தொழில் செய்வோருக்கு கடன் வழங்கும் "முத்ரா".. நடப்பு ஆண்டில் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டுமாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம். இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது. இந்த முத்ரா ஒரு அரசின் திட்டமாகும், இது இந்தியாவில் அனைத்து வங்கிகளின் மூலமாகவும் செயல்படுத்தப்படுகிறது.

 

இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். இது 2015 - 2016ம் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைவருக்கும் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும், ஆனால் ஒரு சிலராலேயே அதை செயல்படுத்த முடியும். இந்த நிலையில் இந்த முத்ரா கடன் பலரின் கனவை நனவாக்கியுள்ளது என சொல்லாம்.

மத்திய அரசு புள்ளி விவரத்தின்படி கடந்த மார்ச் 22ம் தேதி வரை மட்டும், சுமார் 541.27 லட்சம் பேருக்கு ரூ.2.82 லட்சம் கோடி கடன் விநியோகம்
இந்த முத்ரா திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளதாம். மேலும் இந்த முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன் நடப்பு ஆண்டில் ரூ.3 லட்சம் கோடியை எட்டும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாம்.

கூகுள் வாடிக்கையாளர்களின் தகவலை விற்காது.. தகவல்கள் சொகுசு பொருள் அல்ல.. சுந்தர் பிச்சை பொருமல்

முத்ரா மூன்று பிரிவுகளில் கடன்

முத்ரா மூன்று பிரிவுகளில் கடன்

முத்ரா திட்டத்தின் கீழ் சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு ரூ. 50,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் மூன்று பிரிவுகளாக கடன் அளவு பிரிக்கப்பட்டுள்ளது. இந்த முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. இது சிசு, கிஷோர் மட்டும் தருண் ஆகிய முறைகளில் வழங்கப்படுகிறது.

 • சிசு (SHISHU) - இத்திட்டம் மூலமாக ரூ.50,000 வரை கடன் பெறலாம்.

 • கிஷோர் (KISHOR) - இத்திட்டம் மூலமாக ரூ.50,000 - 5 லட்சம் வரை கடன் பெறலாம்.

 • தருண்(TARUN) - இத்திட்டம் மூலமாக ரூ.5 லட்சம் - 10 லட்சம் வரை கடன் பெறலாம்.
 • இதுவரை முத்ரா திட்டத்தின் கீழ் பலன் பெற்றோர்.

  இதுவரை முத்ரா திட்டத்தின் கீழ் பலன் பெற்றோர்.

  இவ்வாறு வழங்கப்பட்ட மொத்தம் கடனின் மூலம் பலன் பெற்றவர்கள் 5,41,27,092 பேர்களாகும். இதில் சிசு திட்டத்தில் 4,69,04,215 பேரும், கிஷோர் திட்டத்தில் 58,64,952 பேரும், தருண் திட்டத்தில் 13,57,925 பேரும் கடன் பெற்றுள்ளனர்.

  உற்பத்தி & சேவை தொழிலுக்கு கடன்
   

  உற்பத்தி & சேவை தொழிலுக்கு கடன்

  இந்த முத்ரா திட்டம் அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். உதாரணமாக சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்கவும், முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் சர்வீஸ் விரிவுபடுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழ கடைகள், துணி கடைகள், பேக்கரி கடைகள் விரிபடுத்துதல், எஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர், கைவினை கலைஞர் உற்பத்தி என அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் தொழிலுக்காகவும் இதில் கடன் பெறலாம்.

  கடன் பணமாக இல்லை

  கடன் பணமாக இல்லை

  இவ்வாறு தரப்படும் கடன் பணமாக கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின் விலைபட்டியல் (Quatation) கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே கடன் தரப்படும். உங்களின் சரியான தொழில் கடன் தேவையை நீங்கள் நிரூபிக்கும் பட்சத்தில் கடன் வழங்க வங்கியே இறுதி முடிவு எடுக்கும்.

  சொத்து பிணையம் தேவையில்லை

  சொத்து பிணையம் தேவையில்லை

  இந்த கடனை பெற எந்தவித சொத்து பிணையமும் தேவை இல்லையாம், அதோடு தனிநபர் ஜாமீனும் தேவையில்லையாம். ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு குறைந்த பட்சம் 25 நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.

  அனைத்து வங்கிகளிலும் உண்டு

  அனைத்து வங்கிகளிலும் உண்டு

  உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது. அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம். உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சித்தால் எளிதில் கிடைக்க வாய்ப்புண்டு. ஏனெனில் உங்களது பண பரிவர்த்தனை பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  Mudra loans may cross Rs 3 lakh crore in 2019-20

  Total sanctions under the Pradhan Mantri Mudra Yojana loan scheme for micro industries are likely to cross Rs 3 lakh crore in the current fiscal.
  Company Search
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X