ஸாரி மக்களே.. தப்பு நடந்து போச்சு.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஜி சூட் சேவையில் பாஸ்வேர்ட் பாதுகாப்பு இல்லாமல் இருந்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

 

2006 ம் ஆண்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கூகுளின் ஜி சூட் என்பது கூகுளின் பெரும்பாலான தயாரிப்புகளான ஜி மெயில், கேலண்டர், கூகுள் டிரைவ், கூகுள் டாக்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இது வியாபார ரீதியாகவும் பயன்படுத்த்தப் பட்டு வருகிறது. இதை பயன்படுத்திய பயனர்கள் இதில் பாஸ்வேர்ட் சம்பந்தமாக புகார் கூறியுள்ளனர்.

ஸாரி மக்களே.. தப்பு நடந்து போச்சு..  மன்னிப்பு கேட்ட கூகுள்!

அதாவது இணையதளங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்தும்போது அது மற்றவர்கள் பார்க்க முடியாதபடி மறைக்கப்பட்டு விடும். ஆனால் ஜி சூட்டை பயன்படுத்தும் பயனர்களின் பாஸ்வேர்டுகள் பிறர் பார்க்கும்படி இருந்தது என்று குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த குறைபாடு பலரது கணக்குகளை ஹேக் செய்ய ஹேக்கர்களுக்கு மிக எளிதாக அமைந்து விடும். இது ஒருபுறம் என்றால் பயனர்களின் பாஸ்வேர்டுகள் கூகுளின் அமைப்புகளில் சேமிக்கப் பட்டுள்ளது என்ற குற்றசாட்டும் கூறப்பட்டு வருகிறது.

மோடி அலையால் உச்சம் கண்ட சந்தைகள்.. காளையின் பிடியில் இந்தியா

இந்த நிலையில் தங்களது பயனர்கள் அனைவரும் தங்களது பாஸ்வேர்டுகளை மாற்றுவதை உறுதி செய்ய கூகுள் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளது. இது குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜி சூட் பயனர்களின் பாஸ்வேர்டுகள் மறைக்கப்படாமல் உள்ளது குறித்து அறிவிப்பு வெளியிடப் பட்டு இருந்ததாகவும் இது ஜி சூட் பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் இல்லை என்றும் குறிப்பாக இலவச கணக்குகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்றும் கூகுள் கூறியுள்ளது. இருந்தாலும் வர்த்தக பயன்பாட்டுக்கு பாதிப்பு உள்ளது என்றும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

அதோடு பாதிக்கப்பட்ட பயனர்கள் அனைவரும் தங்களது பாஸ்வேர்டுகளை உடனடியாக மாற்றி விடுமாறு கூகுள் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்னரும் பொதுமக்கள் பயன்படுத்தும் ஆன்ட்ராய்ட் செல்போன்களில் ஆதார் உதவி எண் தாமாக பதிவானதற்கு கூகுள் மன்னிப்புக் கேட்டது. ஆதார் ஆணையத்தின் உதவி அலைபேசி எண் தாமாக செல் போன்களில் பதிவானதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்ஃபோன் பயனர்கள் புகார் தெரிவித்தனர்.

 

ஆதார் ஆணையத்தின் உதவி எண்ணை தங்களது அனுமதி இல்லாமல் தங்கள் செல்போன்களில் பதிவிட முடிகிறது என்றால் எங்களது செயல்களை கண்காணித்து, தகவல்களை சேகரிக்க முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற வகையில் பயனர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஆதார் ஆணையம் பொதுச் சேவை எண்கள் பட்டியலில் தங்களது எண்களை இணைக்குமாறு எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திடமோ அல்லது செல் தயாரிப்பு நிறுவனத்திடமோ வலியுறுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆதார் உதவி எண்கள் ஆன்ட்ராய்டு மொபைல் போன்களில் பதிவானதற்கு ஆன்ட்ராய்டு இயங்குதளமே காரணம் என்று கூகுள் விளக்கம் அளித்துள்ளது.

இது ஆன்ட்ராய்டு இயங்கு தளம் ஸ்டெப்அப் ஜிசார்ட்டில் தவறுதலாக கோடிங் செய்யப்பட்டுவிட்டது என்றும் இந்த கோடிங் நீக்கப்படாததால், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஆன்டிராய்ட் செல்போன்களில் இவ்விரு எண்களும் தாமாகவே பதிவாகிவிடுகிறது என்றும் கூகுள் விளக்கம் அளித்தது. அதோடு ஆண்டிராய்டு பயனர்களிடம் மன்னிப்பும் கோரியது கூகுள். இப்போது மீண்டும் ஜி சூட் பாஸ்வேர்ட் பாதுகாப்பின்மைக்காக மன்னிப்பு கேட்டுள்ளது கூகுள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

google has apologized to its users

Google has apologized to its users
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X