ஃபனியால் ரூ.12,000 கோடி இழப்பீடு.. ஃபனி படுத்திய பாடால் பதறும் ஒடிசா மக்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புபநேஷ்வர் : ஃபனி புயலால் ஒடிசாவில் சுமார் ரூ.12000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

 

கடந்த 3-ம் தேதி ஒடிசாவின் 14 மாவட்டங்களை ஃபனி புயல் தாக்கியது. இதில் சுமார் 64 பேர் உயிரிழந்தனராம். 5 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனராம். புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான பல்வேறு பகுதிகளில் மாநில அரசு அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஃபனியால் ரூ.12,000 கோடி இழப்பீடு.. ஃபனி படுத்திய பாடால் பதறும் ஒடிசா மக்கள்

இந்த நிலையில் புயல் சேதத்தை மதிப்பிடுவதற்காக ஒடிசாவில் மத்தியக் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த குழுவிடம், புயல் சேதம் தொடர்பான முதல்கட்ட அறிக்கையை ஒடிசா அரசு வழங்கியுள்ளது. இதில், மாநிலத்துக்கு சுமார் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில் அரசு சொத்துகள் மட்டும் ரூ. 5,175 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், புயல் நிவாரணம் உள்ளிட்ட மீட்புப் பணிகளுக்கான செலவு ரூ.6,767.56 கோடி எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாம்.

இது குறித்து ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் எஸ்.பி. சேதி கூறியதாவது, கொடுக்கப்பட்டுள்ள முதல்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சேத மதிப்பு மேலும் உயர வாய்ப்புள்ளது. இது தற்காலிக மானது தான். இன்னும் விரிவான அறிக்கைக்கு பிறகே அது தெரியவரும். இந்த நிலையில் தேசிய பேரிடர் நிவாரண நிதி சிறப்பு பேரிடர் நிவாரண நிதி உதவி தொடர்பான விதிமுறைகளை தளர்த்தும்படி மத்தியக் குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆக இது குறித்து முழுமையான அறிக்கை விரைவில் தயாராகும்.

இதில் குறிப்ப்பாக புரி மாவட்டத்தில் மட்டும் 75 மின் கோபுரங்கள் சாய்ந்துள்ளன. இதனை சீர்செய்ய அதிக அளவில் முதலீடு தேவைப்படுகிறது என அவர் கூறியுள்ளராம் சேதி.

அதொடு அறிக்கையில், 1,160 கோடி ரூபாயில் மின்வாரியத்தில் மிக அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும். பஞ்சாயத்து ராஜ் மற்றும் குடிநீர் துறையின் இழப்பு 587 கோடி ரூபாய் எனவும் காட்டப்படுள்ளது. ஆனால் இந்த ஆரம்ப அறிக்கையில் காட்டப்பட்ட இழப்பு முற்றிலும் தற்காலிகமாகும் என் கிறார் சேதி.

 

இந்த மத்தியக் குழுவின் தலைவரான மத்திய உள்துறை கூடுதல் செயலர் விவேக் பரத்வாஜ் கூறுகையில், ''மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்கள், ஓட்டல்கள் என பல பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புரி பகுதி மோசமாக பாதிப்படைந்துள்ளது. இந்த பாதிப்படைந்த மக்களுக்கு உதவிட ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: cyclone odisha ஒடிசா
English summary

Odisha estimates loss at Rs.12,000 cr due to Fani

Estimated a tentative loss of Rs.12,000 crore due to cyclone Fani, also odisha govt told it an preliminary report only.
Story first published: Thursday, May 16, 2019, 10:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X