சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : நமக்கெல்லாம் விடுமுறை நாள் என்றால் குதூகலமே. அதுவும் கோடைகால விடுமுறையா ஏதாவது சில்லென்ற இடத்திற்கு சென்று வரலாமா? என்ற எண்ணமே பலருக்கும் இருக்கும். அதுவும் குறைந்த கட்டணத்தில் விமான பயணம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.

 

அதிலும் இந்த கோடை விடுமுறையிலாவது விமானத்தில் செல்ல வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கும். அதை நிறைவேற்றுவதை போல கோஏர் நிறுவனம் ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது. அதுவும் நடுத்தர மக்களுக்கு இந்த சலுகை மிக ஏற்றதாக இருக்கும் என்றும் கோஏர் நிறுவனம் அறிவித்துள்ளதாம்.

சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை

அடிக்கிற வெயிலில் சூடான சூரியனுக்கு இதமாக இந்த சலுகை அமைந்துள்ளது. ஆமாங்க இந்த வெளுத்து வாங்கும் வெயிலிருந்து தப்பித்து பல மாநிலங்களுக்கு செல்ல இது ஏதுவாக அமையும் என்பது இந்த நிறுவனத்தின் கருத்து.

வாங்க மோடி.. நாங்க ரெடி.. கடனை அள்ளி அள்ளி கொடுக்க காத்திருக்கும் ஐஎம்எப்!

இதனால் மற்ற மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல நடுத்தர வர்க்க மக்கள் இந்த உள்நாட்டு விமான சலுகையை அதிகமாகப் பயன்படுத்த முடியும் என்கிறது கோர் ஏர் நிறுவனம்.

அதுவும் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு அடுத்து வரும் 1 மில்லியன் டிக்கெட்களுக்கே இந்த ஆஃபர் என அறிவித்துள்ளது இந்த நிறுவனம். அதிலும் இந்த ஒரு மில்லியன் டிக்கெட்களின் டிக்கெட் விலை 899 ரூபாயிலிருந்து ஆரம்பமாம்.

சில்லென்று சுற்றுலா செல்ல ரூ.899 முதல் டிக்கெட்.. கோஏர் நிறுவனம் அதிரடி சலுகை

சரி இந்த டிக்கெட்கள வெச்சு எப்ப டிராவல் பண்ணாலன்னு நினைக்கிறீங்களா? அடுத்து வரும் ஜீன் 15 முதல் டிசம்பர் 31 வரை இந்த உள் நாட்டு விமான டிக்கெட்களை பயன்படுத்திக் கொள்ளலாமாங்க!.

அதோடு பயணிகளைக் கவரவதற்காக இந்த டிக்கெட்களை ஜீன் 15லிருந்து டிசம்பர் 31 தேதிக்குள், என்ன தேதி, நேரம், டிக்கெட் விலை முதலியவற்றை பயணிகளே தேர்தெடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது கோஏர் நிறுவனம்.

 

அதோடு இன்னும் பல பல கேஸ் பேக் ஆஃபர்களை கோர் ஏர் நிறுவனம் கொடுத்துள்ளது. குறிப்பாக பேடிஎம் வாலட் மூலமாக டிக்கெட்களுக்கு பணம் செலுத்துபவர்களுக்கு கேஸ்பேக் சலுகையும் உண்டாம், அதாவது குறைந்தபட்சம் 2499 ரூபாய் வரை செலுத்தும் போது 500 ரூபாய் வரையில் கேஸ்பேக் ஆஃபர் கிடைக்குமாம்.

இதே மிந்திரா ஆப் மற்றும் இணையதளங்களில் பதிவு செய்பவர்களுக்கு, அதுவும் குறைந்த பட்சம் 1999 ரூபாய்க்கு பதிவு செய்பவர்களுக்கு 10 சதவிகிதம் வரையில் சலுகை கிடைக்கும் என்றும், இந்த சலுகை வரும் ஆகஸ்ட் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவித்துள்ளது இந்த நிறுவனம்.

இதுவே FabGoAir கிடைக்கும் கூப்பனில் 25 சதவிகித சலுகையும் உண்டாம். இது ஏற்கனவே கிடைக்கும் சலுகையுடன் இந்த 25% சேரும் போது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் டிக்கெட் விலை குறையலாம் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளதாம்.

மும்பையை அடித்தளமாக கொண்ட இந்த கோஏர் விமான நிறுவனம் ஒரு நாளைக்கு 270 விமானங்களை இயக்கி வருகிறதாம். அதில் 24 உள்நாட்டு விமானங்களும், 4 வெளிநாட்டு விமானங்களும் அடங்குமாம்.

இவ்வாறு தனியார் விமான நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஆஃபர் வாரி வழங்கி வருகின்றன. இதனால் மக்கள் திட்டமிடப்பட்ட சுற்றுலாக்களுக்கு இந்த நேரத்தில் புக் செய்து கொள்ளலாம். இதனால் கட்டணமும் மிகக் குறையும். ஆக இந்த ஆஃபர் மழையில் ஒரே என் ஜாய்தான் போங்க.

ஒரு காலத்தில் விமானத்தில் செல்வதை கனவாக கொண்டிருந்த நடுத்தர மக்கள் இது போன்ற சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இதன் மூலம் அடிக்கடி விமான பயணம் செய்யவும் முடியும் என்கிறதாம் இந்த நிறுவனம்.

எனினும் மக்கள் பலரது குறை என்னவெனில் பள்ளிக் குழந்தைகளின் விடுமுறைகாலம் முடிந்து இந்த ஆஃபர்களை அறிவித்துள்ளது கோஏர் நிறுவனம். இதனால் ஒரு குடும்பத்தில் அனைவரும் சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் இது போன்ற சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதுதானாம். அடுத்த முறையாச்சும் லீவு இருக்குறப்ப கொடுங்க பாஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: goair கோஏர்
English summary

GoAir offers for fares starting at Rs.899

GoAir announced upto one million seats to fares starting at Rs.899 across in domestic.
Story first published: Saturday, May 25, 2019, 18:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X