அதிரடியாய் களத்தில் இறங்கிய வோடபோன்.. 7 சர்வதேச வங்கிகளுடன் களத்தில் குதிக்கும் குழுமம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : வோடபோன் பிஎல்சி, வோடபோன் ஐடியாவில் அதன் மொத்த பங்குகளையும் ஏழு வெளிநாட்டு வங்கிகளுடன் உறுதி செய்துள்ளதாம். இதையடுத்து இந்த தொலைத் தொடர்பு நிறுவனம் தான் நாட்டிலேயே மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளதாம்.

தொலைத்தொடர்பு துறையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போட்டியாளர்களால் ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கோண்டு ஆஃபர்களை வாரி வழங்கி வருகின்றன. 3ஜி - 4ஜி போய் தற்போது 5ஜிக்கு அடித்தளமிடுகின்றன. இதோடு சில சிறு நிறுவனங்கள் இணைந்து அதை செயல்படுத்தவும் நினைக்கின்றன.

அந்த வகையில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் தற்போது அதற்கான அஸ்திவாரத்தை மிக ஆழமாகவே போட போகிறது என்றே வைத்துக் கொள்ளலாம்.

 

FASTag இல்லையா..? 100% கூடுதல் கட்டணம்..! மே 23-க்குப் பின் அறிவிக்க ரெடியாக இருக்கிறது பாஜக..!

 7 வங்கிகளுடன் இணைந்து செயல்பட போகிறதாம்

7 வங்கிகளுடன் இணைந்து செயல்பட போகிறதாம்

இதன் முதல் கட்ட நடவடிக்கையாக சர்வதேச அளவில் 7 வங்கிகளுடன் இணைந்து செயல்பட போவதாகவும், இதன் மூலம் புதிய பங்குகள் மூலம் நிதி திரட்டவும், நிதி திரட்டவும் இந்த இணைப்பு வழி வகுக்கும் என்று இந்த நிறுவனம் கருதுகிறதாம்.

வோடபோன் 18,000 கோடி மதிப்புள்ள பங்கு

வோடபோன் 18,000 கோடி மதிப்புள்ள பங்கு

இந்த நிலையில் வோடபோன் ஐடியாவில் வோடபோன் நிறுவனம் 44.39 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறதாம். அதாவது இன்றைய மதிப்பில் (9th May2019) வர்த்தக விலைக்கு ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்கு வகிக்கிறதாம். இதை வோடபோன் குழும நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.

டாப் வங்கிகளுடன் தான் இணைப்பு
 

டாப் வங்கிகளுடன் தான் இணைப்பு

மேலும் இந்த நிறுவனம் இணைக்கப்படுவதாக கூறியிருந்த சர்வதேச வங்கிகள் பட்டியலில், ஹெச்.எஸ்.பி.சி கார்ப்பரேட் நிறுவனம் (HSBC Corporate Trustee Company (UK) Ltd) , வோடபோன் நிறுவனத்திற்கு ஆதரவாக நிதி ஏற்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த குழுமம் என்றும் கூறப்படுகிறது. இந்த குழுமத்தில் BNP பரிபாஸ், ஹெச்.எஸ்.பி.சி வங்கி, ஐ.என்.ஜி வங்கி( என்.வி சிங்கப்பூர் கிளை), ஸ்டான்ஷார்ட் வங்கி(StanChart Bank), இதோடு (Bank of America Merrill Lynch and Morgan Stanley Senior Funding Inc) பேங்க் ஆப் அமெரிக்கா மெர்ரில் லிஞ்ச் மற்றும் மோர்கன் ஸ்டான்லி உள்ளிட்ட வங்கிகளும் இந்த குழுமத்தோடு இணைந்துள்ளன.

இது வேற லெவல் தான்

இது வேற லெவல் தான்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மேலே பெயரிடப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் இந்தியாவிற்கு வெளியே இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதோடு மட்டும் அல்லாது வோடபோன் குழுமம் இந்தியா மற்றும் மொரிஷியஸ் ஆகியவற்றின் அடிப்படையிலான 12 நிறுவனங்களின் மூலம் வோடபோன் குழுமம் பங்குகளை வைத்திருக்கிறதாம். இது வேற லெவல் தான்.

மொரிஷியஸ் நிறுவனங்களும் அடங்கும்

மொரிஷியஸ் நிறுவனங்களும் அடங்கும்

மேற்கண்ட இந்த குழுமத்தோடு மொரிஷியஸ் அடிப்படையாக கொண்ட, அல்-அமீன் இன்வெஸ்மென்ட்ஸ், ஆசிய தொலைத்தொடர்பு கழகம் (மொரிஷியஸ்), டிரான்ஸ் கிரிஸ்டல், வோடபோன் டெலிகம்ஸ் (இந்தியா), சி.சி.ஐ (மொரிஷியஸ்), இன்க், பசிபிக் செக்யூரிட்டிஸ், பிரைம் மெட்டல்ஸ், மற்றும் மொபிஸ்வெஸ்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களும் இதில் அடங்கும்.

இந்திய நிறுவனங்களும் உண்டு

இந்திய நிறுவனங்களும் உண்டு

இதோடு இந்திய நிறுவனங்களான ஒமேகா டெலிகாம் ஹோல்டிங்ஸ், ஜெய்கே பின்கோல்டிங் (இந்தியா), டெலிகாம் இன்வெஸ்ட்மென்ட் இந்தியா மற்றும் உஷா மார்டின் டெலிமாடிக்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் இதில் அடங்குமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: vodafone வோடபோன்
English summary

Vodafone pledges entire stake with foreign banks

Vodafone Plc has pledged its entire stake in Vodafone Idea with seven foreign banks shortly after the country's largest telecom operator issued new shares to promoters to raise funds
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more