மூன்றாம் நபர் மோட்டார் காப்பீட்டு பிரீமியம் அதிகரிப்பு.. ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிவிப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : நான்தான் நிறுத்தி நிதானமாக வண்டி ஓட்டுகிறவனாச்சே... என்னோட வாகனத்துக்கு எதுக்கு இந்த இன்ஷூரன்ஸ்? அதுவும் மூன்றாம் நபர் மோட்டார் இன்ஷூரன்ஸ் என்று கேட்பவர்கள் இங்கு நிறைய உண்டு. இந்த எண்ணம் மிக மிக தவறானது.

 

நீங்கள் சாலையில் நிதானமாகச் செல்பவராக இருக்கலாம். ஆனால் எதிரே வருபவரும் பின்னால் வருபவரும் அப்படி இருப்பார்கள் என்று கூறி விட முடியாது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் முன்னால், பக்கவாட்டில் என அனைத்து திசைகளிலிருந்தும் வரும் வாகன ஓட்டிகளும் நிதானமாக வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இதனால் சாலையில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால், மோட்டார் இன்ஷூரன்ஸ் 200% அவசியம். அதிலும் மோட்டார் வாகன பாலிஸிகள் மிக அவசியம், சரி நம் வாகன பாதிப்புக்கு, அதாவது ஓன் டேமேஜ் பாலிசி இருந்தால் பத்தாத என்று கேட்பது புரிகிறது. நம் வாகனத் தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு என்ன செய்வது, அந்த மாதிரி சமயத்தில் தான் இந்த தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் கைகொடுக்கும்.

ஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க..! கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..!

இதுவரை பழைய பிரீமிய திட்டம்

இதுவரை பழைய பிரீமிய திட்டம்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் நடப்பு நிதியாண்டில் மூன்றாம் நபர் மோட்டார் காப்பீட்டு பிரீமியம் விகிதம் தற்போது தான் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய பிரீமியம் விகிதங்கள் பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தாலும், இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மெண்ட் ஆணையம் (ஐஆர்டிஏஐ) கடந்த ஆண்டு பீரிமிய திட்டத்தினயே இதுவரை தொடர அனுமதித்தது.

தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் புதிய விகிதங்கள்

தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் புதிய விகிதங்கள்

ஐ.ஆர்.டீ.டி.ஐ தற்போது வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பின் படி, காலாவதியாகும் மூன்றாம் தரப்பினரின் கார்களை பிரீமியம் விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது எனவும், இந்த பிரீமியம் உயர்வு மற்ற வகை வாகனங்களுக்கு மாறுபடும் என்றும் அறிவித்துள்ளது.

சிசி திறன்களுக்கு ஏற்ப பிரிமீயம் அதிகரிப்பு
 

சிசி திறன்களுக்கு ஏற்ப பிரிமீயம் அதிகரிப்பு

குறிப்பாக 1,000 சிசிக்கு கீழே உள்ள கார்கள் பிரீமியம், தற்போதுள்ள ரூ.1,850ல் இருந்து 14.5% அதிகரித்து ரூ.2,120 ஆக உயரும் எனவும் அறிவித்துள்ளது. இதே 1,000 சிசிக்கும்- 1,500 சிசிக்கும் இடையில் உள்ள கார்களுக்கு, ரூ.2,863-லிருந்து அதிகரிக்கப்பட்டு பிரீமியம் ரூ.3,300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆடம்பர கார்களுக்கு பீரிமியம் அதிகரிப்பு இல்லை

ஆடம்பர கார்களுக்கு பீரிமியம் அதிகரிப்பு இல்லை

இருப்பினும் இந்த பீரிமியம் அதிகரிப்பு 1,500 க்கும் மேற்பட்ட சிசி திறன் கொண்ட ஆடம்பர கார்களுக்கு இந்த பீரிமியம் தற்போதுள்ள ₹7,890-லிருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லையாம்.

இரண்டு சக்கர வாகன பீரிமியமும் அதிகரிப்பு

இரண்டு சக்கர வாகன பீரிமியமும் அதிகரிப்பு

75 சிசிக்கு கீழே இரண்டு சக்கர வாகனங்களுக்கான முன்மொழியப்பட்ட புதிய தேர்டு பார்ட்டி பிரீமியம்₹ 482 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முன்னர் ரூ.427ஆக இருந்தது.

புதிய வாகனங்களுக்கு மாற்றம் இல்லை

புதிய வாகனங்களுக்கு மாற்றம் இல்லை

அதே நேரத்தில் புதிய கார்கள் மற்றும் புதிய இரு சக்கர வாகனங்களுக்கான ஐந்து வருடக் கொள்கை, மூன்று ஆண்டுகால கொள்கையை ஒற்றை பிரீமியத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லையாம்.

மின்சார வாகனங்களுக்கு பிரிமியம் 15% தள்ளுபடி

மின்சார வாகனங்களுக்கு பிரிமியம் 15% தள்ளுபடி

இதே மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், மின்சார தனியார் கார்கள் மற்றும் மின்சார இரு சக்கர வாகனங்கள் பிரீமியத்தில் 15 சதவிகித விசேஷ தள்ளுபடி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் மின் ரிக் ஷாக்களுக்கான பிரீமியத்தில் உயர்வு இல்லை என்றும் கூறியுள்ளது.

மற்ற வாகனங்களுக்கு அதிகரிப்பு இப்போது இல்லை

மற்ற வாகனங்களுக்கு அதிகரிப்பு இப்போது இல்லை

எனினும் டாக்சிகள், பேருந்துகள், லாரிகள் மற்றும் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு பிரீமியம் வேறுபட்ட விகிதங்களில் அதிகரிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு வருகிறதாம். ஆக வரும் மே 29-ம் தேதிக்கு முன்னர் பல கருத்துகளை ஆய்வு செய்து, ஜூன் 1 முதல் புதிய விகிதங்கள் வரலாம் என்றும் கருதப்படுகிறது.

எதற்கு இந்த மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ்

எதற்கு இந்த மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ்

நம்முடைய வாகனம் மோதி, யார் என்றே தெரியாத ஒரு மூன்றாம் நபர் காயமடைந்தாலோ, உயிரிழந்தாலோ அல்லது அவர்கள் ஓட்டி வந்த வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டாலோ இழப்பீடு கொடுப்பது நமது கடமை. எனினும் இந்த இழப்பீட்டை வழங்க பலருக்கு வசதி இருக்காது. சிலருக்கு வசதியே இருந்தாலும் கொடுக்க மனம் இருக்காது. இதுபோன்ற நிலை யில் கை கொடுப்பதுதான் மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் (Third Party Insurance). இதன்படி, பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனமே இழப்பீட்டை வழங்கி விடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: irda ஐஆர்டிஏ
English summary

IRDAI proposes higher third- party premium for cars, two wheelers

Third-party motor insurance premium rates are go up in the current financial year.
Story first published: Tuesday, May 21, 2019, 13:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X