பாஜகவுக்கு ஓட்டுப்போடுங்க எல்லா பிரச்சினையும் தீர்ந்துடும் என்கிறார் ஸ்பைஸ்ஜெட் அஜய் சிங்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வேலை வாய்ப்புகள் பெருகவும், பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்லவும், உள்கட்டமைப்புத் துறை தொடர்ந்து சீரான வளர்ச்சி பெறவும், விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சியுறவும் இளைஞர்கள் தங்கள் வாக்கை பாஜகவுக்கு அளிக்க வேண்டும் என்று ஸ்ப்ஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தெரிவித்தார்.

 

விமானப் போக்குவரத்துத் துறையில் தற்போது நிலவி வரும் சிக்கலைத் தீர்ப்பதற்கு மத்தியில் ஆளும் பாஜகவுக்கு வாக்களித்தால் மட்டுமே இது சாத்தியம் என்று ஆளும் கட்சிக்கு ஆதரவாக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 7.6 சதவிகிதமாக கூடிவிட்டதாக மத்திய பொருளாதார கண்காணிப்பு மையமே கடந்த சில தினங்களுக்கு முன்பு புள்ளிவிவரத் தரவுகளை (Statistics Data) வெளியிட்டது.

அமெரிக்கா சீனா குடுமிப்பிடி சண்டை ஆப்பிளுக்கு உடைஞ்சது மண்டை - ரூ. 5.24 லட்சம் கோடி சேதாரமாம்

வேலையில்லாத் திண்டாட்டம்

வேலையில்லாத் திண்டாட்டம்

மத்திய தொழிலாளர் நலத்துறையின் கீழ் வரும் தொழிலாளர் சேமநலநிதி அமைப்பும் (EPFO) வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது.

பணவீக்க விகிதம்

பணவீக்க விகிதம்

ஏப்ரல் மாதத்திய பணவீக்க விகிதமும் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துவிட்டது. கோடை மழை பொய்த்துப் போன காரணத்தினால், விவசாய விளைச்சலும் குறைந்து விட்டது. இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து மொத்தப் பணவீக்கமும் உயர்ந்து விட்டது என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு வெளியிட்டு பீதியை கிளப்பி உள்ளது.

உள்கட்டமைப்புத்துறை வளர்ச்சி

உள்கட்டமைப்புத்துறை வளர்ச்சி

அதே போல் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய காரணிகளில் ஒன்றான உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சியும் கடந்த மார்ச் மாதத்தில் சுமார் 4.7 சதவிகிதம் தான். முந்தைய 2018ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது இது வெறும் 0.20 சதவிகிதம் மட்டுமே அதிகரிப்பாகும்.

மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம்
 

மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம்

இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, கடந்த 2018-19ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது என்றும், முன்னர் மதிப்பிட்டு இருந்த 7.2 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாக குறைந்துவிட்டது என்றும் மத்திய பொருளாதார கண்காணிப்பு மையமும் ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது.

பொருளாதார மந்தநிலை

பொருளாதார மந்தநிலை

மத்திய நிதியமைச்சகமும் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது உண்மைதான் என்றும் அனைவரும் எதிர்பார்த்தது போல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சற்று மந்த கதியில் தான் உள்ளது என்றும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது.

வாராக்கடன் பிரச்சினை

வாராக்கடன் பிரச்சினை

நாட்டின் வாராக்கடன் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. கடன் வாங்கியவர்கள் மத்திய அரசை ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளில் தஞ்மடைந்து சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடமிருந்து கடன் தொகையை வசூலிக்க எடுத்து வரும் நடவடிக்கை பெயரளவிற்கு மட்டுமே உள்ளது.

ஜெட்ஏர்வேஸ் பிரச்சினை

ஜெட்ஏர்வேஸ் பிரச்சினை

சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 8500 கோடி ரூபாய் கடன் பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாகி கடந்த ஏப்ரல் மாதத்தில் தன்னுடைய விமான சேவையை நிறுத்திவிட்டது. இதனால் இந்நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 38000 ஊழியர்கள் மறறும் பணியாளர்கள் வேலையிழந்து நடுத் தெருவுக்கு வந்துவிட்டனர். இவர்களுக்கு மார்ச் மாத சம்பளமும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

ஏர் இந்தியா சிக்கல்

ஏர் இந்தியா சிக்கல்

நாட்டின் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில மாதங்களாக சிக்கலில் இருந்து வருகிறது. விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளால் அடிக்கடி விமான சேவை ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாக ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை சரிந்து விட்டது. இதை சரிக்கட்ட ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்பவர்கள் கடைசி 3 மணி நேரதில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு 40 சதவிகித கட்டணச் சலுகை அளித்து பயணிகளை கூவிக்கூவி அழைக்கின்றது.

நாட்டின் எதிர்காலம்

நாட்டின் எதிர்காலம்

நாட்டின் நிலைமை இப்படி பாதாளத்தை நோக்கி நிற்காமல் சென்றுகொண்டிருக்கும்போது, ஸ்பைஸ்ஜெட் நிறுவன அதிபர் அஜஸ் சிங், இளைஞர்கள் அனைவரும் தங்களின் எதிர்காலம் கருதி மத்திய அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு

லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு

நாட்டில் தற்போது லோக்சபா தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 6ஆவது கட்டத் தேர்தல் நேற்று நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் நடந்த வாக்குப்பதிவின் போது வாக்களிக்க வந்த ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத் தலைர் அஜய் சிங், இப்போதைய சூழலில் வேலைவாய்ப்புகள் பெருக வேண்டுமானல் மத்திய அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார்.

பாஜகவிற்கு ஓட்டு போடுங்க

பாஜகவிற்கு ஓட்டு போடுங்க

அதோடு நில்லாமல், இளைஞர்கள் தங்களின் எதிர்காலம் கருதி மத்திய அரசுக்குத்தான் வாக்களிக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும், மேலும் உள்கட்டமைப்பு வசதிகள் பெருகவும், பொருளாதார வளர்ச்சி மேம்படவும், இந்தியா வளரும் நாடுகளில் முன்னிலை பெறவும், விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சியடையவும் இளைஞர்கள் பாஜகவிற்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார்.

விமான போக்குவரத்துத்துறை

விமான போக்குவரத்துத்துறை

விமானப் போக்குவரத்துதுறையில் தற்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலை குறித்து கூறுகையில், விமானப் போக்குவரத்துத் துறையில் இப்பொழுது ஏற்பட்டுள்ள நலை தற்காலிகமானது மற்றும் எதிர்பாராதது. எனவே விமானப் போக்குவரத்துத் துறையும் மத்திய அரசும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது.

நிலைத்த தன்மை அவசியம்

நிலைத்த தன்மை அவசியம்

இனிமேல் இதுபோன்றதொரு நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டியது விமானப்போக்குவரத்துத் துறை மற்றும் மத்திய அரசின் கடமையாகும். ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் இத்துறையில் சரிவு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். இருந்தாலும், விமானப் போக்குவரத்துத் துறையில் ஆரோக்கியமான நிலைத்த தன்மையை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் அஜய் சிங் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Spice Jet Chief Says youngster should vote for government

Youngster should focus on their futures, those that will create a strong economy and that will create more jobs for all Indians, and India is going to be one of the leading countries in the word, said SpiceJet Chief Ajay Singh.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X