மும்பை டூ லண்டன்.. இனி சொய்ங்னு போய்ரலாம்.. அதுவும் ஒரு மணி நேரத்தில்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மும்பை டு லண்டன் இனி ஒருமணி நேரம்தான்; வருகிறது ஹைபர் சோனிக் விமானம்.

 

மும்பையில் இருந்து லண்டனுக்கு ஒரு மணி நேரத்தில் செல்லலாம். இதற்காக ஒலியை விட வேகமாக செல்லும் ஹைபர் சோனிக் விமானம் பொது பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

அறிவியலின் அபார வளர்ச்சியினால் தொழில்நுட்பம் தொட முடியாத உயரங்களை தொட்டு வருகிறது. அந்த வகையில் இனி லண்டனுக்கு இந்தியாவில் இருந்து காலை உணவு முடித்துவிட்டு இங்கிலாந்தில் இருக்கும் அலுவலகத்திற்கு சென்று விட்டு அலுவலக வேலை நேரம் மாலை வரை இருந்தால் மறுபடியும் இரவு உணவுக்கு இந்தியாவுக்கே வந்துவிடக் கூடிய அளவில் வசதிகள் வந்துவிட்டது. இந்த நிலையை சாத்தியப்படுத்த ஒலியைவிட வேகமாக செல்லும் ஹைபர் சோனிக் விமானம் பயணிகளோடு வானில் பறக்க உள்ளது.

மும்பை டூ லண்டன்.. இனி சொய்ங்னு போய்ரலாம்.. அதுவும் ஒரு மணி நேரத்தில்!

இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரியாக்‌ஷன் இஞ்சினியர் லிமிடெட் நிறுவனம் ஹைப்பர் சோனிக் விமானத்தை தயாரித்து வருகிறது. உலகத்தின் அதிவேகமான விமானமான MiG-25-ன் அதிகப்படியான வேகம் 3ஆயிரத்து 200 ஆக உள்ள நிலையில், அதை விட இருமடங்கு வேகத்தில் செல்லும் அளவிற்கு இந்த புதிய ரகவிமான வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் 38,800 மைல்களை இந்த விமானம் மூலம் கடந்து செல்ல முடியும்.

அதிவேகமாக செல்லக்கூடிய இந்த ஹைபர் சோனிக் விமானத்தின் வெளிப்பாகம் செராமிக் மற்றும் கடினமான ரசாயன கலவைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த ரசாயன கலவைகள் பூசப்பட்டு எந்த விமானமும் உருவாக்கப்படவில்லை இப்போது விமானம் மூலம் மும்பையிலிருந்து லண்டன் செல்லக் குறைந்தது 8 முதல் 11 மணி நேரம்வரை தேவைப்படும் என்ற நிலையில் ஹைபர் சோனிக் விமானம் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் வெறும் ஒருமணி நேரத்தில் சென்று விட முடியும்.

ஆனால் கட்டணம் அதற்கேற்ற வகையில் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் தலைவர்கள், கார்ப்பரேட் முதலாளிகள் என்று பண வசதி படைத்தோருக்கும் நேரம் கருதி செயல்படுவோருக்கும் இந்த கட்டணம் பெரிதாக தெரியப்போவதில்லை. இந்த விமானம் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் விமான போக்குவரத்து அடுத்த கட்டத்தை விரைவில் எட்டும்.

 

ஹைப்பர் சோனிக் விமானத்தின் அடுத்த கட்டமாக நாசாவின் நிதியுதவியுடன் 3 ஆயிரம் டிகிரி வரை இந்த விமானம் தட்பவெட்பத்தை தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு விரைவில் நிலவு வரை செல்லக்கூடிய அளவுக்கு விமானம் தரம் உயர்த்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mumbai to london hyper sonic flight to be introduced

A Hypersonic flight is being introduced soon between Mumbai and London.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X