இனி கேபிள் பிரச்சனை இருக்காது.. விரைவில் அரசின் டி.டி.ஹெச் சேவை.. TACTV திட்டம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை : தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷன் (TACTV) டி.டி.ஹெச் சேவையைத் துவக்க திட்டமிட்டுள்ளது.

 

ஏற்கனவே உள்ள கேபிள் இணைப்பு வழங்கி வருவதில் பல சேவை தொடர்பான சிக்கல்கள் நிலவி வருகிறது. இந்த நிலையில் கட்டணம் குறித்தும் பல சர்ச்சைகள் நிலவி வருகிறது.

இனி கேபிள் பிரச்சனை இருக்காது.. விரைவில் அரசின் டி.டி.ஹெச் சேவை.. TACTV திட்டம்

இந்த அரசு கேபிள் டிவி, தமிழ்நாடு மக்களுக்கு கேபிள் சேவையை வழங்கும் பொருட்டு இந்த இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்த கேபிள் இணைப்புகளால் பல பிரச்சனைகள் எழுந்த வண்ணமே உள்ளன.

இதோடு அரசு கேபிள் டிவி கார்பரேஷன் நிறுவனத்தில் உள்ள எல்.சி.ஓ.க்கள், கேபிள் இணைப்பின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு தான் முகங்கொடுத்து வருகின்றனர். இதனால் மக்களுக்கு சரியான சேவை கிடைப்பதில்லை என்ற புகார்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இதனால் அரசு கேபிள் 'டிவி' ஒளிபரப்பில் வீடுகளுக்கு நேரடி இணைப்பு வழங்கும், டி.டி.ஹெச் சேவையை துவங்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் குறைந்த கட்டணத்தில், சேவை வழங்க முடியும் என்றும் நம்புகிறதாம். அதோடு அரசு கேபிள், டிவி துவக்கப்பட்டதன் நோக்கமே, குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவையை வழங்குவது தான். ஆக இந்த சேவை மூலம் அதை செயல்படுத்த முடியும் எனவும் நம்புகிறதாம்.

இதோடு ஏற்கனவே நெட்வொர்க் கட்டணம் 130 ரூபாய் என்பதை குறைத்து தற்போது 120 ரூபாயாக மாற்றியுள்ளது. இருப்பினும் HD சேனல்களை பார்க்க விரும்பும் மக்களுக்கு VoD and Hybrid Boxes பற்றாக்குறையாகவே இருந்து வருகிறது.

மேற்கண்ட இது போன்ற வீழ்ச்சிகளையும் பிரச்சனைகளையும் தடுக்க அரசு டி.டி.ஹெச் சேவையை வழங்குவதன் மூலம், நேரடியாக மக்களுக்கு இந்த சேவையை வழங்க முடியும். அதோடு குறைந்த விலையில் இந்த டி.டிஹெச் சேவையை வழங்க முடியும் என்றும் அரசு நம்புகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TACTV is planning to launch DTH service

Tamil Nadu Arasu Cable TV Corporation is planning to launch DTH service to overcome the issue of eroding subscriber base due to pricing and service related issues.
Story first published: Sunday, May 12, 2019, 13:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X