வேலையிழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 500 பேருக்கு கைகொடுக்கும் தாஜ் ஹோட்டல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஜெட் ஏர்வேஸ் விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டதால், வேலை இழந்து சம்பளமும் கிடைக்காமல் தவித்து வரும் ஊழியர்கள், பைலட்கள் மற்றும் விமான பணிப்பெண்கள் ஆகியோரில் சில பேர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதற்கு புகழ்பெற்ற தாஜ் ஹோட்டல் நிறுவனம் முன்வந்துள்ளது.

 

வேலையிழந்து தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் பைலட்களுக்கு மார்ச் மாத நிலுவை சம்பளமும் இதுவரையில் செலுத்தப்படவில்லை. இவர்களில் சுமார் 500 பேர்களை ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம் ஏற்கனவே வேலைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

வேலையிழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 500 பேருக்கு கைகொடுக்கும் தாஜ் ஹோட்டல்

சுமார் 8500 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் சுமை மற்றும் ஊழியர்களின் சம்பளப் பிரச்சனை, குத்தகை பாக்கி என எட்டு திசைகளில் இருந்தும் பிரச்சனைகள் சுற்றி வளைத்து தாக்கியதால் நிலைகுலைந்துபோன ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதியோடு பூஜைபோட்டு முடித்துக் கொண்டது.

இதைத் தொடர்ந்து ஜெட் ஏரவேஸ் நிர்வாகத்தை எஸ்பிஐ வங்கிகள் கூட்டமைப்பு தத்தெடுத்து நடத்த முன்வந்தது. ஆனால் நிர்வாகத்தை தொடர்ந்து நடத்தவேண்டுமானல் குறைந்த பட்சம் 1500 கோடி ரூபாய் வேண்டுமென்பதால், வங்கிகள் கூட்டமைப்பு தன் வசம் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்க முன்வந்தது.

ஆனால் தொடர்ந்து நட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை தைரியமாக ஏற்று நடத்த யாரும் முன்வரவில்லை. வங்கிகள் கூட்டமைப்பும் கூடிய விரைவில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தொடரும் என்று உத்தரவாதம் அளித்து வருகிறது.

வேலையிழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 500 பேருக்கு கைகொடுக்கும் தாஜ் ஹோட்டல்

இந்நிலையல் வேலை இழந்து தவித்துக் கொண்டிருந்த 38000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் பைலட்களில் சுமார் 1000 பேர்களை இதன் போட்டி நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பணிக்கு எடுத்துக்கொண்டது. மேலும் சில பேரை கோஏர் நிறுவனமும் சுமார் 250 பைலட்கள் மற்றும் விமான பணிப்பெண்களை ஏர் இந்தியா நிறுவனமும் பணிக்கு எடுத்துக் கொண்டுள்ளன.

 

மேலும் சுமர் 100 ஜெட் ஏர்வேஸ் பைலட்கள் சர்வதேச விமான நிறுவனங்களான கத்தார் ஏர்வேஸ், எமிரேட் ஏரவேஸ், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.

தற்போது தாஜ் ஹோட்டல் நிர்வாகம், ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் பைலட்களில் சுமார் 100 பைலட்கள் மற்றும் 400 விமான பணிப்பெண்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள முன்வந்துள்ளது.

தாஜ் ஹோட்டல் நிறுவனம் தற்போது ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் துறைகளை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது 149 ஹோட்டல்களை நிர்வகித்து வருகிறது. இது தற்போது விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையில் பணியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக ஜெட் ஏர்வேஸின் ஊழியர்கள் மற்றும் பைலட்களை பணிக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.

தாஜ் ஹோட்டல் நிர்வாகம் நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறையில் புதிதாக ஆட்களை நியமிப்பதற்காக, ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் பைலட்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அனைவரும் தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலில் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Taj Hotel ready to offer Jobs to Jet Airways Employees

The Taj Mahal Hotel, hospitality and tourism division of Tata Group will be ready to offer 500 jobs to grounded Jet Airways employees.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X