இந்தியாவில் கோடீஸ்வரர்கள் ஆளும் மாநிலம் எது தெரியுமா.. படிங்கப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஒரு நாட்டை ஆளப்போகும் பிரதமரோ? முதல்வரோ? இப்படி யாரேனும் ஒருத்தர் பில்லியனாராகவோ? குரோர்பதியாகவோ? இருந்தால் அது எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் ஒரு மாநிலத்தில் உள்ள அத்துணை பேரும், அதாவது முதல்வர் முதல் எம்.எல்.ஏக்கள் வரை அனைவரும் குரோர்பதிகளாக இருந்தால் அது ஆச்சரியம் தானே. அட ஆமாப்பு ஆந்திரா மாநிலத்தில் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் 94% பேர் குரோர்பதிகளாம்.

நடந்த முடிந்த தேர்தலில் ஆந்திர சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் மொத்தம் 174 எம்.எல்.ஏக்களில் 163 பேர் கோடிஸ்வரர்கள் என்று இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் ஆளும் மாநிலம் எது தெரியுமா.. படிங்கப்பு..!

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த குரோர்பதிகளில் பெரும்பாலானவர்கள் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியை சேர்ந்தவர்களாம்.

அதிலும் ஒவ்வொரு சராசரி எம்எல்ஏவுக்கும் சுமார் 27.87 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருக்காம். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் 668 கோடி ரூபாய் சொத்துக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தில் இருக்காராம்.

இதில் 510 கோடி ரூபாய் சொத்துக்களுடன் தற்போது முதலமைச்சராக பதவியேற்கவுள்ள ஜெகன்மோகன் ரெட்டி 2 வது இடத்திலும் இருக்காங்களாம் அப்பு. எப்படியும் அடுத்த முறை இவர் முதல் இடத்துக்கு வந்திடலாம்.

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் ஆளும் மாநிலம் எது தெரியுமா.. படிங்கப்பு..!

எனினும் இதில் மிக குறைந்த சொத்துக்களுடன் இருப்பவர் ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியின் நாகுலபள்ளி தனலட்சுமி என்பவர் தானாம், வெறும் 6.75 லட்சம் ரூபாயுடன் கடைசி இடத்தில் உள்ளராம்.

இதில் மிக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த 2014 - 2019 வரையில் இருந்த எம்.எல்.ஏக்கள் 55 மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த எம்.எல்.ஏக்களின் சராசரியான சொத்துக்கள் மதிப்பு 29.97 கோடி ரூபாயில் இருந்து 47.99 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சொத்துல மட்டும் இல்ல அப்பு, நாங்க வீரத்திலும் கைதேர்ந்தவங்க, ஆமாப்பு ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியில் 96 பேரில் 86 பேர் குற்றவாளிகளாகவும், அதில் 50 பேர் மிக கடுமையான குற்றவாளிகளாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களாம்.

இதில் 112 தேர்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் (64% ) பட்டதாரி அல்லது அதற்கு மேல் தங்கள் கல்வித் தகுதியை அறிவித்துள்ளனராம். இதில் 59 (34%) எம்.எல்.ஏ.க்கள் 5 - 12 ஆம் வகுப்புகளுக்கு இடையில் அவர்களின் கல்வித் தகுதி உடையவர்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Andhra Pradesh MLAs 94% are crorepatis, but 32% in serious criminal cases

Andhra Pradesh current MLAs 94% are crorepatis. ADR found 163 out of the newly MLAs crorepatis. Particularly more peoples are in YSRCP Parties
Story first published: Tuesday, May 28, 2019, 18:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X