மோடி முதல் எடப்பாடி வரை என்ன சம்பளம் தெரியுமா.. தெலுங்கானாவில் தான் அதிக சம்பளம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை : உங்களுக்கு தெரியுமா? வெளி நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தான் எம்.எல்.ஏகளுக்கு அதிகப்படியான சம்பளமாம். அதிலும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் எம்.எல்.ஏக்களின் சம்பளம் 1100% வரை உயர்ந்துள்ளதாம்.

 

இதுவே அதிக சம்பளம் பெறும் முதல்வர்களின் பட்டியலில் தெலுங்கானாதான் முதலிடமாம். அட ஆமா அப்பு ரூ.4.21 லட்சம் தான் சம்பளமாம். எனினும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் நம்ம பிரதமர் மோடியின் சம்பளம் ரூ.1,60,000 மட்டும் தானாம்.

இவ்வாறு எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் வழங்குவதில் தெலுங்கானா மாநிலம் தான் முதலிடமாம். அதுவும் ரூ. 2,50,000 சம்பளமாம். இதுவே கடைசி இடத்தில் திரிபுரா மற்றும் மேகாலயா எம்.எல்.ஏக்களுக்கு ரூ.20,000 மட்டுமே சம்பளமாம். குறிப்பாக தமிழகத்தில் கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 1.05 லட்சம் ரூபாயாம். இதே முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் சம்பளம் 2,05,000 ரூபாயாகும்.

விஜய் மல்லையாவுக்கு செக் வைத்த லண்டன்.. 5 மில்லியனைக் கட்டு.. 28 நாள் கெடுவில் மல்லையா

தமிழக எம்.எல்.ஏல்களின் சம்பளம்

தமிழக எம்.எல்.ஏல்களின் சம்பளம்

அடிப்படை ஊதியம் மாதம் 30,000 ரூபாயாம். இதே இழப்பீடு தொகையாக 10,000 ரூபாயும், தொலைப்பேசி பில்லுக்காக 7,500 ரூபாயும், தொகுதிக்கு 25,000 ரூபாயும், தபால் செலவாக மாதம் 2,500 ரூபாயும், ஒருங்கிணைந்த நிதியாக மாதம் 5000 ரூபாயும், இதே வாகன அலவன்ஸாக 25,000 ரூபாயும் தரப்படுகிறதாம்.

சந்திப்புக்கு வந்தால் ரூ.500

சந்திப்புக்கு வந்தால் ரூ.500

தற்போதைய நிலையில் ஒரு எம்.எல்.ஏவின் சராசரி சம்பளம் 1 லட்சம் ரூபாயாம். அதோடு தினசரி படிகளும் உண்டாம். அதாவது ஒரு எம்.எல்.ஏ சட்டமன்றத்தின் அமர்வுகளிலோ அல்லது எந்த ஒரு அரசாங்கக் குழுவின் எந்த சந்திப்புக்கு வருகிறார்களோ அந்த மன்றத்தின் எந்தவொரு குழுவின் கூட்டங்களிலும், அரசாங்கத்தால் கூட்டப்படும் எந்த கூட்டத்திற்கும் வருகைக்காக ரூ500 நாள் ஒன்றுக்கு தரப்படுமாம்.

எம்.எல்.ஏக்களின் டிராவல் அலவன்ஸ்
 

எம்.எல்.ஏக்களின் டிராவல் அலவன்ஸ்

ஒரு எம்.எல்.ஏ பாராளுமன்ற குழுவிற்கோ அல்லது வேறு ஏதேனும் தொழில் நிமித்தமாக மற்ற இடங்களுக்கு செல்லும்போது அதற்காக தனியாக சலுகைகளும் உண்டாம். அதிலும் ரயிலின் மூலமாக செல்லும்போது அவருக்கு கிலோ மீட்டருக்கு 10 பைசா விகிதத்தில் தான் கட்டணம் இருக்குமாம். அதே ரோடு வழியாக செல்லும் போது, குறிப்பாக பேருந்துகள் செல்லும் ரோடு வழியாக செல்லும் போது 25 பைசாவும், இதுவே பேருந்து வழிகள் அல்லாத வழி தடத்தில் செல்லாமல், வேறு வழித்தடங்களில் செல்லும் போது 50 பைசாகவும் அலவன்ஸ் கிடைக்குமாம்.

எம்.எல்.ஏ அடையாள அட்டை

எம்.எல்.ஏ அடையாள அட்டை

ஒவ்வொரு எம்.எல்.ஏக்களுக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படுமாம். இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி தனியாகவோ அல்லது அவரோடு பயணம் செய்யவோ, ஒரு எம்.எல்.ஏவோ மனைவி அல்லது வேறு எந்த தோழரோடும் எந்த நேரத்திலும், எந்தப் பகுதியிலும், மாநிலத்திலும் போக்குவரத்தின் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

You know how much salary in our tamilnadu CM and MLAs

Tamil Nadu MLA salaries Rs.1.05 lakh per month.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X