எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கோம்.. வாங்கடா நீங்களா நானா பாத்துக்கலாம்.. பொருமும் சீனா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: அமெரிக்கா சீனாவிடையே நிலவி வரும் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நிலையில், சுமூக நிலை என்பது கேள்விக்குறிய விஷயமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த இரு நாடுகளின் வர்த்தக சூழலும் பாதிக்கப்பட்டு கொண்டே வருகிறது.

 

அதோடு இரு நாடுகளின் பொருளாதாரமும் சரிந்து வரும் நிலையே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்துள்ளதாகவும், இதனால் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% குறையலாம் என்றும் சீனா உயர்மட்ட அதிகாரிகள் குழுவில் கூறப்படுகிறதாம்.

இதோடு வாஷிங்டனுடன் ஒப்பிடும் போது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக சீனா உள்ளது என்றும் உயர்மட்ட சீன அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறதாம்.

சீனாவின் ஜி.டிபி வளர்ச்சி குறையும்

சீனாவின் ஜி.டிபி வளர்ச்சி குறையும்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் சீனாவின் ஜி.டி.பி வளர்ச்சி கடந்த ஆண்டே 6.8 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது நடப்பு ஆண்டில் இன்னும் குறைந்து 6.5 - 6 சதவிகிதமாக குறையலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாம்.

$539 பில்லியன் வர்த்தக பற்றாக்குறை

$539 பில்லியன் வர்த்தக பற்றாக்குறை

கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தக பற்றாக்குறையானது 539 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதாவது சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யப்படுவதை விட இறக்குமதி செய்யப்படும் பொருட்களே அதிகம் என குற்றம் சாட்டியது அமெரிக்கா. ஆக இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட இடைவெளியே இந்த வர்த்தக பற்றாக்குறையாக இருந்து வருகிறது.

பல  முறை பேச்சு வார்த்தையால் சுமூக நிலை இல்லை
 

பல முறை பேச்சு வார்த்தையால் சுமூக நிலை இல்லை

சீன அரசும் இந்த நாட்டின் அதிபரும் அமெரிக்காவுடன் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் சுமூகமான நிலை என்பது இதுவரை வரவேயில்லை. இந்த நிலையில் அமெரிக்கா சீனா மீதான ஒவ்வொரு வர்த்தக தாக்குதலையும் நடத்தி வருகிறது.

பல பிரச்சனைகளை சந்திக்கும்

பல பிரச்சனைகளை சந்திக்கும்

இந்த நிலையில் பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவும் சரி, சீனாவும் சரி பல பிரச்சனைகளை சந்திக்கும் என்று ஏன் இந்த இரு நாடுகளுக்கும் தெரியாமல் போனதென்று தெரியவில்லை.

அமெரிக்கா – சீனா வரி அதிகரிப்பு தொடர் கதை

அமெரிக்கா – சீனா வரி அதிகரிப்பு தொடர் கதை

இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா வரி விதிப்பதும், இதுவே சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் இதன் முடிவு எங்கே எப்படி முடியும் என்றும் தெரியாதா நிலையிலேயே இருந்து வருகிறது.

வர்த்தக போர் மாற்றத்தை கொண்டு வரும்

வர்த்தக போர் மாற்றத்தை கொண்டு வரும்

தாய்வானைச் சேர்ந்த சீனாவை அடிப்படையாக கொண்ட நிறுவனங்கள், கிட்டதட்ட ஒரு வருட காலமாக நீடிக்கும் இந்த பிரச்சனையால் சீனாவின் ஜி.டி.பி வளர்ச்சி சுமார் 1 சதவிகிதம் குறையலாம் என்றும் கணித்துள்ளனவாம். எனினும் இந்த வர்த்தக யுத்தம், முக்கிய பொருளாதார வளர்ச்சியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதினும், இது ஒரு மாற்றங்களுக்கும் வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறதாம்.

இதுவரை 11 முறை பேச்சு வார்த்தை

இதுவரை 11 முறை பேச்சு வார்த்தை

சீனா மற்றும் அமெரிக்கா இரு நாடுகளின் வர்த்தக அதிகாரிகளால் இதுவரை 11 சுற்று சுற்று பேச்சுவார்த்தைகளை நடந்துள்ளன. எனினும் இதுவரை இரண்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏற்றுமதியில் பில்லியன் கணக்கான வரிகளை விதித்துக் கொண்டும் உள்ளனர்.

சீனாவுக்கே அதிக பாதிப்பு

சீனாவுக்கே அதிக பாதிப்பு

எனினும் அமெரிக்கா சீனாவிடையேயான இந்த குழப்பத்தால் பெரிதும் பாதிக்கப்படுவது சீனாவே. எனினும் அமெரிக்காவுக்கும் சிறிது பிரச்சனை இருந்தாலும் அது வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தாது. இதனாலேயே அமெரிக்கா தொடர்ந்து வர்த்தகபோரை நீடித்துக் கொண்டும் இருக்கிறது.

பிரச்சனையை கடக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது

பிரச்சனையை கடக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது

அதோடு உண்மையில் சீனப் பொருளாதாரம் ஒரு நேர்மறையான வேகத்துடன் தொடர்ச்சியாக வளர்ந்து வருகிறது. அமெரிக்கப் பக்கத்தின் வர்த்தக நடவடிக்கைகள் சீனா பொருளாதாரம் மீது சில தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதை முற்றிலும் கடக்க முடியும் என்றும் சீனா கூறுகிறது.

எல்லாத்துக்கும் தயாராக உள்ளோம்

எல்லாத்துக்கும் தயாராக உள்ளோம்

எந்தவொரு வெளிப்புற ஆபத்துக்களுக்கும், தாக்கங்களுக்கும் எதிராக நாங்கள் நம்பிக்கையையும் திறனையும் கொண்டிருக்கிறோம் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறியுள்ளாராம். அட ஆமாங்க எல்லாத்துக்குமே ரெடி ஆயிடுச்சாம் சீனா...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top Chinese official says trade war with US may reduce country's GDP

A high ranking Chinese official has said that the ongoing trade war with the US could affect China's GDP by 1%.
Story first published: Saturday, May 18, 2019, 7:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X