பால் உற்பத்தியாளர்களின் பொருளாதார நெருக்கடியை நீக்கவே விலை அதிகரிப்பாம்.. அமுல் பால் அறிவிப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அகமதாபாத்: அமுல் பால் நிறுவனம் பால் விற்பனையை குஜராத் மாநிலத்திலத்திலும், பால் துணைப் பொருட்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகின்றது. இதோடு இந்த நிறுவனம் அயல் நாடுகளுக்கு, பல கோடி மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தும் வருகின்றது.

 

இதில் எருமைப்பால் விலையை 10 ரூபாயும், இதே மாட்டுப் பால் விலை 4.5 ரூபாயும் அதிகரித்துள்ளது. தற்போது கோடை வெயிலின் காரணமாக பால் உற்பத்தி மிக குறைந்துள்ளது எனவும் அமுல் நிறுவனம் கூறியுள்ளதாம்.

பால் உற்பத்தியாளர்களின் பொருளாதார நெருக்கடியை நீக்கவே விலை அதிகரிப்பாம்.. அமுல் பால் அறிவிப்பு

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் குளிர்காலத்தில் 30 லட்சம் லிட்டர் பால் தினசரி கிடைக்கும். ஆனால் இது தற்போது 25 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது.

இதோடு எருமை பாலில் இருந்து எடுக்கப்படும் தூய வெண்ணெய் 640 ரூபாய்க்கும், இதுவே மாட்டு பாலில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெய் 290 ரூபாயாகவும் விலை நிர்ணயித்துள்ளதாம். இதே 1200 அமுல் பால் சங்கங்கள் மூலம் 7 லட்சம் கால் நடை வளர்ப்பவர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

நிலவி வரும் கோடைகால வெப்ப நிலையால் பால் உற்பத்தியாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். கோடை வெயில் காரணமாக பால் உற்பத்தி குறைந்ததால், பால் உற்பத்தியாளர் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆக இதுபோன்ற பல பிரச்சனைகளை தடுக்கவும், கொள்முதலை அதிகரிக்கவும் இந்த விலை அதிகரிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த நிறுவனம் முன்னர் அறிவித்தது போலவே தற்போது செயலில் இறங்கியுள்ளது. குறிப்பாக லாபம் கணக்கு வைக்கல இதற்கு காரணம் நாங்கள் பொருட்களின் விலையை அதிகரிக்கவில்லை. ஏனெனில் வால்யூம் அடிப்படையில் தொழிலை கவனித்தோமே தவிர லாபத்தை கணக்கில் கொள்ளவில்லை. இதனாலேயே வளர்ச்சி அதிகரித்திருந்தாலும் லாபம் குறைந்தது. எனினும் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து தான் இந்த விலை அதிகரிப்பும் நடந்துள்ளது.

 

அதோடு இந்த நிறுவனம் ஏற்கன்வே கூறியது போல, இந்தாண்டு 600 - 800 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும் என்றும். அதன் உற்பத்தி திறன் மற்றும் ஆராய்ச்சியை உயர்த்தவும், மேலும் அதன் சந்தைப் பங்குகளை பராமரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என அறிவித்திருந்தது. அதன் முதல் அத்தியாயம் தான் இந்த விலையேற்றம் என்கிறார்கள் நிபுணர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: amul அமுல்
English summary

Amul hiks milk procurement prices, 7 lakh peoples got benefit

The Amul Dairy has increased milk procurement prices by Rs.10 for buffalo milk and Rs.4.5 in the case of cow milk following a drop in production because due to summer heat, official sources said.
Story first published: Monday, May 13, 2019, 19:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X