குறைந்து வரும் கல்விக்கடன்கள்.. வாராக்கடன் அதிகரிப்பால் கல்விக்கடன் அளிக்க தயங்கும் வங்கிகள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : இன்றைய நாளில் கல்வி கடன் என்பது பலரின் கனவை நனவாக்கும் ஒரு அஸ்திரமாகவே உள்ளது. கல்விக்கு பணம் என்பது ஒரு பொருட்டல்ல, அதையும் தாண்டி மாணவர்கள் சாதிக்கிறார்கள் எனில் அதற்கு ஒரு காரணம் கல்விக்கடனும் கூட. அதிலும் எந்தவொரு வசதியிலும் இல்லாத அடித்தட்டு மக்களுக்கு இது ஒரு சிறந்த ஆயுதமே.

ஏன் ஒரு நாட்டின் ஆணிவேரையே அசைத்து பார்க்கும் வல்லமை இந்த கல்விக்கடனுக்கு உண்டு எனவே கூறலாம். இத்தகைய கல்விக் கடன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது தான் வருதப்படத்தக்க செய்தி.

அதிலும் 2015-ம் ஆண்டு இந்தியாவில் 3.34 லட்சம் மாணவர்கள் கல்வி கடன் வாங்கியிருந்தனராம். இதுவே 2019-ம் ஆண்டு 2.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே கல்விக் கடனை பெற்றுள்ளனராம்.

 இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள் இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்

குறைந்து வரும் கல்விக்கடன்கள்

குறைந்து வரும் கல்விக்கடன்கள்

இவ்வாறு நாட்டில் படிப்படியாக கல்விக் கடன் வழங்குவது குறைந்து கொண்டே வருவதற்கு முக்கிய காரணம், கடனை வாங்கும் பலர் அதை திருப்பி அளிக்காததே என்றும் கூறப்படுகிறது. கல்விக் கடன் வழங்குவது குறைந்து வரும் இதே நேரத்தில் தான் வாராக்கடனும் 12.5% அதிகரித்துள்ளதாம்.

குறைந்து வரும் கல்விக்கடன் எண்ணிக்கை

குறைந்து வரும் கல்விக்கடன் எண்ணிக்கை

கடந்த மார்ச் 2015ல் 3.34 லட்சங்களாக இருந்த கல்விக்கடன்களின் எண்ணிக்கை, மார்ச்2016ல் 3.12 லட்சங்களாக குறைந்துள்ளது. இதே மார்ச்2017ல் 2.92 லட்சங்களாக குறைந்தது. இதுவே 2018ல் 2.74 லட்சங்களாகவும், 2019ல் 2.5 லட்சங்களாகவும் கல்விக்கடன் எண்னிக்கை படிப்படியாக குறைந்து வருவது கவனிக்கதக்கது.

எண்ணிக்கை தான் குறைவு தொகை அதிகம் தான்

எண்ணிக்கை தான் குறைவு தொகை அதிகம் தான்

எனினும் கல்விக்காக கடன் வழங்கும் எண்ணிக்கை குறைந்து வந்த போதிலும், கடன் வழங்கப்பட்ட தொகை என்னவோ அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக கடந்த 2016-ம் ஆண்டு 16,800 கோடி ரூபாய்க் கடன் வழங்கப்பட்டிருந்தது. இதுவே கடந்த சில ஆண்டுகளாக கல்விக் கடன் வழங்குவது குறைந்த போதிலும், 22,500 கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளதாம்.

நாளுக்கு நாள் வாராக்கடன் அதிகரிப்பு

நாளுக்கு நாள் வாராக்கடன் அதிகரிப்பு

கடந்த மார்ச் 2015ல் 7% இருந்த வாரக்கடன், மார்ச் 2016ல் 8.7%மாகவும், 2017ல் 10.2% மாகவும், இதுவே 2018ல் 12 சதவிகிதமாகவும், குறிப்பாக மார்ச் 2019ல் 12.5%மாகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாராக்கடன் என்பது, பின்னால் வரும் மாணவர்களுக்கு மிக பிரச்சனையே வழங்கி வருகிறது. ஆமாங்க கல்விக்கடனையே நம்பியுள்ள மாணவர்களுக்கு மிக மோசமான பிரச்சனையே வழிவகுக்கும்.

அதிக கடன் தொகைக்கே முன்னுரிமை

அதிக கடன் தொகைக்கே முன்னுரிமை

தற்போதைய காலத்தில் கல்வி நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் கல்வி கட்டணம் உயர்வு, அதோடு அதிக மதிப்புடைய கடன்களை மட்டுமே வங்கிகள் அளிக்க முன்வருவதும் கூட ஒரு காரணமே என்கிறது இந்த ஆய்வறிக்கைகள்.

சராசரி கல்விக்கடன் மதிப்பு உயர்வு

சராசரி கல்விக்கடன் மதிப்பு உயர்வு

இந்த நிலையில் கல்விக் கடன் அளிப்பது குறைந்துள்ள இதே நேரத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் கடனைத் திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கையும் 34 லட்சத்திலிருந்து 27.8 லட்சமாகக் குறைந்துள்ளதாம். அதே நேரத்தில் சராசரி கல்விக் கடனின் மதிப்பு ரூ.5.3 லட்சத்திலிருந்து 9 லட்ச ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாம். குறிப்பாக கடந்த மார்ச்2015ல் சராசரி கடன் அளவு 5.3% மாக இருந்தது, 2016ல் 5.9%மாகவும், 2017ல் 6.9%மாகவும், மார்ச் 2018ல் 7.8%மாகவும், இதுவே கடந்த மார்ச்2019ல் அதிகபட்சமாக 9.02% மாகவும் இருந்துள்ளது. நாளுக்கு நாள் கல்விக்கடன் அளிப்பது குறைந்து வரும் நிலையிலும் அளிக்கப்படும் தொகை அதிகரித்தே வருவது குறிப்பிடத்தக்கது.

செக்யூரிட்டியாக அடமானம் வைக்க எதுவுமில்லை

செக்யூரிட்டியாக அடமானம் வைக்க எதுவுமில்லை

ஏன் அதிக மதிப்புடைய கடன்களுக்கு மட்டும் வங்கிகள் முன்னுரிமை வழங்குகின்றன என்று பார்க்கும் போது, குறைந்த கல்விகடன் களுக்காக விண்ணப்பிப்பவர்களிடம் அடமானம் வைக்க ஏதும் இருப்பதில்லையாம், ஆமாங்க செக்யூரிட்டிக்காக எதுவும் இருப்பதில்லையாம். ஆக அதுபோன்ற பயணாளர்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுத்து விடுகின்றனவாம். என்ன கொடுமையடா இது. செக்யூரிட்டி இல்ல, அதுனால லோனும் இல்லையாம்.

சரியான திறன் இல்லாததால் வேலைக்கு செல்வதில்லை

சரியான திறன் இல்லாததால் வேலைக்கு செல்வதில்லை

அதோடு இவ்வாறு அடமானம் ஏதுமில்லாமல் கடன் வழங்கும் போது அதை திரும்பப் பெறுவதிலும் சிக்கல் ஏற்படுகிறதாம். அதோடு இப்படி வழங்கப்படும் கடன்கள் பெரும்பாலானவை வாராக் கடன்களாக உள்ளதாகவும் கூறுகின்றனர் வங்கியாளர்கள். . அதுமட்டுமல்லாமல் கல்வி கடன் பெறும் மாணவர்கள் சரியான திறன் இல்லாததால் வேலைக்குச் செல்லாமல் உள்ளதும் இப்படி கல்விக் கடன் பெருகுவதற்கான காரணங்களாக உள்ளது வங்கி அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறதாம்.

ஆவணக் கொள்கைகளில் சிக்கும் பொதுறை வங்கிகள்

ஆவணக் கொள்கைகளில் சிக்கும் பொதுறை வங்கிகள்

தனியார் வங்கிகளில் இந்த கல்வி கடன்களை வழங்கும் போது அதற்காக செக்யூரிட்டிகளை சரியாக வாங்கிக் கொள்கின்றன. அதனால் எப்படியேனும் வசூல் செய்து விடுகின்றன. அதனால் யாரும் அதிகமாக தனியார் வங்கிகளை அணுகுவதில்லை. ஆனால் அரசு சார்ந்த பொதுத்துறை வங்கிகள் நடைமுறையும், வங்கிக் கொள்கைகளையும் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளன. இந்த நிலையில் ரூ.4 லட்சம் வரை கடன் வாங்குபவர்களிடத்தில் எந்தவித கொலட்ரால் செக்யூரிட்டியும் வாங்க முடிவதில்லை. பிற்காலத்தில் இது போன்ற தொகைகளே வாராக்கடன்களாக மாறுகின்றன என்கிறதாம் பொதுத்துறை வங்கிகள்.

பொதுத்துறை வங்கிகளில் முக்கியத்துவம்

பொதுத்துறை வங்கிகளில் முக்கியத்துவம்

இது குறித்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2018ல் மட்டும் கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் பொதுத்துறை வங்கிகளிலேயே பெற்றுள்ளனர். அதோடு தனியார் வங்கிகளில் கல்விக்கடன் என்பது மிக மிகக் குறைவே என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை

சரியான வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை

இது வங்கிகள் வெளியிட்டுள்ள வங்கிகள் கூறுகையில், மாணவர்கள் படித்து முடித்தாலும் சரியான வேலை வாய்ப்பு அமைவதில்லை. அதே நேரத்தில் தனியார் மையமாகி வரும் கல்வி மற்றும் குறைவான வேலை வாய்ப்பு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளன. அதோடு குறைந்த திறனையுடைய மாணவர்களை ஊக்குவிக்காமல் அட்மிஷன் கிடைத்தால் போதும் என நினைத்து பக்குவப்படுத்தாமல் விடும் தனியார் கல்வி நிறுவனங்கள், தற்போதுள்ள நிலையில் நன்கு படித்தவர்களுக்கே வேலைக்கு திண்டாட்டமாக உள்ள நிலையில், இதுபோன்ற சராசரி மாணவர்களுக்கு வேலைப்பாடு திண்டாட்டமாகவே உள்ளது. ஆக அவர்கள் சரியான வேலைக்கும் செல்வதில்லை, அதோடு கல்விக்கடனையும் கட்டுவதில்லை என்கிறார் சிட்டி பேங்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்.காமக்கோடி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: educational loan
English summary

Education loans down in 25% to last four years

India’s education loan down 25% in past four years, particularly down year to year in nmber of loans down.
Story first published: Sunday, May 26, 2019, 10:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X