வட்டி குட்டி போட்டு இருமடங்காயிருச்சாம்.. ஆர்காம் ரூ. 90,000கோடி கடன்.. கவலையில் அனில் அம்பானி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அனில் அம்பானிக்கு இது மிக மோசமான வருடமே. இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றுதான் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ். கடந்த சில வருடங்களாக கடனில் சிக்கித் தவித்து வரும் அனில் அம்பானிக்கும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கும் இது மிக மோசமான காலமே.

 

இந்த நிறுவனம் இதுவரை சுமார் ரூ. 46 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் பெற்று, அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பது அனைவரும் அறிந்த விஷயமே என்றாலும், இந்த கடன் இப்போது வட்டி குட்டியாகி சுமார் ரூ90,000 கோடியில் வந்து நிற்கிறதாம்.

அட இதுல் என்ன கொடுமைன்னா இதுவரை திவால் ஆகி போன நிறுவனங்களிலேயே இந்த நிறுவனம் தான் டாப் லெவலாம். இது குறித்து கடன் அளித்தோர்களில் ஒருவர் கூறியதில், ரிலையன் நீறுவனம் சுமார் 75,000 - 90,000 கோடி ரூபாய் கடன் தொகையாக செலுத்த வேண்டியுள்ளது.

மக்களவை தேர்தல் முடிவு.. வர்த்தகபோர் காரணமாக ரூ.3,207 கோடி முதலீட்டை விலக்கிய FII

திவால் செய்யும் நிறுவனங்களில் அதிகமான தொகை

திவால் செய்யும் நிறுவனங்களில் அதிகமான தொகை

அதோடு "தேசிய வங்கிகள் தவிர, சீன கடனளித்தோர் மற்றும் பத்திரதாரர்கள் தங்கள் கடன்களைக் திரும்ப கோருகின்றனர். இது திவாலாகும் வழக்கில் காணப்பட்ட மிகப்பெரிய கூற்றுத் தொகையாகும் என்றும் கூறுகின்றனராம்.

அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள்

அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள்

மேலும் ஆர்காம் நிறுவனம், ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய இரு நிறுவனங்களும், மற்றும் இதன் துணை நிறுவனங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் கடன் களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடன் ரூ. 82,541 கோடி
 

கடன் ரூ. 82,541 கோடி

கடந்த 2017ல் திவால் நிலைக்கு தள்ளப்பட்ட மிகப்பெரிய வழக்குகளில் ஒன்று எஸ்ஸார் ஸ்டீல் ஆகும். இது 2017 ஆம் ஆண்டில் திவாலாகிவிட்டது. இதன் கடன் தொகையானது ரூ. 82,541 கோடியாக இருந்தது. இதே தேசிய கம்பனியின் சட்டப் பேரவை (NCLT) நியமிக்கப்பட்ட கடன் ரூ. 54,565 கோடியாகும். ஆனால் தற்போது ரிலையன்ஸ் அதையெல்லாம் மிஞ்சிவிடும் போல

அனில் அம்பானி மீது அவமதிப்பு வழக்கு

அனில் அம்பானி மீது அவமதிப்பு வழக்கு

கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பரிலேயே, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மீதான திவால் நடவடிக்கை தொடங்க தாக்கல் செய்தது. பின்னர், எரிக்சன் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு, ரூ. 550 கோடியை பெற்றுக்கொள்ள எரிக்சன் சம்மதித்தது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் நிலுவை தொகையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தரவில்லை. இதனால் எரிக்சன் நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது.

சிறை தண்டனையிலிருந்து தப்பித்தார் அனில் அம்பானி

சிறை தண்டனையிலிருந்து தப்பித்தார் அனில் அம்பானி

இந்த வழக்கில், எரிக்சனுக்கு தர வேண்டிய பாக்கி தொகையை கருவூலத்தில் செலுத்தாவிட்டால் அனில் அம்பானிக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், கடைசி தருணத்தில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி உதவியால் பாக்கியை செலுத்தி தண்டனையில் இருந்து அனில் அம்பானி தப்பினார்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திவால்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திவால்

முன்னதாக, கம்பெனி குழு முடிவின்படி நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்க கோரி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தை ரிலையன்ஸ் அணுகியது. இந்த வழக்கு விசாரணை தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் வி.பி.சிங் மற்றும் ஆர்.துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. திவால் சட்டத்தின்படி, திவால் நடவடிக்கை தொடங்கினால் 270 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடைகளால், 2018 மே மாதம் கடந்த ஏப்ரல் வரை 13 மாதங்கள் (சுமார் 357 நாட்கள்) திவால் நடவடிக்கையை தொடங்க இயலவில்லை.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மே30 அடுத்த விசாரணை

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மே30 அடுத்த விசாரணை

எனவே, வழக்கிற்காக செலவான இந்த நாட்களை திவால் நடவடிக்கை மேற்கொள்வதற்கான கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை ஏற்ற தீர்ப்பாயம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கையை தொடங்க அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது ஏற்கெனவே, நியமிக்கப்பட்ட திவால் நடவடிக்கை அதிகாரிகள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்பாயம் ஏற்கனவே உத்தரவும் பிறப்பித்துள்ளது. ஆக எப்படியோ ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்சுக்கு பூட்டு போட போறாங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Communication lenders may to claim up to Rs 90,000 cr

RCom expected to claim dues of up to Rs 90,000 crore, almost double the Rs 46,000 crore debt that the telco has on its books.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X