Jet Airways நிறுவன இயக்குநர் கெளரங் ஷெட்டி ராஜினாமா..! இப்படி எத்தனை ராஜினாமாக்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ஒருவராகவும், நரேஷ் கோயலுக்கு மிக நெருக்கமானவராகவும் இருந்த கெளரங் ஷெட்டி ராஜினாமா செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த செய்தியை ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) நிறுவனமும் ஆமோதித்து ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்களாம்.

கெளரங் ஷெட்டி கடந்த சில மாதங்களுக்கு முன் தான் ஜெட் ஏர்வேஸ் (Jet Airways நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ஒருவராக சேர்க்கப்பட்டார். இவர் 1996-ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் (Jet Airways நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் பொது மேலாளராக சேர்ந்தார். அதன் பின் அவரின் திறமைக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் துணைத் தலைவர், ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) நிறுவனத்தின் வணிகப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் என பல பதவிகளில் பணியாற்றி இருக்கிறார்.

Jet Airways நிறுவன இயக்குநர் கெளரங் ஷெட்டி ராஜினாமா..! இப்படி எத்தனை ராஜினாமாக்கள்..!

கடந்த 2016 காலத்தில், ஒரு சில மாதங்களுக்கு (Jet Airways) நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகக் கூட பணியாற்றினார். அந்த அளவுக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மீது விஸ்வாசம் கொண்டவர். கெளரங் ஷெட்டி ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) இயக்குநர் குழுவில் இருந்து பதவி விலக 23 ஏப்ரல் 2019 அன்றே கடிதம் கொடுத்து விட்டாராம். அந்தக் கடிதத்திலேயே, வேலையை விட்டுப் போகும் போது, தான் நிறுவனத்துக்குக்கு கொடுக்க வேண்டிய கெடு காலத்தை (Notice period) ரத்து செய்யச் சொல்லியும் வேண்டு கோள் வைத்திருகிறாராம்.

ரூ.10,000கோடியை கடந்த நிகரலாபம்.. வலுவான வளர்ச்சியே காரணம் ரூ.10,000கோடியை கடந்த நிகரலாபம்.. வலுவான வளர்ச்சியே காரணம்

ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) நிறுவனம் கெளரங் ஷெட்டியின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு விட்டதாகவும், இந்த விஷயத்தைக் குறித்து சட்ட ஆலோசனைக்காக அனுப்பி இருப்பதாகவும், பங்குச் சந்தைகளுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்கள் ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) நிறுவனத்தினர்கள்.

கடந்த ஏப்ரல் 2019-ல் தான் ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்த முன்னாள் தேர்தல் ஆணையர் நசீம் சைதி (Nazeem Zaidi) "சொந்தக் காரணங்களை முன்னிட்டும், நேரமின்மை காரணத்தாலும் ராஜினாமா செய்கிறேன்" எனச் சொல்லி ராஜினாமா செய்தார். அவரோடு ராஜஸ்ரீ பதி என்கிற இயக்குநரும், ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) இயக்குநர் குழுவில் இருந்து ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி வரிசையாக ஒவ்வொரு இயக்குநராக விலகினால், ஊழியர்களை யார் கவனிப்பார்கள்..? அவர்களுக்கான சம்பள பாக்கியை யார் கொடுப்பார்கள்..? யார் நிறுவனத்தை விற்று அடுத்த வேலையைப் பார்ப்பார்கள்..? எந்த கேள்விக்கும் பதில் இல்லை. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் என்கிற நல்ல பெயரைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

jet airways companys board of director gaurang shetty resigned after ias officer nazeem zaidi

jet airways companys board of director gaurang shetty resigned after ias officer nazeem zaidi
Story first published: Thursday, May 9, 2019, 19:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X