என்னாது ரூ.6099 கோடி லாபமா.. இந்தியன் ஆயில் நிறுவனத்திலா.. அப்படின்னா விலை குறையுமா??

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் ரூ.6099 கோடியை நிகரலாபமாக பெற்றுள்ளதாம். இதே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 5218 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது மொத்தம் 17% அதிகமாகும்

 

இதே இந்த நிறுவனத்தின் வருவாய் 2018 - 2019ல் கடந்த நான்காவது காலாண்டில் 1,44,472 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதே இதற்கு முந்தைய ஆண்டில் 1,36,716 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 17வது லோக் சபா தேர்தலின் போது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு பலத்த சர்ச்சையை கிளப்பியது. அதோடு கர்நாடாகா தேர்தலின் போது பல கட்சிகள் இந்த விலை உயர்வை கண்டித்து எதிர்கோஷமிட்டன. இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட் ரோலியம் ஆயில் கார்ப்பரேஷன் தொடர் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தின. இதனால் காலாண்டு லாபம் அதிகரித்திருந்தாலும் வருட லாபம் குறைந்தே காணப்படுகிறது.

வருட நிகரலாபம் 21% வீழ்ச்சி

வருட நிகரலாபம் 21% வீழ்ச்சி

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் சிங் இது குறித்து கூறுகையில் கடந்த 2018 - 2019 நிதியாண்டில் 6,05,924 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதே கடந்த 2017 - 2018 ஆம் ஆண்டில் 5,06,428 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த வருவாய் அதிகரிப்பு அதிக அளவு விலையேற்றம் மற்றும் விற்பனை பொருட்களின் மதிப்பு காரணமாகவே இருந்தது. எனினும் இந்த நிறுவனத்தின் வருட நிகர இலாபம் 21% வீழ்ச்சியடைந்தே காணப்படுகிறது. குறிப்பாக 16,894 கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.

சுத்திகரிப்பு செலவு கம்மி

சுத்திகரிப்பு செலவு கம்மி

இதுவே மொத்த சுத்திகரிப்பு செலவு கச்சா எண்ணெய் விலை மற்றும் இறுதிப் பொருட்களின் விற்பனையிலிருந்து பெறப்பட்ட வருவாய்க்கான வித்தியாசம்-2018 -2019ல் பீப்பாய் ஒன்றுக்கு 5.41 டாலராக குறைந்துள்ளது. இது 2017 - 2018 ல் பீப்பாய்க்கு 8.49 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் இருப்பின் மூலம் லாபம்
 

கடந்த ஆண்டில் இருப்பின் மூலம் லாபம்

இதுவே மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில், கச்சா எண்ணெய் இருப்பின் மூலம் பெறப்பட்ட லாபம் ரூ 2,655 கோடி எனவும் அறிவித்துள்ளது.

ஒப்பந்தத்தால் சற்று ஆறுதல்

ஒப்பந்தத்தால் சற்று ஆறுதல்

இந்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம், ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்ட நிலையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்குமே என்ற நிலையில் அனைவரையும் சற்று ஆறுதல் அடையும் அளவுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சவுதி அராம்கோ இறக்குமதி

சவுதி அராம்கோ இறக்குமதி

அதில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த சவுதி அராம்கோ என்ற நிறுவனத்திடம் கச்சா எண்ணெய் வாங்கப்போவதாகவும், மாதத்திற்கு 2,50,000 டன் கச்சா எண்ணெய் அதிகமாக இறக்குமதி செய்யப் போவதாகவும், இந்த அதிகரிப்பு ஈரான் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடைகளை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

எங்ககிட்ட ஒப்பந்தம் இருக்கு அதனால கவலையில்ல

எங்ககிட்ட ஒப்பந்தம் இருக்கு அதனால கவலையில்ல

இது குறித்து கூறிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குனர் ஏ.கே.சர்மா கூறுகையில், சவூதி அரேபியாவிலிருந்து கூடுதல் அளிப்புகளாக 5.6mt ஆண்டு கால ஒப்பந்தம் உள்ளது. இதனால் ஈரானிய எண்ணெய் இறக்குமதி தடைகளின் மூலம் எந்த பற்றாக்குறையும் இருக்காது. இந்த ஒப்பந்தம் காரணமாக இந்தியாவில் விநியோக பற்றாக்குறையையும் தடுக்க முடியும். இதனால் பற்றாக்குறை என்ற கவலை இல்லை எனவும் கூறுகிறார் சர்மா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Oil Q4 profit up 17% to Rs.6099 crore

IOC on Friday said its fiscal fourth-quarter profit UP 17% to Rs.6,099 crore, same time IOC had reported a profit of Rs.5,218 crore in the year-ago period.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X