சேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோயமுத்தூர் : அனைவருக்குமே சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்கும். ஆனால் சூழ்நிலையால் அனைவருமே ஒருகட்டத்தில் அதை செய்ய இயலாமல் கைதியாகி போகிறோம். இன்றைய காலகட்டத்தில் உங்கள் வருமானத்தின் ஒரு பகுதி சேமிப்பாக இருக்க வேண்டும். அது உங்களுக்கும் உங்களை சுற்றியிருப்போருக்கும் மிக நல்லதே.

 

எனினும் செலவுகள் அதிகரித்திருக்கும் இந்த சூழலில் சேமிப்பை பற்றி யோசிப்பது என்பது கொஞ்சம் கடினமான ஒன்றாக இருந்தாலும் கூட, அதற்காக சேமிப்பே சாத்தியமில்லை என நினைக்க வேண்டாம். அதற்கு பதில் கொஞ்சம் மாற்றி யோசித்தாலே இதை சரி செய்யலாம்.

சேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்

முதலில் உங்களது பணம் எவ்வகையில் செலவாகிறது என தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் சேமிப்பதை பற்றி யோசிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் செய்யும் அனாவசிய செலவுகளை குறைத்தாலே சேமிப்பு என்பதற்கு தானாக வழி பிறக்கும்.

வருமானம் என்ன? செலவு எவ்வளவு? (whats your Revenue)
முதலில் உங்களுடைய வருமானம் எவ்வளவு? அதில் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அப்படி சேமிக்க கூடிய பணத்தின் மூலம் எப்படி வருமானத்தை அதிகரிக்கலாம் என்று யோசியுங்கள்.

சேமிப்பு வருமானத்தை அதிகரிக்க வேண்டும் (increase your savings income)
இது தான் அதிகளவு சேமிப்¬பாக மாறும். ஆக மொத்தம் அதிகம் சேமிக்க வேண்டும் என்றால் சேமிக்க கூடிய வருமானத்தை அதிகமாக்க வேண்டும். இதற்கு செலவுகளை முதலில் குறைக்க வேண்டும். செலவுகளை குறைக்க வழிகளை கண்டறிய முடிந்தால் இப்போதைய ஊதியத்திலேயே சேமிப்பது சாத்தியம் தான் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் எப்படி என்று தான் பலருக்கும் தெரியாது. இதோ எங்களுக்கு தெரிந்த சில வழிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

கடனை குறையுங்கள் (Eliminate Your Debt)
நம்மில் 100க்கு 90 பேர் முதலில் சிக்கித் தவிப்பது இந்த கடன் பிரச்சனையாலேயே. முதலில் இந்த கடனை குறைப்பதற்கான வழி என்ன என்பதை கண்டுபிடித்து அதற்கு தீர்வு காண வேண்டும். பலர் அதிகப்படியான வட்டியாலேயே கடனாளியாகின்றனர். வட்டிக்கு மேல் வட்டி போட்டு அது குட்டியாகி கடைசியில் கடனாளியாகின்றோம். இதை தடுக்க ஒரே நேரத்தில் முடியாவிட்டாலும் முதலில் இந்த மாதிரியான வட்டி கடனை தவிர்க்கலாம். முடிந்த மட்டிலும் குறைந்த வட்டியிலாவது கடன் வாங்கலாம். இதனால் உங்களுக்கு கடனுக்கு அளிக்கும் வட்டியாவது மிஞ்சும்.

 

சேமிப்பை இலக்காங்குகள் (Aim to save)
சேமிப்பதற்கு முன்பு ஒன்றை இலக்காக தேர்தெடுங்கள் அது உங்களை வழி நடத்தி செல்லும். உதாரணமாக இன்னும் நான்கு வருடத்தில் நான் ஒரு வீட்டை வாங்க வேண்டும். அதற்காக நான் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும். அதற்காக வீடு வாங்க வேண்டும். அதற்காக சேமிக்க வேண்டும் என்பதை அடிக்கடி மனதில் எண்ணிக் கொள்ளுங்கள். இது சீக்ரெட்ஸ் புத்தகத்தின் மந்திரமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்றைய தலைமுறையிடம் இந்த மாதிரியான எண்ணங்கள் அதிகம் காணப்படுவதை கண் கூடாகப் பார்க்க முடிகிறது.

உங்களுக்காகவும் கொஞ்சம் (Pay Yourself First)
முடிந்த மட்டிலும் உங்களுக்காக கொஞ்சம் செலவிடுங்கள். இது உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்துக்காகவும் என்றாவது ஒரு நாள் உபயோகப்படும். குறிப்பாக இன்ஷூரன்ஸ் பாலிசியாக கூட இருக்கலாம். நீங்கள் ரூ.50,000 சம்பளம் வாங்குறீர்கள் என்றால் அதில் ரூ.1000 பாலிசிக்காக செலவிடுவதில் தவறில்லையே. இதே ரூ.30,000 சம்பளம் வாங்கும் ஒருவர் அவருக்காக ரூ.500 ஒதுக்குவதில் சிரமம் இருக்காது.

வீண் செலவுகளை குறை (Stop smoking, drinking)
இந்தியர்களில் 4.3:1 ஒருவர் இந்த புகைப் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றனராம். இதில் என்ன கொடுமை எனில் வருடத்திற்கு சுமார் ரூ.80,000 கோடி வரை இந்த புகை பழக்கத்திற்காக செலவு செய்கின்றனர் என்று புகையிலை கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. இதே மொத்த மக்கள் தொகையில் 30% மக்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனராம். அதிலும் 11% பேர் அதிகப்படியான குடிப்பழக்கத்தை கொண்டுள்ளனராம். இவ்வாறு குடிப்பதை ஒரே அடியாக குறைக்க முடியாவிட்டாலும் சிறிது சிறிதாக குறைக்கலாம். இதன் மூலம் அதிகப்படியான தொகையும் மிச்சமாகும்.

நவ நாகரீகத்தை குறை (Take a "Staycation")
உதாரணமாக ஒருவர் திருமணத்தை நவ நாகரீகமாக ஆடம்பரமாக ஒரு மண்டபத்தில் நடத்த நினைக்கலாம். அதை நமக்கு தகுந்த வரையில் மாற்றிக் கொள்வதில் செலவைக் குறைக்கலாம். ஏன் வெளியூருக்கே செல்கிறோம். அவ்வாறு செல்லும்போது விமானத்தில் செல்கிறோம். அதை தவிர்த்து மாற்று வழியில் யோசிக்கும் போது செலவு மிச்சமாகும். இதுபோன்ற அனாவசிய செலவுகளை மிச்சப்படுத்தினாலே சேமிப்புகள் தானாக உயரும்.

பொருட்கள் வாங்குவதில் கவனம் ( Spend to Save)
இன்றைய காலகட்டத்தில் இளைஞர் மத்தியில் ஆன்லைன் மோகம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக வீட்டிற்கு பொருள் வாங்க வேண்டும் எனில் அதை ஆன்லைனில் ஆர்டர் செய்வது. அது பொருட்களின் தரம் எப்படி இருக்கும் என்று கூட தெரியாமல் ஆர்டர் செய்வது. அது வாங்கிய சில நாட்களிலேயே பழுதாகி செலவு வைக்கும். இதே நாம் நேரில் சென்று பொருட்களை பார்த்து அலசி வாங்குவதால் பொருட்களின் நம்பகத் தன்மையும் அதிகரிக்கும் இருக்கும். அதன் உபயோக காலமும் அதிகரிக்கும்.

உணவை எடுத்து செல்லுங்கள் (Pack Your Lunch)
சராசரியாக நகர்புறத்தை சார்ந்த ஒருத்தர் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் 10% உணவிற்காகவும் மற்ற உணவு பண்டங்களுக்காகவும் செலவு செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் 35 - 50 வரையில் உள்ளவர்கள் 3% இடம் வகிக்கிறார்களாம். ஆனால் அவர்கள் வீட்டிற்கு உணவுக்காக செலவு செய்யும் தொகையே சுமார் 13% தானாம். ஆக இன்று முதல் இல்லை இப்போதிலிருந்தே இதை தொடங்குகள். இது உங்கள் ஆரோக்கியத்துக்கும், குடும்ப ஆரோகியத்துக்கும் மிக அடிகோலும்.

வட்டியுடன் கூடிய சேமிப்பை துவங்குகள் (Create an Interest-Bearing Account)

சேமிப்பு என்பது வெறுமனே உங்களது சேமிப்பு அக்கவுண்டுகளில் சேமிப்பதை விட, அதை வட்டியுடன் கூடிய திட்டங்களில் சேமிக்கலாம். உதாரணத்திற்கு அஞ்சலகங்களில் சேமிக்கலாம். அதோடு முதலீட்டை பெருக்கும் வகையில் சேமிக்கலாம். சிலர் தங்கமாக வாங்கி வைப்பர். அதே தங்க பத்திரங்களாக வாங்கி வைக்கும் பட்சத்தில் உங்களது சேமிப்பு நாளுக்கு நாள் வளரும்.

வருட செலவுகள் (Annualize Your Spending)
தேவையற்ற வருட செலவுகளை குறைக்கப் பாருங்கள். இது சிறிய செலவு தானே என்று யோசிக்காமல் அதை வருடத்திற்கு யோசியுங்கள். நீங்கள் அடிக்கடி டீ குடிப்பவர் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு டீயின் விலை ரூ.10 என வைத்துக் கொண்டால் வருடத்திற்கு உதாரணமாக 300 நாட்களுக்கு கணக்கு வைத்துக் கொண்டால் ரூ.3000 வரை செலவாகும். ஆக இதுபோன்ற செலவுகளை படிப்படியாக குறைத்துக் கொண்டு வருமானத்தை அதிகரிக்க வழி தேடுவது உத்தமமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best Ways to Save Money

Use these saving- money tips to generate new ideas about the best ways to save money in your day-to-day life.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X