சாதனை படைக்க போகும் பெண்கள்.. பெண்களுக்கான நிர்வாக பதவிகளை அதிகரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரீஸ் : நாற்பத்தி ஐந்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் வரும் 2022-ம் ஆண்டில் 30% பெண்கள் தலைமை நிர்வாக பொறுப்பில் இடம் வகிப்பர் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாம்.

அதிலும் அலிபாபா, பி.என்.பி பாரிபாஸ், புக்கிங்.காம், ஐபிஎம், லோரியல் மற்றும் உபர் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்களில், தலைமை பொறுப்புகளில் பணியாற்றுவதற்காக கையெப்பமிட்டுள்ளனராம். அதிலும் பாரிஸ் நகரில் வேலை செய்வதற்காக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அந்த ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது.

சாதனை படைக்க போகும் பெண்கள்.. பெண்களுக்கான நிர்வாக பதவிகளை அதிகரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

புதிய விமானங்களை களமிறக்கும் இண்டிகோ.. ஜீலை 20-முதல் ஆரம்பம் புதிய விமானங்களை களமிறக்கும் இண்டிகோ.. ஜீலை 20-முதல் ஆரம்பம்

எனினும் சமீபத்தில் மெக்கின்ஸி நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், தொழில் நுட்ப துறை சார்ந்த ஆய்வை நடத்தியது. அதன் படி தற்போது பெண்கள் வெறும் 15% நிர்வாக பதவிகளை மட்டுமே வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்த புதிய ஆய்வு பெண்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கிறது.

இவ்வாறு நிர்வாக பொறுப்பிலும் சரி, தலைமை பொறுப்பிலும் சரி வேலை செய்யும் பெண்கள் எந்த நாடுகளில் அதிகளவில் இருக்கின்றனர் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு எந்த நாடுகள் பெண்கள் வேலை செய்ய சிறந்த நாடாக தேர்தெடுக்கப்பட்டுள்ளது என்பது "Women in work Index 2019" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் நாடாக ஐஸ்லாந்து 100க்கு 79.1 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. இதே சுவீடன் நாடு 76.1 மதிப்பெண்களை பெற்று இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து 73.6 மதிப்பெண்களுடன் 3-வது இடத்திலும், ஸ்லோவேனியா 73.5 மதிப்பெண்களுடன் நான்காவது இடத்திலும், 72.3 மதிப்பெண்களுடன் நார்வே ஐந்தாவது இடத்திலும் உள்ளதாம்.

இதில் 6 வது இடத்தில் லக்சம்பர்க்கும், 7வது இடத்தில் 70.1 மதிப்பெண்களுடன் டென்மார்க்கும், போலந்து 8 வது இடத்திலும், இதற்கு அடுத்தடுத்த இடத்தில் பின்லாந்தும் பெல்ஜியமும் உள்ளன.

இதே அமெரிக்காவுக்கு 23வது இடம்தான் கிடைத்துள்ளன. இதுவே இந்தியா பெண்களுக்கான வேலை செய்வதற்கான சரியான முக்கியத்துவமும் கிடைப்பதில்லை. இங்கு ஆண் பெண் வேறுபாடு உண்டு. அதே ஒரே வேலையை செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கிட்டதட்ட 35% சம்பள வேறுபாடு உள்ளது. இதையும் மீறி ஒரு பெண் வேலை செய்கிறார் எனில் சம்பளம் மிக குறைவாகவே உள்ளதாகவே இருக்கிறதாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷய என்னவெனில் இவ்வாறு வேலை செய்யும் பெண்களின் மதிப்பு, சுவீடனில் உள்ளது போல அதே விகிதத்தில் (69%) பெண் வேலைவாய்ப்பை இந்தியா பெற்றுக் கொள்ள முடியுமானால், இது கூடுதல் $ 7 டிரில்லியை உருவாக்கும் - இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 79% ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT companies make to double number of women higher posts by 2022

45 Tech giants committed to doubling the number of women on their management board to 30% by 2022.
Story first published: Thursday, May 16, 2019, 16:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X