ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் இனி ஈஸி - புதிய மாதிரி படிவம் ரிலீஸ் செய் ஆணையம்

ஜிஎஸ்டி ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ள மாதிரி ரிட்டன் படிவங்களை பதிவிறக்கம் செய்து பரிசோதனை செய்து பழகிக்கொள்ளலாம். புதிய படிவம் வரும் ஜூலை முதல் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு என்னும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் எளிமைப்படுத்தப்பட்ட கொள்முதல், விற்பனை மற்றும் நிகர லாபம் என அனைத்து வர்த்தக விவரங்களையும் உள்ளடக்கிய மாதிரி படிவத்தை ஜிஎஸ்டி ஆணையம் வெளியிட்டுள்ளது.

 

சோதனை அடிப்படையில் மாதிரி ரிட்டன் படிவத்தை வர்த்தர்களும் தொழில் துறையினரும் பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தி பழக்கப்படுத்திக்கொள்ளுமாறு ஜிஎஸ்டி ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. வரும் ஜூலை முதல் புதிய ரிட்டன் படிவம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய புதிய மாதிரி படிவம் - என்னென்ன சிறப்பம்சங்கள்

சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொள்முதல், விற்பனை மற்றும் உள்ளீட்டு வரிப்பயன்பாடு போக மீதமுள்ள நிகர விற்பனை வரியை செலுத்துவதற்கு என ஜிஎஸ்டி-ஆர்1, ஜிஎஸ்டி-ஆர்2 மற்றும் ஜிஎஸ்டி-ஆர்3பி ஆகிய படிவங்கள் பின்னர் படிப்படியாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

ஜிஎஸ்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட ரிட்டன் தாக்கலுக்கான படிவங்கள் அனைத்தும் குழப்பமான முறையில் இருந்ததால் வர்த்தகர்களும் தொழில்துறையினரும் தங்களின் மாதாந்திர ரிட்டன் படிவங்களை தாக்கல் செய்வதை தள்ளிப்போட்டும், தவிர்த்தும் வந்தனர். இதனால் மாதாந்திர வரி வருவாய் திட்டமிட்ட இலக்கை எட்டுவதில் தேக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து வர்த்தகர்களும் தொழில் துறையினரும் ஜிஎஸ்டி மாதாந்திர ரிட்டன் படிவங்களை வாட் வரிவிதிப்பு முறையில் உள்ளது போல் எளிதான முறையில் அமைத்துத் தரும்படி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் கோரிக்கை விடுத்தனர். அவரும் ஜிஎஸ்டி ரிட்டன் படிவங்களை விரைவில் எளிய முறையில் மாற்றி அமல்படுத்துவதாக உறுதியளித்திருந்தார்.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி அளித்த வாக்குறுதியின் படி கடந்த மாதம் முதல் மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி-ஆர்1 (GSTR-1 Normal), ஜிஎஸ்டி-ஆர்2 (GSTR-2 Sahaj) மற்றும் ஜிஎஸ்டி-ஆர்3 (GSTR-3 Sugam) என மூன்றுவிதமான மாதாந்திர ஜிஎஸ்டி படிவங்கள் அமலுக்கு வந்தன. இவற்றில் மாதாந்திர படிவத்திற்கென தனியாகவும், காலாண்டுக்கென தனியாகவும் ரூ.5 கோடிக்கு மேற்பட்ட விற்றுமுதல் உள்ளவர்களுக்கென தனியாகவும் ஜிஸ்டி படிவங்கள் அமல்படுத்தப்பட்டன.

ஆனால் இதிலும் குழப்பம் நிலவுவதாக வர்த்தகர்களும் தொழில் துறையினரும் நிதயமைச்சரிடம் குறைபட்டுக்கொண்டனர். அதோடு வாட் வரி விதிப்பு முறையில் இருந்தது போல் எளிய முறையில் அனைத்து விவரங்களும் ஒரே படிவத்தில் வருமாறு மாற்றியமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

நிதியமைச்சரும் லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர் இதுபற்றி விவாதித்து விரைவில் புதிய முறையில் எளிய வடிவத்தில் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் படிவங்களை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். அதோடு புதிய படிவத்தை எளிய முறையில் மாற்றுவதற்கு உரிய ஆலோசனைகளை வழங்குமாறு வரி ஆலோசகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

வரி ஆலோசகர்களும் தங்களின் ஆலோசனைகளை ஜிஎஸ்டி ஆணையத்திற்கு தெரியப்படுத்தினர். இதையடுத்து எளிய முறையில் புதிய படிவங்கள் உருவாக்கப்பட்டன. இது வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஜிஎஸ்டி ஆணையமும் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இதன்படி விற்பனைக்கான ஜிஎஸ்டி-ஆர்1 படிவத்தில், கொள்முதலுக்கான இணைப்பு படிவத்தில் (GST Anx-2) கொள்முதலுக்கான விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும். விற்பனைக்கான இணைப்பு படிவத்தில் (GST Anx-1) அனைத்து விற்பனை விவரங்களையும் தெரிவிக்கவேண்டும்.

மேலும் ஜிஎஸ்டியில் பதிவு செய்யாத வர்த்தகர்களுக்கு செய்யும் விற்பனை (B2C) அனைத்தையும் சகஜ்(Sahaj) என்னும் படிவத்தில் தாக்கல் செய்யவேண்டும். இதில் கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிபோக நிகர வரி ஆகிய அனைத்தும் இதில் அடங்கிவிடும்.

அதேபோல் ஜிஎஸ்டியில் பதிவு செய்த வர்த்தகர்கள் தங்களின் வர்த்தக பரிவர்த்தனையை பதிவு செய்த வர்த்தகர்களுடனும் (B2B) பதிவு செய்யாத வர்த்தகர்களுடனும் (B2C) மேற்கொள்ளும்போது சுகம் (Sugam) என்னும் படிவத்தை தேர்வு செய்து அதில் தங்களின் வர்த்தக விவரங்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும்.

ஜிஎஸ்டி ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ள மாதிரி ரிட்டன் படிவங்களை பதிவிறக்கம் செய்து பரிசோதனை செய்து பழகிக்கொள்ளலாம். புதிய படிவம் வரும் ஜூலை முதல் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Japan case filed in WTO against India’s imposition of Import Duty

The case filed by Japan at the WTO against India’s import duties on certain telecommunication products including cell phone products..
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X