இனி அமெரிக்கா வேண்டாம்.. சீனாவில் அமெரிக்க ஸ்கிராப்புக்கு தடை.. களிப்பில் அமெரிக்க நிறுவனங்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க் : அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் வர்த்தக போர் இன்றளவிலும் சுமுக நிலைக்கு வராத நிலையில் மேலும் மேலும் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

 

இந்த நிலையில் அமெரிக்கா பொருட்களுக்கு வரி விதிப்பதும், சீனா அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பதும் சின்ன குழந்தைகள் சண்டை போடுவதை போல தற்போது சண்டை போட்டுக் கொள்கின்றன.

இனி அமெரிக்கா வேண்டாம்.. சீனாவில் அமெரிக்க ஸ்கிராப்புக்கு தடை.. களிப்பில் அமெரிக்க நிறுவனங்கள்

இதன் அடுத்தகட்டமாக தற்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்கிராப்புகளுக்கு, அதாவது அமெரிக்கா தொழிற்சாலைகள் மூலம் வெளியேற்றபடும் கழிவுகள் உதராணமாக பிளாஸ்டிக், பழைய பேப்பர் உள்ளிட்ட இன்னும் பல வகையான பொருட்களை சீனாவிற்கு இறக்குமதி செய்து கொண்டிருந்தது அமெரிக்கா. இதற்கு தற்போது சீனா தடை விதித்துள்ளதாம்.

சீனா இனி அமெரிக்காவிலிருந்து ஸ்கிராப் இறக்குமதி செய்ய கூடாது என்று சீனா நிறுவனங்களுக்கு தடை வித்தித்துள்ளதாம். இந்த இரு நாடுகளின் அரசும் ஒரு புறம் அடித்துக் கொண்டிருக்க, ஒரு புறம் இந்த இரு நாடுகளில் உள்ள மறு சுழற்சி நிறுவனங்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனவாம்.

ஏன் கேட்கிறீங்களா? இனி மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விட்டால் உள் நாட்டிலேயே அதிக ஸ்கிராப்புகள் விலை மலிவா கிடைக்குமேகிற சந்தோஷத்தில் தான். ஒரு புறம் அமெரிக்கா சீனா உறவு பாதிக்கப்பட்டாலும், மறுபுறம் உள்நாட்டு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்துள்ளன இரு நாடுகளும்.

இதனால் துவண்டு போன பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியும் என்று இரு நாடுகளும் அந்தந்த நாடுகளில் உள்ள தொழிற் சாலைகளையும், நிறுவனங்களையும் நம்பியுள்ளன.

எப்படியோ ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டாம் என்பார்கள், ஆனால் இங்கு இரு நாடுகளும் ரெண்டு பட்டு அல்லவா இருக்கு. இது அங்குள்ள நிறுவனங்களுக்கு கொண்டாட்டம் தானே.

அதிலும் குறிப்பாக அமெரிக்க காகித ஆலைகளுக்கு மலிவான ஸ்க்ராப் கிடைக்கும் என்பதில் ஒரு அலாதியான கொண்டாட்டம் தானாம். ஆசை தீர இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மேலும் நிறுவனத்தை விரிவடைய இந்த வாய்ப்பு உதவும் என்கிறதாம் இந்த பேப்பர் நிறுவனங்கள்.

 

இந்தியர்கள் தான் கடைசி.. தகவல்கள் திருடப்படுதேங்கிற கவலை 38% பேருக்குதான்.. ஜெர்மனி ஆய்வில் பகீர்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் முதலீட்டாளர்களுக்கு ஒரு திருப்பமாகவே பார்க்கின்றனராம் அமெரிக்கர்கள். ஏனெனில் முதலீட்டாளர்கள் உற்பத்தியை இன்னும் அதிகரிக்க தேவையான மூலப் பொருள்கள், பேப்பர்கள், பாட்டில்கள் உதவும் என்றும் தெரிவிக்கின்றனவாம்.

இது அமெரிக்காவில் "மறுசுழற்சி செய்வதற்கு ஒரு நல்ல தருணம் இது" என்று வாஷிங்டனை மையமாகக் கொண்ட நிறுவனமான Local Self-Reliance நிறுவனத்தின் இணை நிறுவனர் நெயில் செல்த்மன் கூறியுள்ளராம். இது நகரங்களின் மறுசுழற்சி திட்டங்களை மேம்படுத்த உதவும் என்றும் கூறியுள்ளராம்.

உலகின் மிகப்பெரிய மற்சுழற்சி நகரமான சீனா தற்போது இறக்குமதியை தடை செய்துள்ளது அமெரிக்கா நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு. உலகின் மிகப்பெரிய காகிதம், பிளாஸ்டிக் மற்றும் பிற மறுசுழற்சிக்கான மிகப்பெரிய இலக்காக இருந்த சீனா, கடந்த ஜனவரி 2018 ல் இறக்குமதி கட்டுப்பாடுகளினால் கட்டப்பட்டது. இந்த நிலையில் சீனாவின் இந்த முடிவு இரு நாடுகளுக்குமே ஒரு இழப்பை கொடுத்தாலும் அது தற்காலிகமானது தான். இது உள்நாட்டு நிறுவனங்களுக்கு பெரிய வாய்ப்பாக இருக்கும் என்கிறார்கள் நிபுனர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China's ban on scrap imports its boom to US recycling plants

China's ban imports of wastepaper and plastic that has disrupted US recycling programs. But its big chance for US paper mills are expanding capacity to take of cheap scrap.
Story first published: Sunday, May 19, 2019, 10:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X