Starbucks 10 நொடிகளில் ரூ.16,000 கோடி சம்பாதித்தது எப்படி..? நன்றி கேம் ஆஃப் த்ரோன்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரிகான் (அமெரிக்கா): குடுக்குறவன் கூறைய பிச்சிக்கிட்டுக் கொடுப்பான்" எனச் சொல்வார்கள். அந்தப் பழமொழி Starbucks விஷயத்தில் பக்காவாக பொருந்தி இருக்கிறது .

 

Starbucks (ஸ்டார்பக்ஸ்). 120 ரூபாய்க்கு கீழ் காபி கொடுக்காத எலைட் பிரைசி நிறுவனம். இவன்கிட்ட 120 ரூபாய் கொடுத்து காபி குடிக்கிறத்துக்கு, பாய் கடையில வயிறு நிறைய ஒரு கிலோ பிரியாணி சாப்பிடலாமே என்று கணக்கு போடும் மிடில் க்ளாஸ் மக்கள் அதிகம் எட்டிப் பார்க்காத ஏரியா இந்த Starbucks.

Starbucks (ஸ்டார்பக்ஸ்) அளவுக்கு, கடந்த சில வருடங்களாக பிரபலமடைந்து வருகிறது கேம் ஆஃப் த்ரோன்ஸ். கேம் ஆஃப் த்ரோன்ஸ் கிட்டதட்ட ஹாலிவுட்டின் மினி சீசனல் எபிசோட் சினிமா. ஒரு எபிசோடுக்கே சுமார் 5 மில்லியன் வரை செலவழித்து நாடகம் எடுக்கிறார்கள்.

மே 05, 2019

மே 05, 2019

கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 05, 2019) அன்று கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones)இன் புதிய எமிசோட் வெளியானது. அதில், ஒரு விருந்து சீனில் Starbucks நிறுவனத்தின் காபி கப்பும் இடம் பிடித்துவிட்டது... புரிந்திருக்கும் என நம்புகிறேன்..! அவ்வளவு தான் மொத்த கேம் ஆஃப் த்ரோன்ஸையும் அனுஅனுவாக ரசித்துக் கொண்டிருந்த ஆசாரமான ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்துவிட்டார்கள். 90-ஸ் கிட்ஸ்களும், தற்போதைய ஜென் Z-க்களும் வலுவான கலாய் மெட்டீரியலாக மாற்றிவிட்டார்கள்.

Starbucks உடையது தானா..?

Starbucks உடையது தானா..?

இதில் ஆச்சர்யமான விஷயம் என்ன தெரியுமா..? அந்த காபி கப் Starbucks (ஸ்டார்பக்ஸ்) நிறுவனத்துடையது தான் என நிரூபிக்கும் விதத்தில், அவர்கள் லோகோ தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கப்பின் வடிவத்தைப் பார்த்தே, அது Starbucks-ன் கப்பு தான் என முடிவு செய்துவிட்டார்கள். இதை கேம் ஆஃப் த்ரோன்ஸ் சார்பில் யாரும் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆனால் சத்திமில்லாமல் அந்த கப்பை மட்டும் எடிட் செய்து விட்டு புதிய வெர்சனை அப்லோட் செய்துவிட்டார்கள். கேம் ஆஃப் த்ரோன்ஸ் தரப்பினரோ அல்லது Starbucks தரப்பினரோ யாரும் இந்த கப் பிரச்னைப் பற்றி, சொல்லி வைத்தது போல வாய் திறக்கவில்லை.

 

விவாதம்

இந்த Starbucks காபி கப்பை வேண்டும் என்றே கேம் ஆஃப் த்ரோன்ஸில் இடம்பிடிக்க வைத்தார்களா..? அல்லது உண்மையாகவே தவறுதலாக இடம் பிடித்துவிட்டதா என ஒரு பக்கம் விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் மறு பக்கம் இதனால் Starbucks எவ்வளவு லாபம் அடைந்திருக்கிறது தெரியுமா..? என ஒரு பெரிய விவாதமும் நடந்து கொண்டிருக்கிறது.

சந்தேகம்

சந்தேகம்

ஏன் கேம் ஆஃப் த்ரோன்ஸின் தயாரிப்பாளர் ஹெச் பி ஓ (HBO) மீது சந்தேகம் எழுகிறது..? வழக்கமாக ஹெச் பி ஓ விளம்பரதாரர்களிடம் இருந்து பணத்தை வாங்கமாட்டார்கள். அதற்கு பதிலாக, அவர்களின் பொருட்கள் அல்லது சேவைகளைத் தான் வாங்கிக் கொள்வார்கள். இப்படித் தான் ஹெச் பி ஓ நிறுவனம் தன் தயாரிப்புச் செலவுகளைக் குறைத்துக் கொள்கிறது. இதனால் தான் ஹெச்பிஓ வேண்டும் என்றே Starbucks காபி கப்பை பயன்படுத்தி இருக்குமோ..? என்கிற சந்தேகம் வலுவடைந்தது.

லாபக் கணக்கு

Starbucks அவ்வளவு பெரிய லாபத்தைப் பார்த்திருக்கிறதா என்ன..? என்றால் ஆம் தான் விடை. இன்னும் புள்ளி விவரத்தோடு சொல்ல வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு லாபம் அடைந்திருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 16,000 கோடி ரூபாய்க்கு இதனால் லாபம் அடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

எப்படி

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சில நூற்றாண்டுகளுக்கு முன் நடப்பது போலச் செல்கிறது கதை. ஆக அத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் Starbucks எப்படி இருந்திருக்கும் என லாஜிக் தவறுகள் கண்டு பிடிக்கத் தொடங்கியதில் இருந்து, கேம் ஆஃப் த்ரோன்ஸைக் கலாய்க்க, மீம் போட, கோவப்பட, ட்ரோல் செய்ய என அனைத்து சமூக வலைதளங்களிலும் பயன்படுத்திய பெயர் Starbucks Starbucks Starbucks....

கணக்கில் வருவது தான்

கணக்கில் வருவது தான்

Starbucks அடைந்த லாபம் குறித்து, ஹாலிவுட் பிராண்டெட் (Hollywood Branded) என்கிற மார்க்கெட்டிங் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஸ்டேசி ஜோன்ஸ் (Stacy Jones) "எப்படியும் சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு, Starbucks லாபமடைந்து இருப்பார்கள். இந்த 2.3 பில்லியனும் ஒரு தோராயமான குறைந்தபட்ச மதிப்பீடு தான். ஆன்லைனில் டிராக் செய்யக் கூடிய, பணத்தினால் மதிப்பிடக் கூடியவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு சொல்லி இருக்கிறோம்" எனவும் அழுத்திச் சொல்கிறார் ஸ்டேசி ஜோன்ஸ்.

எண்ணிக்கை

எண்ணிக்கை

சரி சின்ன கணக்கு சொன்னால் ஷாக் ஆக மாட்டீர்களே..? ஞாயிற்றுக்கிழமை கேம் ஆஃப் த்ரோன்ஸின் Starbucks எபிசோட்க வெளியாகி 48 மணி நேரத்தில், சுமார் 1,93,000 சமூக வலைதள பதிவுகளில் Starbucks என்கிற பிராண்டின் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். ஆம் நம்மைப் பொருத்தவரை Starbucks என்பது ஒரு வார்த்தை. அவர்களைப் பொருத்த வரை ஒரு பிராண்ட். இது போக வாய் வார்த்தைகள் வழியாக, நம்மைப் போல செய்திகள் வழியாக Starbucks Starbucks என பயன்படுத்தி இருப்பதை எல்லாம் கணக்கிட்டல் இன்னும் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்கிறார்கள்.

தம்பி நாங்க யார் தெரியுமா..?

தம்பி நாங்க யார் தெரியுமா..?

இப்படி கேம் ஆஃப் த்ரோன்ஸினால் தான் Starbucks நிறுவனத்துக்கு இத்தனை மதிப்பு என்று பேசிக் கொண்டிருக்கும் போது... Starbucks பிராண்ட் யார் தெரியுமா என சோல்டரைத் தூக்கிக் கொண்டு வருகிறது ஒரு கூட்டம். ஒரு காபி கப்பை முழுமையாகக் கூட காட்டவில்லை. ஆனால் அதன் வடிவத்தை வைத்தே அது Starbucks பிராண்டின் காபி தான் எனச் சொல்கிறார்கள் என்றால் Starbucks பிராண்டின் வலிமை என்னவாக இருக்கும் என லாஜிப் பிடித்து ஒரண்டைக்கு வருகிறார்கள் 120 ரூபாய் கொடுத்து காபி குடிக்கும் எலைட் இளைஞர்கள்.

தேவை இல்லாம விளம்பரம் பண்ணிட்டோமோ

தேவை இல்லாம விளம்பரம் பண்ணிட்டோமோ

"நம்ம பயலுங்க, கேம் ஆஃப் த்ரோன்ஸ குத்தம் சொல்லப் போய் Starbucks பிராண்ட பிரம்மாண்டமா மார்க்கெட்டிங் பண்ணிட்டாய்ங்கப்பு" என்கிறார் Essence என்கிற விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் இயக்குநர் சரெல் ஸ்டார் (Charell Star). இவர் சொன்னதையும் மறுப்பதற்கில்லை. அன்று தான் முதன் முறையாக கேம் ஆஃப் த்ரோன்ஸைப் பார்த்தவர்கள் கூட அதைக் கலாய்க்க, Starbucks என்கிற பிராண்டின் பெயரோடு ட்விட்டிய கொடுமையையும் பார்க்க முடிந்தது.

காசு கொடுத்தாலும் முடியாது

காசு கொடுத்தாலும் முடியாது

என்ன சொன்னாலும் ஒரு பிராண்டால், இந்த அளவுக்கு தன் பிராண்டை டிரெண்டு செய்ய முடியாது. அது எவ்வளவு பெரிய மீடியாவானாலும் இத்தனை பெரிய ரீச்சைக் கொடுத்திருக்காது என்கிறார் Wavemaker என்கிற கண்டன்ட் மற்றும் ஸ்பான்சர்ஷிப் மீடியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி நோவா மலின். அது என்னமோ உண்மை தான். இப்படி Starbucks-ஐப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிரோமே, கேம் ஆஃப் த்ரோன்ஸுக்கும் இதனால் ஏற்பட்ட நஷ்டத்தைப் பற்ரியாராவது பேசினார்களா என்று பார்த்தால், பேசி இருக்கிறார்கள்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

Starbucks எபிசோடில், விருந்துக் காட்சியில் Starbucks கப் வந்ததால், அந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் எபிசோடை இரண்டு சதவிகிதம் பேர் குறைவாகப் பார்த்திருக்கிறார்களாம். அதாவது முந்தைய எபிசோடைப் பார்த்தவர்களை விட, இந்த எபிசோடைப் பார்த்தவர்கள் 2% குறைவு. அந்த அளவுக்கு கேம் ஆஃப் த்ரோன்ஸை ஆச்சாராக பார்த்து ரசிக்கும் வெறித்தன ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. ஒரு காபி கப் வந்துவிட்டதாலேயே கேம் அஃப் த்ரோன்சின் புனிதம் இழந்துவிட்டதைப் போல, அந்த மொத்த எபிசோடையே புறக்கணித்தவர்களும் நிறைய பேர் இருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Starbucks had advertisement worth of 16000 crore for free of cost through game of thrones

Starbucks had advertisement worth of 16000 crore for free of cost through game of thrones
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X