PAN Card இல்லை ரூ.3 கோடிக்கு சொத்து இருக்கு! சொத்து எப்படி வந்தது? பதில் சொல்லாத பாஜக வேட்பாளர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஜெய்சித்தேஸ்வர் சிவாச்சார்யா (Jaisidheshwar Shivacharya) மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாபூர் தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர். சாமியர் என்ற பின் கம்யூனிஸ்டாகவா இருப்பார் காவி பாஜக தான்.

 

இவருக்கு வயது 63 ஆகிறது. வேலை மதத் தலைவராம். இவர் எதிர்த்துப் போட்டியிட்டது மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவரான சுஷில்குமார் ஷிண்டே மற்றும் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சியின் முக்கியத் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர்.

வேலை மதத்தைப் பரப்புவது தானே, அப்புறம் என்ன தான் படித்திருக்கிறார் எனப் பார்த்தால், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் 1990-களிலேயே ஆராய்ச்சிப் படிப்புகளை படித்து முடித்திருக்கிறார். இத்தனை மெத்தப் படித்தவர் தான் தற்போது ஒரு அடிப்படையான விஷயத்தில் தவறு செய்திருக்கிறார். அது தான் பான் அட்டை (PAN Card). இதில் வேடிக்கையான விஷயமே அவர் செய்ததை தவறு என அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கு மேல் அவர் செய்த தவறை எந்த அரசு அதிகாரிகளும் சுட்டிக்காட்டவில்லை.

அப்பா இடத்தை பிடிக்கும் மகள்.. ஜோதி லேபாரட் டரீஸ் MD-யாக ஜோதி நியமனம்

சொத்துப் பிரமாண பத்திரம்

சொத்துப் பிரமாண பத்திரம்

வழக்கம் போல தேர்தலின் போது வேட்பாளர்கள் தங்கள் சொத்துக் கணக்கு விவரங்களை பிரமாணப் பத்திரமாக தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்வார்கள். அதில் தான் சிக்கி இருக்கிறார் நம் ஜெய்சித்தேஸ்வர் சிவாச்சார்யா (Jaisidheshwar Shivacharya).

இல்லை

இல்லை

சொத்துப் பிரமாண பத்திரத்தில் பான் அட்டை எண் கேட்டிருக்கிறார்கள். அதற்கு பான் அட்டையை வாங்கவில்லை, தான் விண்ணப்பித்ததாகவும், தனக்கு வருமான வரித் துறை இன்னும் பான் அட்டையை வழங்கவில்லை எனவும் அசால்டாக பதில் கொடுத்திருக்கிறார். அதற்கு அடுத்த கட்டத்தில் வருமான வரிப் படிவம் சமர்ப்பித்தீர்களா எனக் கேட்டிருக்கிறார்கள்..? அதற்கு "எனக்குப் பொருந்தாது (Not applicable)" என விடை கொடுத்திருக்கிறார்.

மிக அடிப்படையான ஒரு விஷயம்
 

மிக அடிப்படையான ஒரு விஷயம்

1. இருசக்கர வாகனங்கள் தவிர மற்ற மோட்டார் வாகனங்களை வாங்க விற்க பான் தேவை.

2.வங்கிக் கணக்கு தொடங்க பாண் அட்டை கேட்கிறார்கள்.

3. க்ரெடிட் கார்ட் வழங்க பான் அட்டை அவசியமாக்கி இருக்கிறார்கள்.

4. டீமெட் கணக்குகளைத் தொடங்க பான் அட்டையைக் கேட்கிறார்கள்.

5. 50,000 ரூபாய்க்கு மேல் ஏதாவது பொருட்கள் அல்லது சேவையை வாங்கினாலோ விற்றாலோ பான் அட்டை தேவையாக இருக்கிறது.

6. வெளிநாட்டு கரன்ஸிகளை பரிமாற்றம் செய்ய பான் அவசியமாகிறது.

7. 50,000 ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய பான் தேவை.

8. அவ்வளவு ஏன் 50,000 ரூபாய்க்கு மேல் அஞ்சலகங்களில் (Post Office) ஆர் டி தொடங்கக் கூட பான் அட்டை தேவை.

9. சொத்து பத்துக்களை பரிமாற்றம் செய்யும் போது பான் மிகவும் அவசியமாகிறது.

10. ஒரு வருடத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் லைஃப் இன்ஷுரன்ஸ் பிரீமியம் செலுத்துபவர்கள் பான் விவரங்களைக் கொடுக்க வேண்டும்.

11. மேலே சொன்னவைகளை ஒரு மைனர் செய்கிறார் அல்லது மைனரின் எப்யரில் செய்கிறார்கள் என்றால் அந்த மைனரின் அப்பா, அம்மா அல்லது பாதுகாவலரின் பான் அவசியமாகிறது.

கொடுக்கவில்லை

கொடுக்கவில்லை

இத்தனைத் தெளிவாக வருமான வரித் துறை மீது குற்றம் சுமத்தி இருக்கிற்றாரே இந்த ஜெய்சித்தேஸ்வர் சிவாச்சார்யா (Jaisidheshwar Shivacharya), இவரிடம் சொத்து பத்து எதுவும் இருக்காது போல, என்று தான் நினைத்தோம். ஆனால் நிறைய இருக்கிறது. சுமார் 2.78 கோடி ரூபாய்க்கு சொத்து வைத்திருக்கிறாராம்.

அசையும் சொத்து

அசையும் சொத்து

நம் ஜெய்சித்தேஸ்வர் சிவாச்சார்யா (Jaisidheshwar Shivacharya) சாமியார் சில சின்ன சின்ன டெபாசிட்டுகளை அரசு மற்றும் தனியார் வங்கிகளில் வைத்திருக்கிறாராம். அதோடு ஒரு 1997 மாடல் அம்பாசிடர் காரையும் வைத்திருக்கிறாராம். அதன் மதிப்பு தற்போது 10,000 ரூபாயாம். அதன் பின் தன் சுவாமி விக்ரகங்களுக்கு பூஜை செய்யும் பாத்திர பண்டங்கள் வெள்ளியில் இருக்கிறதாம். அதன் இன்றைய மதிப்பு 2 லட்சம் ரூபாய் வருமாம். இதுவரை எந்த வங்கியிலும் கடன் வாங்கியதில்லையாம். இப்படி மொத்தம் சுமார் 6.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களை சாமியார் வைத்திருக்கிறாராம்.

அசையாச் சொத்துக்கள்

அசையாச் சொத்துக்கள்

இங்கு தான் ட்விஸ்டே இருக்கிறது. பான் அட்டை இல்லாத சாமியாருக்கு நிலம், வீடு வாசல் என 2.72 கோடி ரூபாய்க்கு அசையாச் சொத்துக்கள் இருக்கிறதாம். எப்படியும் சொத்து பத்துக்களை வாங்கும் போதோ அல்லது பரம்பரையாக வந்தது என்றால் கூட தன் பெயருக்கு மாற்றம் செய்து கொள்ளும் போதோ.. பான் அட்டை தேவைப்பட்டிருக்கும். அந்த நேரங்களில் எப்படி இந்த சாமியார் பான் அட்டை விவரங்களைக் கொடுக்காமல் தப்பித்தார் எனவும் கேள்வி எழுந்திருக்கிறது.

எதை மறைக்கிறார்

எதை மறைக்கிறார்

ஒரு பேச்சுக்கு வீடு, நிலம் போன்றவைகளை பரிமாற்றம் செய்யும் போது பான் அட்டை கொடுத்துவிட்டார் என வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் பான் அட்டையை ஏன் தேர்தல் ஆணையத்திடம் இருந்து மறைக்க வேண்டும் என்கிற கேள்வியையும் எதிர்கட்சியினர்கள் எழுப்பி வருகிறார்கள்.

பாஜக தரப்பு

பாஜக தரப்பு

"ஜெய் போலே நாத்... எங்கள் ஜெய்சித்தேஸ்வர் சிவாசாரிய சுவாமி (Jaisidheshwar Shivacharya) ஒரு சந்நியாசி. அவரை நம்பி யாரும் இல்லை. அவர் ஒரு மதத் தலைவர். ஏழைகளுக்காக இறங்கி வேலை பார்ப்பவர். அவருக்கு ஒரு நிலையான வருவாய் என்பதே கிடையாது. அதனால் அவரிடம் பான் இல்லை" என ஜெபிக்கிறார்கள் பாஜக பக்தர்கள்.

அரசுத் தரப்பு

அரசுத் தரப்பு

அரசு தரப்பில் இதைக் குறித்து விசாரித்தால் "ஒருவரிடம் பான் அட்டை இல்லை என்றால் கூட அவர் மாநில சட்டமன்ற தேர்தலிலோ அல்லது மக்களவைத் தேர்தலிலோ நிற்க முடியும்" என பதில் அளித்து விட்டு அடுத்த வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு எப்படி இத்தனைச் சொத்துக்கள் எனக் கேட்டால் "அவருக்கு நிரந்தர வருமானம் இல்லாமல் இருந்திருக்கும், கிடைக்கும் சொர்ப்ப வருமானத்தில், அடித்துப் பிடித்து சொத்துக்களை வாங்கி இருப்பார். அதனால் தான் அவரிடம் பான் அட்டை இல்லை" என மீண்டும் நழுவுகிறார்கள். கடைசி வரை அவர் எப்படி பான் அட்டை இல்லாமல் 2.78 கோடி ரூபாய்க்கு சொத்துக்களைச் சேர்த்தார் என்கிற விவரங்களைச் சொல்லவே இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

a bjp candidate who does not have a pan card but having 3 crore worth of asset

a bjp candidate who does not have a pan card but having 3 crore worth of asset
Story first published: Saturday, May 11, 2019, 16:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X