லாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல.. இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவன உரிமம் ரத்தா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஐ.டி நிறுவனதங்களில் முன்னனி நிறுவனங்களான இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்துள்ளது மத்திய அரசின் உள்துறை அமைச்சகம். அதோடு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த பவுண்டேஷனுக்கு தடையும் விதித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

 

முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் என்னும் பெயரில் 1996ஆம் வருடம் தொடங்கப்பட்டது. இந்த தொண்டு நிறுவனம் கல்வி, கிராம முன்னேற்றம், மருத்துவம், கலை, கலாச்சாரம், இதோடு ஆதரவற்றோருக்கு நலம் உள்ளிட்டோருக்கு உதவி வந்தது. இந்த தொண்டு நிறுவனத்தின் தலைவியாக சுதா மூர்த்தி பொறுப்பு வகித்தும் வருகிறார்.

சமீபத்திய அரசு உத்தரவின் படி, வெளி நாட்டு உதவி பெரும் அனைத்து தொண்டு நிறுவனங்களும் தங்களது கனக்குகளை முழுவதுமாக அரசிடம் அளித்து அனுமதி பெற வேண்டும் என்பதே அரசி உத்தரவு.

மொத்தம் 1755 நிறுவனங்கள்

மொத்தம் 1755 நிறுவனங்கள்

ஆனால் இது போன்ற கணக்கு வழக்குகளை வழங்காத 1755 தொண்டு நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு இந்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த லிஸ்டில் உள்ள நிறுவனங்களில் இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனும் ஒன்று.

வெளி நாட்டிலிருன்து எந்த உதவியும் இல்லை

வெளி நாட்டிலிருன்து எந்த உதவியும் இல்லை

ஆனால் இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனம் கூறுகையில், இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் தங்களுக்கு தற்போது வெளி நாட்டிலிருந்து எந்த உதவிகளும் வருவதில்லை. இதனால் கணக்குகள் அளிக்க தேவையில்லை எனவும் கூறியுள்ளது.

ஏன் சொல்லவில்லை?

ஏன் சொல்லவில்லை?

ஆனால் அன்னிய செலவாணி சட்டப்படி வெளி நாட்டு உதவிகள் பெறாத வருடங்களில், உதவிகள் எதுவும் வரவில்லை என குறிப்பிட்டு கணக்குகள் அளிக்க வேண்டும் என்பதை இன்ஃபோசிஸ் மறந்து விட்டது போலும்.

6 வருடங்களாக எந்த அறிக்கையும் இல்லை
 

6 வருடங்களாக எந்த அறிக்கையும் இல்லை

இதே போன்று இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த 6 வருடங்களாக கணக்கு தாக்கல் அறிக்கையை அளிக்காததால் அந்த நிறுவனத்தின் பவுண்டேஷன் உரிமத்தை ரத்து செய்யவும், அதே சமயம் அந்த பவுண்டேஷன் இயங்கவும் தடை விதித்துள்ளது உள்துறை அமைச்சகம்.

லாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல

லாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல

இந்த நிலையில் இந்த பவுண்டேஷன் வெப்சைடில் இது குறித்த தகவல் ஏதும் கிடைக்குமா என்று பார்க்கையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த பவுண்டேஷன் அடித்தட்டு மக்களுக்கு தனது சமூக சேவையை செய்வதற்காகவும், இதன் மூலம் தனது சமூகத்தில் இருக்கும் தனது பொறுப்புணர்வை நிறைவேற்றும் முயற்சியாகவும் தான் இந்த பவுண்டேஷன் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இது லாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறதாம்

பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறதாம்

மேலும் ஆரம்பத்தில், இன்போசிஸ் அறக்கட்டளை கர்நாடகாவில் மட்டும் செயல்படுத்தப்பட்டதாகவும், அதன் பிறகு ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், பீகார், தில்லி, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Home ministry cancels FCRA registration of Infosys Foundation

The home ministry has cancelled the FCRA licence of Infosys foundation.
Story first published: Tuesday, May 14, 2019, 17:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X