சீனாவுக்கு அடுத்தடுத்து செக் வைக்கும் அமெரிக்கா.. சீனா தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு தடை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன் : அமெரிக்கா சீனாவிடையே நிலவி வரும் வர்த்தக போர் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் இந்த நிலையில், அமெரிக்கா அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இந்த நிலையில் ஏற்கனவே அமெரிக்கா - சீனா ஆகிய இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகப் போரை இந்த தடை உத்தரவு மேலும் தீவிரப்படுத்துவதாய் அமைந்துள்ளது.

இந்த தடையை அமல்படுத்துமாறு கடந்த புதன்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த நிலையில் இந்த உத்தரவில் எந்த ஒரு தனி நிறுவனத்தையோ அல்லது நாட்டையோ குறிப்பிடவில்லை என்று கூறப்பட்டுள்ளதாம். எனினும் இது சீனாவின் ஹூவாய் போன்ற நிறுவனங்களுக்கான 'செக்' என்றே அதிகாரிகள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.

அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்வு இப்போதைக்கு இல்லை - மீண்டும் ஒத்திவைப்பு அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்வு இப்போதைக்கு இல்லை - மீண்டும் ஒத்திவைப்பு

5ஜி சேவை- ஹீவாய்

5ஜி சேவை- ஹீவாய்

இந்த நிலையில் ஹீவாய் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, சீனா பிற நாடுகளில் உளவு பார்ப்பதாகவும், அமெரிக்காவும், அதனுடனான நட்பு நாடுகளும் குற்றம் சாட்டி வந்த நிலையில், ஹீவாய் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் ஆராய்ச்சிக்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த நிலையிலே அமெரிக்கா இப்படியொரு அவசர நிலை பிரகடனத்தை செயல்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

அமெரிக்காவின் தொழில் நுட்பம் களவாடப்படுகிறதா

அமெரிக்காவின் தொழில் நுட்பம் களவாடப்படுகிறதா

அமெரிக்காவின் தொழில்நுட்பம் களவாடப்படும் ஆபத்து உள்ளது என்றும், அதனால் உலகில் மிகப் பெரிய தொலைத் தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இருந்து 5ஜி அலைக்கற்றையை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இது முழுக்க ஹீவாய் நிறுவனத்தை குறி வைத்தே செயல்படுவதாகவும் சீனா வட்டாரத்தில் செய்திகள் கூறுகின்றன.

வர்த்தக துறையின் அனுமதி
 

வர்த்தக துறையின் அனுமதி

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அல்லது வெளியுறவு கொள்கைக்கு எதிரான செயல்களில் ஹூவாய் நிறுவனம் ஈடுபட்டுள்ளதை பொருத்துக் கொள்ள முடியாது என்று வர்த்தகத் துறை குற்றம் சாட்டியது. இதோடு அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை மற்றொரு நிறுவனத்துக்கு விற்கவோ அல்லது மாற்றம் செய்யவோ அமெரிக்க வர்த்தகத்துறையின் அனுமதி பெற வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.

பாதிப்பு ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் இல்லை

பாதிப்பு ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் இல்லை

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அல்லது வெளியுறவு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு நிறுவனத்துக்கும் லைசென்ஸ் வழங்கப்படமாட்டாது என்றும் கூறியுள்ளதாம் அமெரிக்கா. இதனால் சீனாவின் ஹூவாய் நிறுவனம் செல்போன் அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றது. இந்த தடை உத்தரவால் சீனா உள்பட வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் செய்ய புதிதாக உரிமம் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

நீளும் தடை பட்டியல்

நீளும் தடை பட்டியல்

இந்த நிறுவனத்தின் மீதான தடை உத்தரவு மட்டும் அல்ல, இதோடு சேர்ந்து 70 நிறுவனங்களை தடை செய்யுமாறு தடை உத்தரவி பிறபிக்கப்பட்டுள்ளதாம். இந்த தடை உத்தரவு பெருமளவில் பொருளாதார பிரச்சனையை உருவக்குவதோடு, சீனாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே பலத்த பிரச்சனையை உருவாக்கியுள்ளது.

ஈரானுக்கா உதவி செய்கிறாய்?

ஈரானுக்கா உதவி செய்கிறாய்?

சீனாவை சேர்ந்த இந்த ஹீவாய் நிறுவனம், அமெரிக்காவுக்கு எதிரி நடான ஈரானுக்கு உதவிகளை செய்து வருவதாகவும், ஈரான் மீது தாங்கள் விதித்துள்ள பொருளாதார தடையையும் மீறி அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்து வருகிறதாம். அதோடு அந்த நாட்டுக்கு மறைமுக உதவியும் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. எனினும் இது வரை எது உண்மை என நிரூபிக்கப்படவில்லை என்பதே உண்மை. சரியான ஆதராமும் கிடைக்காத நிலையில் அமெரிக்கா இப்படியொரு அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China's Huawei, also 70 affiliates placed on U.S. trade blacklist

US on Wednesday has blacklisted Chinese telecom company huawei with 70 affiliates citing threats to national security
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X