்து Joint Comprehensive Plan of Action என ஒரு ஒப்பந்தத்தில் ஈரானை கையெழுத்து போட வைக்கிறார்கள். இந்த ஒப்பந்தப் படி ஈரான் அனைத்து சில விஷயங்களை கவனமாக கடை பிடிக்க வேண்டும். மீறினால் பொருளாதாரத் தடை தான்.

சரத்துக்கள்

சரத்துக்கள்

மேலே சொன்ன Joint Comprehensive Plan of Action ஒப்பந்தப் படி 1. தன்னிடம் இருக்கும் செரிவூட்டிய யுரேனியத்தில் 98 சதவிகிதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். 2. அடுத்த 15 ஆண்டுகளுக்கு தற்போது ஈரானிடம் இருக்கும் யுரேனியத்தின் அளவில் வெறும் 3.67 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே யுரேனியத்தைச் செரிவூட்ட வேண்டும். 3. ஈரானிடம் இருக்கும் கேஸ் செண்ட்ரிஃப்யூக்ஸ்களின் எண்ணிக்கையை, அடுத்த 13 ஆண்டுகளுக்கு மூன்றில் இரண்டு பங்காக குறைத்துக் கொள்ள வேண்டும். 4. அடுத்த 10 ஆண்டுகளுக்கு யுரேனியத்தைச் செரிவூட்ட முதல் தலைமுறை கேஸ் செண்ட்ரிஃப்யூக்ஸ்களையே பயன்படுத்த வேண்டும். 5. அடுத்த 15 ஆண்டுகளுக்கு புதிதாக ஈரானில் எந்த ஒரு புதிய கண நீர் ஆலையையும் கட்டக் கூடாது.... இப்படி இன்னும் சில விதிகள் இருக்கின்றன.

கண நீர்
 

கண நீர்

மேலே சொன்ன அனைத்து கோரிக்கைகளையும் ஈரான் ஏற்றும் கொண்டு செயல்படுத்த வேண்டும். ஈரானின் செயல்பாட்டை கண்காணிக்க, சர்வதேச அணுசக்தி அமைப்பு தொடர்ந்து ஈரானுக்கு விசிட் அடிக்கும். சர்வதேச அமைப்புகளுக்கு அறிக்கையும் கொடுக்கும். இவைகளை எல்லாம் ஒப்புக் கொண்டால், அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஏற்கனவே ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்றார்கள். ஈரான் டீலில் கையெழுத்து போட்டது, சொன்ன படி அத்தனை உலக நாடுகளும், ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்கினார்கள்.

ட்ரம்ப்

ட்ரம்ப்

எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட ஈரான், ஒபாமா ஆட்சிக் காலத்தில் சந்தோஷமாக அடுத்த வேலையில் இறங்கியது. சிறப்பாக வியாபாரம் பார்க்கத் தொடங்கினார்கள். கச்சா எண்ணெய்ச் சந்தையில் நல்ல முன்னேற்றம் கண்டார்கள் ஈரானியர்கள். ஆனால் 2016-ல் பதவிக்கு வந்த ட்ரம்ப், இந்த Joint Comprehensive Plan of Action ஒப்பந்தத்தையே கேள்விக்குறி ஆக்கிவிட்டார். ஈரான் ஒரு சில பழைய அணு ஆயுதங்களை தங்கள் கூட்டமைப்பு நாடுகளின் கவனத்துக்கு கொண்டு வரவில்லை என கொஞ்சமாக பிரச்னையைக் கிளற ஆரம்பித்தார்கள் அமெரிக்கர்கள்.

3 காரணங்கள்

3 காரணங்கள்

1. அதோடு ஈரான் புதிதாக கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கக் கூடிய Ballistic ஏவுகனைகளைப் பற்றிப் பேசாதது,
2. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அணு உலை, கேஸ் செண்ட்ரிஃப்யூக்ஸ்களை பயன்படுத்தாமல் இருக்கச் சொன்னதுக்கு சம்மதம் தெரிவிக்காதது,
3. 12 மாதங்களில் ஈரானால் ஒரு அணு குண்டைத் தயாரிக்க முடியும் என்கிற விஷயத்தை ஒப்புக் கொள்ளாமல் இருப்பது
போன்ற விஷயங்களைக் காரணம் காட்டி அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டது .

மற்ற நாடுகள் ஆதரவு

மற்ற நாடுகள் ஆதரவு

அமெரிக்கா பின் வாங்கியதை மற்ற கூட்டமைப்பு நாடுகளும் ஆதரித்தன. சில மாதங்களுக்குப் பிறகு, ஈரானும் Joint Comprehensive Plan of Action ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட விதிமுறைகளை மீறி, யுரேனியத்தை அதிக அளவில் செரிவூட்டத் தொடங்கியது. பிரச்னை முற்றிவிட்டது. உலகமே அமெரிக்காவையும், ஈரானையும் உற்றுப் பார்க்கத் தொடங்கினார்கள். அதுவரை சும்மா இருந்த ரஷ்யா கூட ஈரான் தவறு செய்துவிட்டதாகச் சொல்லத் தொடங்கியது.

பொருளாதாரத் தடை

பொருளாதாரத் தடை

ஈரானுக்கு மரண அடி கொடுக்க வேண்டும், குறிப்பாக பொருளாதார ரீதியாக அடிக்க வேண்டும், என்பதற்காகத் தான், அமெரிக்கா, ஈரானிடம் இருந்து யாரும் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என பொருளாதாரத் தடையை நவம்பர் 2018-ல் விதித்தது. இப்போது ஈரானிடம் இருந்து சுரங்கத்தில் இருந்து எடுக்கப் படும் இரும்பு, ஸ்டீல் போன்ற உலோகங்களையும், கனிம வளங்களையும் வாங்கக் கூடாது என பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. மேலும் ஈரானின் அனைத்து அந்நிய நாட்டு வருவாய்களிலும் கை வைப்பேன் எனச் சொல்லாமல் சொல்கிறது. ஈரானைக் கொள்ளாமல் கொள்கிறது அமெரிக்கா. உலகின் பாதுகாவலன் அமெரிக்கா, நம்மை ரட்சித்துக் கொண்டிருக்கிறார். அங்கே ஈரான் அன்றாட செலவுகளைச் செய்யக் கூட பணம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Iran foreign income has to come to zero till American will impose more sanctions

america will impose more economic sanction on iran till irans income falls to zero
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X